உள்ளடக்கத்துக்குச் செல்

யசஸ்வி ஜைஸ்வால்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
யசஸ்வி ஜைஸ்வால்
2019–20 Vவிஜய் அசாரே தொடரில்
தனிப்பட்ட தகவல்கள்
முழுப்பெயர்யசஸ்வி பூபேந்திர குமார் ஜைஸ்வால்
பிறப்பு28 திசம்பர் 2001 (2001-12-28) (அகவை 22)
சூரியவான், உத்தரப் பிரதேசம், இந்தியா[1]
உயரம்6 அ்டி[2]
மட்டையாட்ட நடைஇடக்கை
பந்துவீச்சு நடைவலக்கை நேர்ச்சுழல்
பங்குதுவக்க மட்டையாளர்
உள்ளூர் அணித் தரவுகள்
ஆண்டுகள்அணி
2018/19–2022/23மும்பைத் துடுப்பாட்ட அணி
2020–தற்போது வரைராஜஸ்தான் ராயல்ஸ் (squad no. 19)
முதது அறிமுகம்7 சனவரி 2019 மும்பை v சத்தீசுகர் துடுப்பாட்ட அணி
பஅது அறிமுகம்20 செப்தம்பர் 2019 23 வயதிற்குட்பட்டோர் இந்திய அணி v 23வயதிற்குட்பட்டோர் வங்காளதேச அணி
வாழ்நாள் புள்ளிவிவரங்கள்
போட்டி வகை முதது பஅது இருபது20
ஆட்டங்கள் 15 32 46
ஓட்டங்கள் 1,845 1,511 1,078
மட்டையாட்ட சராசரி 80.21 53.96 25.06
100கள்/50கள் 9/2 5/7 1/7
அதியுயர் ஓட்டம் 265 203 124
வீசிய பந்துகள் 48 285 13
வீழ்த்தல்கள் 0 7 0
பந்துவீச்சு சராசரி 36.71
ஒரு முறையில்
5 வீழ்த்தல்கள்
0
ஒரு போட்டியில்
10 வீழ்த்தல்கள்
0
சிறந்த பந்துவீச்சு 2/31
பிடிகள்/இலக்கு
வீழ்த்தல்கள்
13/– 8/– 13/–
மூலம்: ESPNcricinfo, 9 April 2023

யசஸ்வி பூபேந்திர குமார் ஜைஸ்வால் (Yashasvi Jaiswal, 28 திசம்பர் 2001) ஓர் இந்தியத் தொழில்முறை துடுப்பாட்ட வீரர் ஆவார், உள்ளூர்ப் போட்டிகளில் மும்பை மற்றும் இந்தியன் பிரீமியர் லீக்கில் (ஐபிஎல்) ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகளுக்காக விளையாடுகிறார். [3] பட்டியல் அ போட்டிகளில் இரட்டை நூறு அடித்த உலகின் இளம் வீரர் இவராவார்.[4] 2020 ஆம் ஆண்டு தென்னாப்பிரிக்காவில் நடந்த 19 வயதுக்குட்பட்டோருக்கான உலகக் கிண்ணத்தில் இந்திய U-19 அணியின் அதிக ஓட்டங்கள் எடுத்து, தொடர் நாயகனாகத் தேர்வானார்.[5] 2020 ஐபிஎல் ஏலத்தில், ஜெய்ஸ்வால் 2.4 கோடி (US$3,00,000) தொகைக்கு ராஜஸ்தான் ராயல்சால் ஒப்பந்தம் செய்யப்பட்டார்.[6][7]

ஆரம்ப கால வாழ்க்கை[தொகு]

ஜெய்ஸ்வால், திசம்பர் 28, 2001 அன்று உத்தரபிரதேசத்தின் பதோஹியில் உள்ள சூரியவான் என்ற இடத்தில் ஒரு சிறிய வன்பொருள் கடையின் உரிமையாளரான பூபேந்திர ஜெய்ஸ்வால் மற்றும் இல்லத்தரசி காஞ்சன் ஜெய்ஸ்வால் ஆகியோருக்கு ஆறு குழந்தைகளில் நான்காவதாகப் பிறந்தார். பத்து வயதில், ஆசாத் மைதானத்தில் துடுப்பாட்டப் பயிற்சி பெறுவதற்காக மும்பையின் தாதருக்குக் குடிபெயர்ந்தார். தாதர் மைதானத்திலிருந்து வெகு தொலைவில் இருந்ததால்,காள்பாதேவிக்கு இடம்பெயர்ந்தார். அங்கு அவருக்கு குறைந்த தர வேலைக்காக பால் கடையில் தங்குமிடம் வழங்கப்பட்டது. அவரது துடுப்பாட்டப் பயிற்சிக்கு இடையில் கடையில் அதிக உதவிகளை வழங்க முடியாமல் போனதால் கடைக்காரரால் வெளியேற்றப்பட்டார். தங்க இடம் இல்லாததால், ஜெய்ஸ்வால் மைதானத்தில் உள்ள ஒரு கூடாரத்தில் தங்கினார், [8] அங்கு அவர் அடிக்கடி பசியுடன் தூங்கினார், மேலும் பானிபூரி விற்று வாழ்ந்து வந்தார். [9]

மூன்று வருடங்கள் கூடாரங்களில் வாழ்ந்த பிறகு, ஜெய்ஸ்வாலின் துடுப்பாட்டத் திறமையை டிசம்பர் 2013 இல் சாந்தகுரூசில் துடுப்பாட்ட அகாதமியை நடத்தி வந்த ஜுவாலா சிங் கண்டறிந்தார். ஜெய்சுவாலின் சட்டப்பூர்வ பாதுகாவலராக ஆவதற்கு முன் மற்றும் அவரது பிரதிந்தித்துவ அதிகாரத்தைப் பெறுவதற்கு முன்பாக அவர் ஜெய்சுவாலுக்கு தங்குவதற்கு ஓர் இடத்தை வழங்கினார்.[10][8]

ஐபிஎல்[தொகு]

2020 ஐபிஎல் ஏலத்தில், 2020 இந்தியன் பிரீமியர் லீக்கில், ராஜஸ்தான் ராயல்ஸால் வாங்கப்பட்டார். [11] 22 செப்டம்பர், 2020 அன்று முதல் இருபது20 போட்டியில் அறிமுகமானார். 2 அக்டோபர், 2021 இல் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிராக தனது முதல் அரைநூறினைப் பதிவு செய்தார் [12] [13] 30 ஏப்ரல்,2023 இல் தனது முதல் நூறு ஓட்டத்தினை மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிராக 124 (62) அடித்தார்.[14]

மேற்கோள்கள்[தொகு]

 1. B, Venkata Krishna (14 October 2018). "From Maidans to Headlines, the Aamchi Mumbai Way to Stardom". The New Indian Express. http://www.newindianexpress.com/magazine/2018/oct/14/from-maidans-to-headlines-the--aamchi-mumbai-way-to-stardom-1884217.html. 
 2. Dore, Bhavya (31 October 2019). "The giant steps of Yashasvi Jaiswal". Livemint. https://www.livemint.com/mint-lounge/features/the-giant-steps-of-yashasvi-jaiswal-11572500849036.html. 
 3. "The uncapped ones: Shahrukh Khan, Umran Malik and more". ESPN Cricinfo. பார்க்கப்பட்ட நாள் 25 March 2022.
 4. "20 cricketers for the 2020s". The Cricketer Monthly. பார்க்கப்பட்ட நாள் 6 July 2020.
 5. "IPL 2020: Meet Yashasvi Jaiswal who left home aged 10 to pursue cricketing dream". BBC Sport. பார்க்கப்பட்ட நாள் 27 September 2020.
 6. "Yashasvi Jaiswal: 17-year-old completes rags to riches story with mega IPL contract". பார்க்கப்பட்ட நாள் 20 December 2019.
 7. "IPL 2020 – Devdutt Padikkal, Ruturaj Gaikwad in power-packed band of uncapped Indian batsmen". ESPN Cricinfo. பார்க்கப்பட்ட நாள் 10 September 2020.
 8. 8.0 8.1 Dabas, Arjit (8 October 2018). "From Sleeping in Tents to Starring in Asia Cup Triumph – Yashasvi Jaiswal's Incredible Journey". News18. https://www.news18.com/cricketnext/news/u-19-asia-cup-from-sleeping-in-tents-to-starring-in-asia-cup-triumph-yashasvi-jaiswals-incredible-journey-1901523.html. 
 9. Pandey, Devendra (4 July 2018). "Lived in a tent, sold pani puri, slept hungry, now Yashasvi Jaiswal plays cricket for India Under-19". The Indian Express. https://indianexpress.com/article/sports/cricket/lived-in-a-tent-sold-pani-puri-slept-hungry-now-he-plays-cricket-for-india-under-19-5244796/. 
 10. "Jwala, the man who first saw spark in Yashasvi". India Today. 8 July 2018. https://www.indiatoday.in/pti-feed/story/jwala-the-man-who-first-saw-spark-in-yashasvi-1277206-2018-07-04. 
 11. "IPL auction analysis: Do the eight teams have their best XIs in place?". ESPN Cricinfo. பார்க்கப்பட்ட நாள் 20 December 2019.
 12. "4th Match (N), Sharjah, Sep 22 2020, Indian Premier League". ESPN Cricinfo. பார்க்கப்பட்ட நாள் 22 September 2020.
 13. "Stats - Yashasvi Jaiswal scores Royals' second-fastest fifty". ESPNcricinfo (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2023-02-27.
 14. "mumbai-indians-vs-rajasthan-royals". பார்க்கப்பட்ட நாள் 30 April 2023.

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=யசஸ்வி_ஜைஸ்வால்&oldid=3743952" இலிருந்து மீள்விக்கப்பட்டது