உள்ளடக்கத்துக்குச் செல்

ம. கி. சந்திரசேகரன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ம. கி. சந்திரசேகரன்
பிறப்பு(1937-09-04)4 செப்டம்பர் 1937
சேலம்
இறப்பு2 சூலை 2009(2009-07-02) (அகவை 71)
தேசியம்இந்தியர்
துறைவிலங்கியல், காலவுயிரியல்
விருதுகள்சாந்தி ஸ்வரூப் பட்நாகர் விருது

மரோலி கிருஷ்ணையா சந்திரசேகரன் (Maroli Krishnayya Chandrashekaran; செப்டெம்பர் 4, 1937 – சூலை 2, 2009) சேகர் என்றும் எம்.கே.சி என்றும் அறியப்பட்ட இந்திய விலங்கியலாளர் ஆவார். இவர் இந்தியாவில் காலவுயிரியல் எனும் அறிவியல் படிப்பிற்கான அடித்தளமிட்டவர் ஆவார். பெங்களூரில் உள்ள இந்திய அறிவியல் கழகத்தின் மதிப்புமிகு உறுப்பினராகவும், மூன்றாம் உலக நாடுகளின் அறிவியல் அமைப்பின் உறுப்பினராகவும் செயல்பட்டுள்ளார். அறிவியல் தொழில்நுட்பத்துறையின் உயரிய விருதான சாந்தி ஸ்வரூப் பட்நாகர் விருதினை 1979 ஆம் ஆண்டு பெற்றார்.[1][2]

தமிழ்நாட்டில் சேலம் மாவட்டத்தில் பிறந்த இவர், சென்னை மாநிலக் கல்லூரியில் இளநிலை அறிவியல் மற்றும் முதுநிலை அறிவியல் பட்டங்களை விலங்கியலில் பெற்றார். சென்னைப் பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்டத்தினை விலங்கியலில் பெற்றார். உயிரிஅறிவியல் சஞ்சிகையின் தொகுப்பாசிரியராக 1991 முதல் 1997 வரையும், இரெசொனன்ஸ்: அறிவியல் கல்வி சஞ்சிகையின் தொகுப்பாசிரியராக 2003 முதல் 2005 வரை பணியாற்றினார்.[3][4][5]

மேற்கோள்கள்[தொகு]

  1. "Dr Maroli Krishnayya Chandrashekaran". Shanti Swarup Bhatnagar Prize for Science and Technology. பார்க்கப்பட்ட நாள் 21 Feb 2016.
  2. Sharma, V. K. (2009). "Maroli Krishnayya Chandrashekaran (1937-2009)". Journal of Biological Rhythms 24 (6): 443–443. doi:10.1177/0748730409349141. 
  3. Nanjundiah, Vidyanand (2009). "M K Chandrashekaran (1937–2009)". Journal of Biosciences 34 (3): 333–341. doi:10.1007/s12038-009-0037-z. பப்மெட்:19805892. 
  4. Nanjundiah, Vidyanand (2011). "M K Chandrashekaran (1937–2009)". Resonance 16 (8): 705–721. doi:10.1007/s12045-011-0079-z. 
  5. Sharma, V. K. (2009). "Maroli Krishnayya Chandrashekaran (1937-2009)". Current Science 97 (2): 263–264. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=ம._கி._சந்திரசேகரன்&oldid=3740216" இலிருந்து மீள்விக்கப்பட்டது