மாரியப்பன் பெரியசாமி
மாரியப்பன் பெரியசாமி | |
---|---|
பிறப்பு | அக்டோபர் 6, 1952 திருவில்லிபுத்தூர், தமிழ்நாடு, இந்தியா |
வாழிடம் | ஐதராபாத்து (இந்தியா), தெலுங்கானா, இந்தியா |
தேசியம் | இந்தியர் |
துறை | |
பணியிடங்கள் |
|
கல்வி கற்ற இடங்கள் |
|
ஆய்வு நெறியாளர் |
|
அறியப்படுவது | Development of organic synthetic methods using boron and transition metal reagents |
விருதுகள் |
|
மாரியப்பன் பெரியசாமி(பிறப்பு 1952)(Mariappan Periasamy) ஓர் இந்திய கரிம உலோகவியல் வேதியியலாளரும் ஐதராபாத் பல்கலைக்கழகத்தின்.[1] வேதியியல் துறைப் பேராசிரியரும் ஆவார். இவர் கரிம உலோக இணைவுகளைப் பயன்படுத்தி பல்வகைப்பட்ட மூலக்கூறு அமைப்புகளை கட்டமைத்தல் தொடர்பான,[2] தமது பரிசோதனைகளுக்காக நன்கறியப்படுபவர் ஆவார். மேலும் இந்திய தேசிய அறிவியல் கழகம்[3] மற்றும் இந்திய அறிவியல் கழகம்[4] ஆகிய அமைப்புகளில் தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினராவார். இந்திய அரசின் அறிவியல் ஆராய்ச்சிக்கான உயர் முகமையாக விளங்கும் அறிவியல் மற்றும் தொழில் துறை ஆராய்ச்சிக் குழுமம், இவருக்கு இந்தியாவின் மிக உயர்ந்த அறிவியல் விருதுகளில் ஒன்றான அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்திற்கான சாந்தி சொரூப் பட்நாகர் விருதினை, வேதி அறிவியலில் இவரது பங்களிப்பிற்காக 1996 ஆம் ஆண்டு வழங்கியது.[5]
வாழ்க்கைக் குறிப்பு
[தொகு]எம்.பெரியசாமி, தென்னிந்திய மாநிலங்களில் ஒன்றான தமிழ்நாட்டின் விருதுநகர் மாவட்டத்திலுள்ள திருவில்லிபுத்தூர் எனும் ஊரில் மாரியப்பநாடார் - கிருட்டிணம்மாள் தம்பதிக்கு மகனாக 1952ஆம் ஆண்டு அக்டோபர் திங்கள் 6ஆம் நாள் பிறந்தார். இவர்தம் பள்ளிப் படிப்பினை கம்மாப்பட்டி தொடக்கப் பள்ளியிலும் திருவில்லிபுத்தூர் சி. எம். எஸ். உயர்நிலைப் பள்ளியிலும் பயின்றார். மேலும் 1970ஆம் ஆண்டு இவர்தம் முன் பல்கலைக்கழகப் படிப்பினை பாளையங்கோட்டையிலுள்ள புனித ஜான் கல்லூரியில் படித்தார்.[1] இவர்தம் பட்டப்படிப்பினையும் (1970–73) முதுகலைப் படிப்பினையும் (1973–75) மதுரை அமெரிக்கன் கல்லூரியில் படித்தார். இவர் 1979 ஆம் ஆண்டு இந்திய அறிவியல் நிறுவனத்தில் எம்.வி. பட் என்பாரின் வழிகாட்டுதலின்கீழ் நறுமண வளையங்களின் உயிரக இணைவு செயல்முறைமை (ஆங்கிலம்:Mechanism of Oxidation of Aromatic Rings) என்ற தலைப்பிலான ஆய்வினை மேற்கொண்டு தம் முனைவர் பட்டத்தினைப் பெற்றார். அதே ஆண்டில் முதுமுனைவர் படிப்பிற்காக அமெரிக்கா சென்ற அவர், பர்டியூ பல்கலைக்கழகத்தில் வேதியியலுக்கான நோபல் பரிசுபெற்ற ஹெர்பர்ட்டு சி. பிரவுன் என்பாரின் ஆய்வகத்தில் வகைப்பாடுறாத அயனி பிரச்சினை (ஆங்கிலம்:Nonclassical Ion Problem) என்னும் தலைப்பில் ஆய்வு மேற்கொண்டார்.[6] பின்னர் 1982 ஆம் ஆண்டில் இந்தியா திரும்பிய அவர் ஐதராபத் பல்கலைக்கழகத்தில் வேதியியல் துறையில் சேர்ந்து 1993 ஆம் ஆண்டு வரை பேராசிரியராகப் பணியாற்றினார். இதற்கிடையில் அவர் 1995 இல் வருகைதரு அறிவியலறிஞராக தேசிய அறிவியல் ஆராய்ச்சி மையத்திலும், வருகைதரு பேராசிரியராக 1996 இல் ஆம்ஸ்டர்டாம் பல்கலைக்கழகத்திலும், 1997இல் மர்பர்க்கு பல்கலைக்கழகத்திலும் பணியாற்றினார்.[3]
பெரியசாமி, ஹேமாவதி பரமசிவம் என்பவரை மணந்தார். இத்தம்பதிக்கு இரு குழந்தைகள் உள்ளனர். இவரின் குடும்பம் ஐதராபாத்தில் வசித்து வருகிறது.
மரபுரிமை
[தொகு]பெரியசாமி, கரிம உலோக இணைவுகளைப் பயன்படுத்தி பல்வகைப்பட்ட மூலக்கூறு அமைப்புகளை கட்டமைத்தல் தொடர்பான புதிய செயற்கை நெறிமுறைகளின் வளர்ச்சிக்கு குறிப்ப்பிடத்தக்க பங்காற்றியவர் ஆவார்.[7] அவர் கரிம உலோகவியல் மற்றும் சமச்சீரின்மை (வேதியியல்) கரணிகள் ஆகியவற்றின் தயாரிப்பில் புதிய வழிமுறைகளை மேம்படுத்தும் ஒரு குழுவினை வழிநடத்துகிறார். இக்குழுவினருள் பலர் ஆய்வகங்கள் மற்றும் தொழிற்சாலைகளைப் பயன்படுத்துபவர் ஆவர்.[8] இவரது குழுவினரால் வடிவமைக்கப்பட்ட சோடியம்போரோஹைடிரைடு-12 (குறியீடு:NaBH4/I2) எனும் கரணி அமைப்பானது தொழிற்துறை தரநிலையாக ஆகியுள்ளது. மேலும் அவர் உயிரிப் பொருள்கள் மற்றும் சூரிய ஆற்றலிலிருந்து குறைந்த செலவில் மின்சாரம் உற்பத்தி செய்வதற்கான செயல்முறைகளை உருவாக்கியுள்ளார். அவரது ஆராய்ச்சிகள் பல கட்டுரைகளாக ஆவணப்படுத்தப்பட்டுள்ளன;[9] ”ஆய்வு வாயில்” (ஆங்கிலம்: ResearchGate), என்னும் இணையக் கட்டுரைக் களஞ்சியம் இவரது 276 ஆய்வுக் கட்டுரைகளை நிரல்படுத்தியுள்ளது.[10] இவர் 2007 ஆம் ஆண்டு முதல் போரோன் வேதியியலுக்கான பன்னாட்டு அறிவியல் குழுவின் உறுப்பினராகவும் சில அறிவியல் இதழ்களின் ஆசிரியர்குழு உறுப்பினராகவும் பணியாற்றி வருகிறார்.[3]
விருதுகள் மற்றும் பெருமைகள்
[தொகு]பெரியசாமி இந்திய அறிவியல் நிறுவனத்திடமிருந்து 1979ஆம் ஆண்டு பேராசிரியர் பி. எச். ஐயர் பதக்கத்தினையும், 1992 ஆம் ஆண்டில் இந்திய வேதியியல் தொழில்நுட்ப நிறுவனத்திற்கு]] உட்பட்ட டாக்டர். உசைன் ஜாகீர் அறிவியல் நிறுவனம் வழங்கிய இளம் அறிவியலாளர் விருதினையும் பெற்றுள்ளார்.[3] 1994 ஆம் ஆண்டு இந்திய அறிவியல் கழகம் இவரை உறுப்பினராகத் தேர்ந்தெடுத்தது.[4] இந்திய அரசின் அறிவியல் ஆராய்ச்சிக்கான உயர் முகமையாக விளங்கும் அறிவியல் மற்றும் தொழில் துறை ஆராய்ச்சிக் குழுமம், இவருக்கு இந்தியாவின் மிக உயர்ந்த அறிவியல் விருதுகளில் ஒன்றான அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்திற்கான சாந்தி சொரூப் பட்நாகர் விருதினை, வேதி அறிவியலில் இவரது பங்களிப்பிற்காக 1996 ஆம் ஆண்டு வழங்கியது.[11] 2006-11 ஆம் ஆண்டுகளில் இந்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறையில் உள்ள ஏ.ஜே.சி. போஸ் தேசிய ஆட்சி கழக உறுப்பினராகவும், 2005ஆம் ஆண்டில் இந்திய தேசிய கழகத்தின் உறுப்பினராகவும் இருந்தார். 2007 ஆம் ஆண்டில் இந்திய வேதியியல் ஆராய்ச்சி கழகத்திடமிருந்து வெள்ளிப் பதக்கத்தினைப் பெற்றார். இவர் 1995இல் புனே பல்கலைக் கழகத்தின் பேராசிரியர் என். எஸ். நரசிம்மன் அறக்கட்டளை விருது, 1999இல் மும்பை பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் ஏ. பி. குல்கர்னி அறக்கட்டளை சொற்பொழிவு, 2004 இல் இந்திய வேதியியல் கழகத்தின் பேராசிரியர் டி. பி. சக்ரபர்த்தியின் 60 ஆம் பிறந்தநாள் விருது ஆகிய விருது வழங்கும் நிகழ்வுகளில் உரைகள் ஆற்றியுள்ளார்.[3]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ 1.0 1.1 "M. Periasamy - Faculty profile". University of Hyderabad. 2016. Archived from the original on 2016-12-30. பார்க்கப்பட்ட நாள் 2017-07-07.
- ↑ "Brief Profile of the Awardee". Shanti Swarup Bhatnagar Prize. 2016. பார்க்கப்பட்ட நாள் November 12, 2016.
- ↑ 3.0 3.1 3.2 3.3 3.4 "Indian fellow". Indian National Science Academy. 2016.
- ↑ 4.0 4.1 "Fellow profile". Indian Academy of Sciences. 2016. பார்க்கப்பட்ட நாள் November 12, 2016.
- ↑ "View Bhatnagar Awardees". Shanti Swarup Bhatnagar Prize. 2016. பார்க்கப்பட்ட நாள் November 12, 2016.
- ↑ Brown, Herbert C. (1977). The Nonclassical Ion Problem. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-1-4613-4118-5.
- ↑ "Handbook of Shanti Swarup Bhatnagar Prize Winners" (PDF). Council of Scientific and Industrial Research. 1999. p. 34. பார்க்கப்பட்ட நாள் October 5, 2016.
- ↑ "Mariappan Periasamy - Scientist profile" (PDF). Science and Engineering Research Board. 2016.
- ↑ "Browse by Fellow". Indian Academy of Sciences. 2016.
- ↑ "Mariappan Periasamy on ResearchGate". ResearchGate. 2016.
- ↑ "Chemical Sciences". Council of Scientific and Industrial Research. 2016. Archived from the original on September 12, 2012. பார்க்கப்பட்ட நாள் November 7, 2016.
வெளி இணைப்புகள்
[தொகு]- Mariappan Periasamy; Athukuri Edukondalu; Polimera Obula Reddy (2015). "Synthesis of Chiral 2,3-Disubstituted 1,4-Diazabicyclo[2.2.2]octane Derivatives". J. Org. Chem. 80 (7): 3651–3655. doi:10.1021/jo502688b.
- Mariappan Periasamy; Polimera Obula Reddy; Iddum Satyanarayana; Lakavathu Mohan; Athukuri Edukondalu (2016). "Diastereoselective Synthesis of Tetrasubstituted Propargylamines via Hydroamination and Metalation of 1-Alkynes and Their Enantioselective Conversion to Trisubstituted Chiral Allenes". J. Org. Chem. 81 (3): 987–999. doi:10.1021/acs.joc.5b02554.