தி. வெ. இராமகிருஷ்ணன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தி. வெ. இராமகிருஷ்ணன்
T. V. Ramakrishnan
தி. வெ. இராமகிருஷ்ணன்
பிறப்புதிருப்பத்தூர் வெங்கடாலமூர்த்தி இராமகிருஷ்ணன்
14 ஆகத்து 1941 (1941-08-14) (அகவை 82)
சென்னை, தமிழ்நாடு, இந்தியா
தேசியம்இந்தியர்
துறை
பணியிடங்கள்பனாரசு இந்து பல்கலைக்கழகம்
இந்திய அறிவியல் நிறுவனம்
பிரின்ஸ்டன் பல்கலைக்கழகம்
கல்வி கற்ற இடங்கள்பனாரசு இந்து பல்கலைக்கழகம் இளம் அறிவியல் முது நிலை அறிவியல்
கொலம்பியா பல்கலைக்கழகம் முனைவர்
ஆய்வு நெறியாளர்ஜாக்குலின் மசாடாக் லுத்தின்ஜெர்
முனைவர் பட்ட 
மாணவர்கள்
வெங்கட் பாய்
அறியப்படுவதுகோட்பாட்டு இயற்பியல், சுருக்க பொருள் இயற்பியல், புள்ளியியல் எந்திரவியல்
விருதுகள்

திருப்பத்தூர் வெங்கடாசலமூர்த்தி இராமகிருஷ்ணன் (T. V. Ramakrishnan)(பிறப்பு: ஆகத்து 14, 1941) என்பவர் இந்திய கோட்பாட்டு இயற்பியலாளர் ஆவார். இவர் தற்போது அணு சக்தித்துறை ஓமி பாபா பேராசிரியராக பனாரசு இந்து பல்கலைக்கழகத்திலும் திரிபுரா பல்கலைக்கழகத்தின் வேந்தராகவும் உள்ளார்.

வாழ்க்கை[தொகு]

கல்வி[தொகு]

திருப்பத்தூர் வெங்கடாசலமூர்த்தி இராமகிருஷ்ணன் 1941 ஆம் ஆண்டு ஆகத்து 14ஆம் தேதி தமிழ்நாட்டில் உள்ள சென்னையில் பிறந்தார். இவர் 1959 மற்றும் 1961-ல் பனாரசு இந்து பல்கலைக்கழகத்தில் இயற்பியலில் இளம் அறிவியல் மற்றும் முதுநிலை அறிவியல் பட்டமும் முடித்தார். பின்னர் 1961 முதல் 1962 வரை பனாரசு இந்து பல்கலைக்கழகத்தில் அறிவியல் மற்றும் தொழிலக ஆய்வு மன்ற ஆய்வாளராக பணியாற்றினார். பின்னர் முனைவர் பட்டத்தினை 1966-ல் கொலம்பியா பல்கலைக்கழகத்தில் முடித்தார்.[1]

ஆய்வுப் பணி[தொகு]

கான்பூரில் உள்ள இந்திய தொழில்நுட்பக் கழகத்தில் விரிவுரையாளராக தனது கல்வி மற்றும் ஆய்வுப் பணியினைத் தொடங்கினார். இவர் 1986-ல் பெங்களூரில் உள்ள இந்திய அறிவியல் நிறுவனத்தில் பணியில் சேர்ந்தார். இங்கு இவர் 2003 வரை தொடர்ந்தார். 2010 முதல் 2013 வரை இன்போசிஸ் பரிசுக்கான இயற்பியல் அறிவியல் நடுவர் குழுவிலும் பணியாற்றினார்.

எலக்ட்ரான் மயமாக்கலின் அளவிடுதல் கோட்பாட்டிற்கு இராமகிருஷ்ணன் முக்கிய பங்களிப்பு செய்துள்ளார்.[2] திரவம் மற்றும் திட நிலை மாற்றத்திற்கான கோட்பாடு மற்றும் கலப்பு இணைதிறன் அமைப்புகளுக்கு இவர் பங்களிப்பு செய்துள்ளார்.

விருதுகளும் கௌரவங்களும்[தொகு]

இராமகிருஷ்ணனுக்கு 1983-ல் சாந்தி ஸ்வரூப் பட்நாகர் விருதும், 1990-ல் மூன்றாவது நாடுகளுக்கான அறிவியல் அமைப்பின் பரிசும்[3] 2001-ல் பத்மசிறீ விருதும் வழங்கப்பட்டது.[4][5] 1987ஆம் ஆண்டில் இவர் அமெரிக்க இயற்பியல் கழக ஆய்வுறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். "சீர்குலைந்த அமைப்புகளின் பல-உடல் கோட்பாட்டிற்கான இவரது பங்களிப்புகளுக்காக, குறிப்பாக இடமயமாக்கலின் அளவிடுதல் கோட்பாடு மற்றும் கலப்பு-வேலண்ட் அசுத்தங்களின் கோட்பாடு" [4 [6]

இராமகிருஷ்ணன் 2000-ல் அரச கழகத்தின் ஆய்வு உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[7] இவரது தேர்தல் சான்றிதழில் கூறப்பட்டுள்ளதாவது:

மேற்கோள்கள்[தொகு]

  1. "Curriculum Vitae of T. V. Ramakrishnan". Archived from the original on 6 October 2011. பார்க்கப்பட்ட நாள் 2011-08-21.
  2. Abrahams, E.; Anderson, P. W.; Licciardello, D. C.; Ramakrishnan, T. V. (5 March 1979). "Phys. Rev. Lett. 42, 673 (1979): Scaling Theory of Localization: Absence of Quantum Diffusion in Two Dimensions". Physical Review Letters 42 (10): 673–676. doi:10.1103/PhysRevLett.42.673. http://prl.aps.org/abstract/PRL/v42/i10/p673_1. 
  3. "Prizes and Awards". The World Academy of Sciences. 2016.
  4. "Bhatnagar Award in Physical Sciences". Council for Scientific and Industrial Research. Archived from the original on 27 September 2011. பார்க்கப்பட்ட நாள் 2011-08-21.
  5. "Padma Awards Directory" (PDF). Ministry of Home Affairs, Government of India. 2011-07-05. Archived from the original (PDF) on 10 May 2013. பார்க்கப்பட்ட நாள் 2011-08-21.
  6. "APS Fellow Archives". APS. பார்க்கப்பட்ட நாள் 24 September 2020.
  7. "Tiruppattur Ramakrishnan". London: Royal Society. One or more of the preceding sentences may incorporate text from the royalsociety.org website where "all text published under the heading 'Biography' on Fellow profile pages is available under Creative Commons Attribution 4.0 International License.""Royal Society Terms, conditions and policies". Archived from the original on 20 February 2016. பார்க்கப்பட்ட நாள் 2016-03-09.
  8. "EC/2000/30: Ramakrishnan, Tiruppattur Venkatachalamurti". The Royal Society. பார்க்கப்பட்ட நாள் 20 March 2016.
"https://ta.wikipedia.org/w/index.php?title=தி._வெ._இராமகிருஷ்ணன்&oldid=3785004" இலிருந்து மீள்விக்கப்பட்டது