தஞ்சாவூர் ராமச்சந்திரன் அனந்த ராமன்
தஞ்சாவூர் ராமச்சந்திர அனந்தராமன் (Tanjore Ramachandra Anantharaman)(25 நவம்பர் 1927 – 19 சூன் 2009) என்பவர் இந்திய முன்னணி உலோகவியல் விஞ்ஞானிகளில் ஒருவராவார்.[1]
ஆரம்பகால வாழ்க்கை[தொகு]
அனந்தராமன் இந்தியாவில் தமிழ்நாட்டில் பிறந்தார். 1947-ல் சென்னை பல்கலைக்கழகத்தில் வேதியியல் பட்டம் பெற்றார். 1950-ல் பெங்களுர் இந்திய அறிவியல் கழகத்தில் பட்டம் பெற்றார். 1951-ல் சென்னைப் பல்கலைகழகத்தில் உலோகவியல்வேதியியலில் முதுகலை பட்டம் பெற்றார். அனைத்து பல்கலைக்கழகத்தின் தேர்வுகளிலும் முதலாதவாக இருந்ததினால் ரோட்ஸ் ஸ்காலர்ஷிப் வழங்கப்பட்டது. ஆக்ஸ்போர்டு பல்கலைக் கழகத்தில் இயற்பியல் ஆராய்ச்சிக்காக 1951-ல் இங்கிலாந்து சென்றார் டிபில் பட்டம் பெற்றார். 1980-ல் உயர் படிப்பிற்காக டி சயின்ஸ் மருத்துவ பட்டம் பெற்று உலோகம் மற்றும் பொருட்களைப்பற்றி ஆராய்ச்சிகளை வெளியிட்டார். 1949ஆம் அண்டு ஆத்திரேலியாவால் நபீல்டு ஸ்காலராக தேர்வு செய்து ஜெர்மனி போன்ற பல நாடுகளில் பத்தாண்டு கொளரவ பேராசிரியாராக பணியாற்றினார்.
ஆராய்ச்சி மற்றும் வாழ்க்கை[தொகு]
அனந்த ராமன் உதவி ஆராய்ச்சியாளராக ஜெர்மனியில் பணியாற்றினார். பெங்களூர் இந்திய அறிவியல் கழகத்தில் பேராசிரியாக பணியாற்றினார்.மேலும் மெட்டலாஜிக் தொழில் நுட்ப நிறுவனத்தில் வாரணாசியில் தலைமை பொறியாளராக பணியாற்றினார். உலோக பொறியியல் துறையில் புலத்தலைவராகவும் இந்திய தொழில்நுட்ப கழகத்தில் இயக்குநர், துணைவேந்தர் செயற்குழு உறுப்பினராகவும் இருந்தார். 1987-ல் ஒய்வு பெற்றார் பின் டாபர் பொறியியல் தொழில் நுட்ப நிறுவன இயக்குநராகவும் இந்திய தேசிய அறிவியல் கழக மூத்த விஞ்ஞானியாகவும் இருந்தார். அனந்தராமன் ஆராய்ச்சியின் பெரும்பகுதி உலோக அறிவியல், இயற்கை உலோகம் பற்றியது. இவருடைய பங்களிப்பு உலோகக்கண்ணாடி, உலோகக்கலவை பற்றி இருந்தது. பல ஆராய்ச்சி மாணக்கர்களை கொண்டு திடப்படுத்த தொழிற்நுட்பங்களை கண்டறிந்தார். மிகப்பெரிய அளவில் உலோக கண்ணாடி,விரைவாக திடப்படுத்த, வலுவூட்டக்கூடிய உலோக கலவை உருவாக்குவதில் கவனம் செலுத்தினார்.
மேற்கோள்கள்[தொகு]
- ↑ "Deceased Fellow". Indian National Science Academy. 2016. http://www.insaindia.org.in/deceaseddetail.php?id=N720021.