இராசன் சங்கரநாராயணன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

இராசன் சங்கரநாராயணன் (Rajan Sankaranarayanan) என்பார் இந்திய உயிரியலாளர். இவர் சென்னையில் பிறந்தார். ஐதராபாத்தில் உள்ள செல்லுலார் மற்றும் மூலக்கூறு உயிரியல் மையத்தில் உயிரியல் அமைப்பு ஆய்வுக் குழுத் தலைவராகப் பதவி வகிக்கிறார்.

இவருக்கு 2011ஆம் ஆண்டில், உயிரியல் அறிவியல் பிரிவில் இந்தியாவின் மிக உயர்ந்த அறிவியல் விருதான சாந்தி ஸ்வரூப் பட்நகர் பரிசு வழங்கப்பட்டது.[1] இவர் திறன்மிக்க பணி மேம்பாட்டுக்கான தேசிய உயிரி அறிவியல் விருதையும் பெற்றவர்.

மேற்கோள்கள்[தொகு]

  1. "11 scientists selected for Shanti Swarup Bhatnagar award" ibn live, Sep 26,2011
"https://ta.wikipedia.org/w/index.php?title=இராசன்_சங்கரநாராயணன்&oldid=3723865" இலிருந்து மீள்விக்கப்பட்டது