கோ. நா. இராமச்சந்திரன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
கோ. நா. இராமச்சந்திரன்
G.N. Ramachandran
G N Ramachandran.jpg
பிறப்பு அக்டோபர் 8, 1922(1922-10-08)
கோபாலசமுத்திரத்திரம், தமிழ்நாடு[1][2][3][4][5]
இறப்பு 7 ஏப்ரல் 2001(2001-04-07) (அகவை 78)
சென்னை, தமிழ்நாடு
தேசியம் இந்தியர்
துறை உயிரியற்பியல்
பணியிடங்கள் சென்னைப் பல்கலைக்கழகம்
இந்திய அறிவியல் கழகம்
கவெண்டிசு ஆய்வுகூடம்
கல்வி கற்ற இடங்கள் சென்னைப் பல்கலைக்கழகம்
கேம்பிரிச்சுப் பல்கலைக்கழகம்
ஆய்வு நெறியாளர் ச. வெ. இராமன்
அறியப்படுவது இராமச்சந்திரன் வரைபடம்

கோபாலசமுத்திரம் நாராயண இராமச்சந்திரன் (G. N. Ramachandran, அக்டோபர் 8, 1922ஏப்ரல் 7, 2001), இருபதாம் நூற்றாண்டு இந்திய அறிவியலாளர்களுள் முக்கியமானவர். இவர் தமிழ்நாடு மாநிலம் திருநெல்வெலி மாவட்டம் கோபாலசமுத்திரத்தில் , ஜி. ஆர். நாராயணன், லக்ஷ்மி அம்மாள் ஆகியோரின் மூத்த மகனாகப் பிறந்தார். படித்தது எர்ணாகுளத்தில், இவர் தந்தை நாராயணன் எர்ணாகுளத்தில் கல்லூரியில் கணிதப் பேராசிரியராக பணியாற்றினார்.நோபல் பரிசு பெற இவர் பெயர் பரிந்துரைக்கப்பட்டது.[6]

கல்வி[தொகு]

திருச்சி புனித வளனார் கல்லூரியில் இயற்பியல்(ஹானர்ஸ்) படித்தார். பின்னர் பெங்களூர் இந்திய அறிவியல் கழகத்தில் ஆராய்ச்சி மாணவராக சேர்ந்தார். சர். சி. இராமனின் கண்காணிப்பின் கீழ் ஆய்வு மேற்கொண்ட இராமச்சந்திரன் முனைவர் பட்டம் பெற்றார்.[7]

பணிகள்[தொகு]

கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்திலுள்ள சர் வில்லியம் லாரன்ஸ் ப்ராகின் ஆய்வகத்தில் பணியில் சேர்ந்தார். அங்கு பணிமுடிவடைந்ததும் பெங்களூர் இந்திய அறிவியல் கழகத்தில் உதவிப் பேராசிரியராக பணியில் சேர்ந்தார். சென்னைப் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராக அப்போது இருந்த இலட்சுமணசாமி முதலியார், இராமச்சந்திரனை அழைத்துவந்து 1952இல் சென்னை பல்கலைக்கழகத்தில் இயற்பியல் துறையில் பேராசிரியராக ஆக்கினார். இத்துறையின் கீழ் கிரிஸ்டலோகிராஃபி மற்றும் பயோபிசிக்ஸ் என்ற புதிய துறையை நவீன ஆய்வு வசதிகளுடன் இராமச்சந்திரன் எற்படுத்தினார். சென்னை பல்கலைக்கழகத்தில் பேராசிரியராக பொறுப்பேற்றபோது இராமச்சந்திரனுக்கு வயது 29. நாட்டின் மிகச்சிறந்த ஆய்வு நிலையங்களில் ஒன்றாக இராமச்சந்திரன் உருவாக்கிய கிருஷ்டலோகிராஃபி மற்றும் பயோஃபிசிக்ஸ் ஆய்வு நிலையம் உள்ளது. மனித உடலில் உற்பத்தியாகும் புரோட்டின் பொருளான காலஜினின் உயிரணு எப்படி உருவாகிறது என்பதை கண்டறிந்தார். எக்ஸ்ரே பற்றி ஆய்வினை இயற்பியல் முறையில் ஆய்வு மேற்க்கொண்டார். இம்முறைக்கு இராமச்சந்திரன்கோட் என்றே அழைக்கப்படுகிறது.காலஜினில் உள்ள மாலிக்யூல்கள் முக்கோணக்கூட்டமைப்பில் உள்ளது என்ற உண்மையை வெளியிட்டார். பெப்டைடுகளின் கட்டமைப்பை அறிய உதவும் இராமச்சந்திரன் வரைபடம் என்ற கண்டுபிடிப்புக்காக அவர் போற்றப்படுகிறார். உயிரியலிலும் இயற்பியலிலும் முக்கியக் ஆய்வுகளை நிகழ்த்தியவர்; குறிப்பாக, மூலக்கூறு உயிரியற்பியலில் புரதங்களின் கட்டமைப்புப் பற்றிய அறிதல்கள். இவரது கண்டுபிடிப்பான தசைநார்ப் புரதத்தின் மூற்றை எழுச்சுருள் வடிவம், புரதக்கூறுகளின் வடிவமைப்பை அடிப்படையாக அறிந்து கொள்ள உதவியது. மிகப்பெரிய அறிவியலாளராக இருந்தும், மிக எளிமையான சொற்களையும் எடுத்துக்காட்டுகளையும் கையாண்டு இவர் ஆற்றிய உரைகள், பள்ளி மாணவர்களுக்குக் கூட புரியும் வண்ணம் இருந்தது. இவர் ஒரு மிகச் சிறந்த ஆசிரியராக இருந்தார்.

விருதுகள்[தொகு]

1977ல், லண்டனில் உள்ள ஃபெலோ ஆஃப் ராயல் சொசைட்டி விருது பெற்றார். கிரிஸ்டலோகராஃபி துறையில் இவர் ஆற்றிய பணிக்காக 'இவால்டு' விருது பெற்றார். மேகநாத் விருது,பட்நாகர் விருது,வாட்மூல் நினைவுப்பரிசு என பல விருதுகள் பெற்றார்.[8],

மேற்கோள்கள்[தொகு]

 1. எஆசு:10.1098/rsbm.2005.0024
  This citation will be automatically completed in the next few minutes. You can jump the queue or expand by hand
 2. PMID 11566125 (PubMed)
  Citation will be completed automatically in a few minutes. Jump the queue or expand by hand
 3. PMID 11468366 (PubMed)
  Citation will be completed automatically in a few minutes. Jump the queue or expand by hand
 4. PMID 11385557 (PubMed)
  Citation will be completed automatically in a few minutes. Jump the queue or expand by hand
 5. PMID 11373614 (PubMed)
  Citation will be completed automatically in a few minutes. Jump the queue or expand by hand
 6. தினமணி தீபாவளி மலர்,1999,தலைசிறந்த தமிழர்கள். பக்கம்86
 7. ஜி. என். ராமச்சந்திரன்
 8. தினமணி தீபாவளி மலர்,1999,தலைசிறந்த தமிழர்கள். பக்கம்86
"https://ta.wikipedia.org/w/index.php?title=கோ._நா._இராமச்சந்திரன்&oldid=2374715" இருந்து மீள்விக்கப்பட்டது