உள்ளடக்கத்துக்குச் செல்

முதலாம் நரசராச உடையார்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
மைசூர் அரசர்கள்
விசயநகர அரசுக்கு உட்பட்டவர்கள்
யதுராய உடையார் 1399-1423
முதலாம் சாமராச உடையார் 1423-1459
முதலாம் திம்மராச உடையார் 1459-1478
இரண்டாம் சாமராச உடையார் 1478-1513
மூன்றாம் சாமராச உடையார் 1513-1553
தன்னாட்சி பெற்றவர்கள்
இரண்டாம் திம்மராச உடையார் 1553-1572
நான்காம் சாமராச உடையார் 1572-1576
ஐந்தாம் சாமராச உடையார் 1576-1578
முதலாம் இராச உடையார் 1578-1617
ஆறாம் சாமராச உடையார் 1617-1637
இரண்டாம் இராச உடையார் 1637-1638
முதலாம் நரசராச உடையார் 1638-1659
தொட்ட தேவராச உடையார் 1659-1673
சிக்க தேவராச உடையார் 1673-1704
இரண்டாம் நரசராச உடையார் 1704-1714
முதலாம் தொட்ட கிருட்டிணராச உடையார் 1714-1732
ஏழாம் சாமராச உடையார் 1732-1734
ஐதரலி,திப்புசுல்தானுக்கு அடங்கிய உடையார்கள்
இரண்டாம் கிருட்டிணராச உடையார் 1734-1766
நஞ்சராச உடையார் 1766-1772
எட்டாம் சாமராச உடையார் 1772-1776
ஒன்பதாம் சாமராச உடையார் 1776-1796
பிரித்தானியருக்கு அடங்கிய உடையார்கள்
மூன்றாம் கிருட்டிணராச உடையார் 1796-1868
பத்தாம் சாமராச உடையார் 1881-1894
நான்காம் கிருட்டிணராச உடையார் 1894-1940
செயசாமராச உடையார் 1940-1950
கௌரவ அரச உடையார்கள்
செயசாமராச உடையார் 1950-1974
சிறீகண்ட உடையார் 1974-2013
யதுவீர் கிருட்டிணதத்த சாமாரச உடையார் 2015-

முதலாம் நரசராச உடையார் அல்லது கண்டீரவ நரசராச உடையார் என்பவர் மைசூரின் மன்னராக 1638 முதல் 1659 வரை இருந்தவர்.[1] இவர் விசயநகர பேரரசர்களான இரண்டாம் வேங்கடவன், ஆறாம் சீரங்கன், பீசப்பூரின் முகமது அதில் சா, இக்கேரியின் வீரபத்ர நாயக்கன், சிவப்ப நாயக்கன், மதுரையின் திருமலை நாயக்கன் ஆகியோரின் சம காலத்தவர்.

வெற்றிகள்

[தொகு]

இவர் தன் ஆட்சி துவக்கத்திலேயே பீசப்பூர் இரனதுல்லா கான் தலைமையிலான படையெடுப்பை எதிர்கொள்ள நேர்ந்தது. அவர்களை விரட்டி அடித்தார். தாணாய்கன் கோட்டை, சத்தியமங்கலம், ஓசூர், முதலிய பகுதிகளை கைப்பற்றினார். 1641இல் கெட்டி முதலியாரின் பகுதிகள், 1652இல் பீசப்பூர் ஆட்சியிலிருந்த மேற்கு பாராமகால், வீரபத்ர துர்க்கம், பென்னாகரம், தர்மபுரி, தேன்கனிக்கோட்டை பகுதிகள், கோயமுத்தூர் பகுதி போன்ற பகுதிகளை வென்று மைசூருடன் இணைத்தார்.[2]

பணிகள்

[தொகு]

வெற்றிகளால் வந்த வருவாயைக் கொண்டு சீரங்கப்பட்டண கோட்டையைப் பலப்படுத்தினார். ஒரு தங்க சாலை அமைத்து தன் பெயரால் கண்டீராயி ஹண என்னும் தங்க நாணயங்களையும், ஆனெகாசு என்ற பெயரில் செப்பு காசுகளையும் வெளியிட்டார்.[3]

குறிப்புகள்

[தொகு]
  1. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2017-02-24. பார்க்கப்பட்ட நாள் 2014-12-31.
  2. தகடூர் வரலாறும் பண்பாடும் இரா.இராமகிருட்டினன் பக். 316
  3. H.V.Srieenivasa Murthy & R.Ramakrishnan,histry of Karnataka, p.278
"https://ta.wikipedia.org/w/index.php?title=முதலாம்_நரசராச_உடையார்&oldid=3568073" இலிருந்து மீள்விக்கப்பட்டது