வீரபத்திரக் கோட்டை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(வீரபத்ர துர்க்கம் இலிருந்து வழிமாற்றப்பட்டது)
Jump to navigation Jump to search
வீரபத்திரதுர்கம் 1802 ஆம் ஆண்டு ஓவியம்
வீரபத்திர துர்கம் 1858 ஆம் ஆண்டு ஓவியத்தில்
வீரபத்திரதுர்கம் மலைக்கோட்டையின் ஏழு நுழைவாயில்களில் ஓரளவு அழியாமல் எஞ்சியுள்ள ஒரு நுழைவாயில்

வீரபத்திரக் கோட்டைஅல்லது வீரபத்ர துர்க்கம் என்பது ஒரு மலைக்கோட்டை ஆகும். இம்மலையின் உயரம் 3038 அடி.[1] முற்காலத்தில் இது இட்டிக்கல் துர்க்கம் என அழைக்கப்பட்டது. இது பாலக்கோடு, இராயக்கோட்டை செல்லும் நெடுஞ்சாலையில் 8 கி.மீ தொலைவில் உள்ள பிக்கன அள்ளி ஊரிலிருந்து வடக்கே 3 கி.மீ தொலைவில் உள்ளது. இம்மலைக் கோட்டை ஏழு அரண்களை உடையது. இட்டிப்பால் அரசர்களின் தலைநகரமாக இது திகழ்ந்ததாகக் கூறுவர். மலையின் உச்சியில் வீரபத்திரர் கோயில் உள்ளதால் வீரபத்ரதிர தூர்க்கம் எனத் தற்காலத்தில் அழைக்கப்படுகிறது. இக்கோட்டை ஐதர் அலி, திப்பு சுல்தான் ஆகியோருடன் ஆங்கிலேயருக்கு நடைபெற்ற போர்களில் பெரும் பங்கு வகித்தது. 20, சூலை, 1791 இல் கேப்டன ரீட் என்பவரால் இக்கோட்டை கைப்பற்றப்பட்டது. மலையடிவாரத்தில் சென்னகேசவர் கோயில் உள்ளது. இதனருகில் ஊர் இருந்ததற்கான தடையங்களும், சந்தைப்பேட்டை என்ற ஊரும், சிவன் கோயிலும், அம்மன் கோயிலும், குளங்களும் உள்ளன. கிருட்டிணகிரி மாவட்டம் மற்றும் தர்மபுரி மாவட்டம் ஆகிய மாவட்டங்களில் உள்ள பாராமகால் என்றழைக்கப்படும் பன்னிரண்டு கோட்டைகளில் இது ஒன்றாகும். [2]

படக்காட்சியகம்[தொகு]

குறிப்புகள்[தொகு]

  1. தகடூர் வரலாறும் பண்பாடும், இரா.இராமகிருட்டிணன்.பக் 309
  2. தகடூர் வரலாறும் பண்பாடும், இரா.இராமகிருட்டிணன்.பக் 310
"https://ta.wikipedia.org/w/index.php?title=வீரபத்திரக்_கோட்டை&oldid=3105752" இருந்து மீள்விக்கப்பட்டது