உள்ளடக்கத்துக்குச் செல்

இரண்டாம் கிருட்டிணராச உடையார்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
இரண்டாம் இருட்டிணராச உடையார்
மைசூர் மகாராசன்
ஆட்சி1734 - 1766
முடிசூட்டு விழா15 சூன் 1735[1]
முன்னிருந்தவர்ஏழாம் சாமராச உடையார்
பின்வந்தவர்சஞ்சராச உடையார்
துணைவர்தேவராச அம்மணி அவரு
புட்டஜா அம்மணி அவரு
லெட்சுமி அம்மணி தேவி அவரு
வாரிசு(கள்)நஞ்சராச உடையார்
ஏழாம் சாமராச உடையார்
மரபுஉடையார்
தந்தைசாம் அர்ஸ்
முதலாம் கிருட்டிணராச உடையார் (வளர்ப்புத் தந்தை)
தாய்தேவஜம்மணி
(வளர்ப்புத் தாய்)
பிறப்பு1728
இறப்பு25th ஏப்ரல் 1766
சிறீரங்கப்பட்டணம்
சமயம்இந்து
மைசூர் அரசர்கள்
விசயநகர அரசுக்கு உட்பட்டவர்கள்
யதுராய உடையார் 1399-1423
முதலாம் சாமராச உடையார் 1423-1459
முதலாம் திம்மராச உடையார் 1459-1478
இரண்டாம் சாமராச உடையார் 1478-1513
மூன்றாம் சாமராச உடையார் 1513-1553
தன்னாட்சி பெற்றவர்கள்
இரண்டாம் திம்மராச உடையார் 1553-1572
நான்காம் சாமராச உடையார் 1572-1576
ஐந்தாம் சாமராச உடையார் 1576-1578
முதலாம் இராச உடையார் 1578-1617
ஆறாம் சாமராச உடையார் 1617-1637
இரண்டாம் இராச உடையார் 1637-1638
முதலாம் நரசராச உடையார் 1638-1659
தொட்ட தேவராச உடையார் 1659-1673
சிக்க தேவராச உடையார் 1673-1704
இரண்டாம் நரசராச உடையார் 1704-1714
முதலாம் தொட்ட கிருட்டிணராச உடையார் 1714-1732
ஏழாம் சாமராச உடையார் 1732-1734
ஐதரலி,திப்புசுல்தானுக்கு அடங்கிய உடையார்கள்
இரண்டாம் கிருட்டிணராச உடையார் 1734-1766
நஞ்சராச உடையார் 1766-1772
எட்டாம் சாமராச உடையார் 1772-1776
ஒன்பதாம் சாமராச உடையார் 1776-1796
பிரித்தானியருக்கு அடங்கிய உடையார்கள்
மூன்றாம் கிருட்டிணராச உடையார் 1796-1868
பத்தாம் சாமராச உடையார் 1881-1894
நான்காம் கிருட்டிணராச உடையார் 1894-1940
செயசாமராச உடையார் 1940-1950
கௌரவ அரச உடையார்கள்
செயசாமராச உடையார் 1950-1974
சிறீகண்ட உடையார் 1974-2013
யதுவீர் கிருட்டிணதத்த சாமாரச உடையார் 2015-

மகாராசா சிறீ இம்மிடி சிக்க கிருட்டிணராச உடையார் (கன்னடம்: ಇಮ್ಮಡಿ ಕೃಷ್ಣರಾಜ ಒಡೆಯರ್, - 25 ஏப்ரல் 1766) அல்லது இரண்டாம் இம்மடி கிருட்டிணராச உடையார்என்பவர் மைசூரின் மன்னராக 1734 முதல் 1766 வரை இருந்தவர்.[2] இவர் ஐதர் அலியின் கட்டுப்பாட்டில் இருந்தவர்.

வாழ்க்கை[தொகு]

இவர் 8.அக்டோபர் 1731 இல் சௌபாக்கியவதி மகாராணி சிறீ தேவசம்மா என்னும் தேவராச அம்மணி அவரு (முதலாம் கிருட்டிணராச உடையாரின் மனைவி) அவர்களால் தத்து எடுக்கப்பட்டு, சிக்க கிருட்டிண தேவராச உடையார் என்ற பெயருடன் தளவாயால் பட்டம் சூட்டப்பட்டார். மன்னர் தளவாயின் கட்டுப்பாட்டிலும், ஐதர் அலியின் கட்டுப்பாட்டிலும் இருந்தார். தன் அதிகாரத்தை பெருக்கிக்கொள்ள முதலமைச்சர் நஞ்சராசன் தன்மகளை மன்னருக்கு திருமணம் செய்துவித்தார்.[3]

ஐதர் அலியின் வளர்ச்சி[தொகு]

இம்மன்னர் காலத்தில் முதலமைச்சரான நஞ்சராசன் 1749ஆம் ஆண்டு தேவனிள்ளியை முற்றுகையிட்டான். அம்முற்றுகை ஒனபது மாதகாலம் நடைபெற்றது. அம்முற்றுகையின்போது ஐதர் அலி என்ற இளைஞன் வெகு சாமார்த்தியமாகப் போர்புரிந்தான். அதைக்கண்ட நஞ்சராசன் அந்த இளைஞனுக்கு ஒரு பதவி கொடுத்து 200 காவலாட்களுக்கும், 50 குதிரைகளுக்கும் தலைவனாக்கினான். இவனே பிற்காலத்தில் படிப்படியாக உயர்ந்து மைசூர் இராஜ்ஜியத்துக்கே தலைமைவகிக்கும் நிலையை அடைந்தான். மன்னரையும் தன்கட்டுப்பாட்டில் கொண்டுவந்தான். [4]

குறிப்புகள்[தொகு]

  1. MYSORE The Wodeyar Dynasty GENEALOGY
  2. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2017-02-24. பார்க்கப்பட்ட நாள் 2015-01-01.
  3. தகடூர் வரலாறும் பண்பாடும் இரா.இராமகிருட்டினன் பக். 320
  4. ம.இராமச்சந்திரன் செட்டியார், கொங்கு நாட்டு வரலாறு,பக்கம். 372-374