1-ஆம் ஆயிரமாண்டு
Appearance
(முதலாம் ஆயிரவாண்டு இலிருந்து வழிமாற்றப்பட்டது)
ஆயிரமாண்டு: | |
---|---|
நூற்றாண்டு: |
முதலாம் ஆயிரமாண்டு (1st millennium) என்பது யூலியன் நாட்காட்டியின் படி கிபி 1 ஆம் ஆண்டு சனவரி 1 இல் தொடங்கி, கிபி 1000 டிசம்பர் 31 இல் முடிவடைந்த ஓர் ஆயிரமாண்டாகும்.
இதற்கு முந்தைய ஆயிரமாண்டில் மும்மடங்காக அதிகரித்த உலக மக்கள் தொகை இந்த ஆயிரமாண்டுகளில் மிக மெதுவாகவே வளர்ந்தது. 170-மில்லியன்களில் இருந்து 300-ஆக அதிகரித்தது என்று ஒரு கணிப்பும், மற்றையது 400-லிருந்து 250-க்கு குறைந்ததாகவும் மதிப்பிடுகிறது.
கிழக்காசியாவில் பௌத்தம் பரவியது. சீனாவில், ஆன் அரசமரபு வீழ்ச்சியடைந்து யின் அரசமரபும் பின்னர் தாங் அரசமரபும் ஆட்சியில் அமர்ந்தன. சப்பானில் மக்கள்தொகையில் பெரும் ஏற்றம் காணப்பட்டது. விவசாயிகள் இரும்பினாலான கருவிகளைப் பெரிதும் பயன்படுத்த ஆரம்பித்தனர். இந்தியத் துணைக்கண்டம் பல இராச்சியங்களாகப் பிளவடைந்தது.
நிகழ்வுகள்
[தொகு]- இயேசுவின் வெளிப்படை வாழ்வும் அவரது சிலுவை மரணமும் (29-30) நடைபெற்றது.
- யூத-உரோமைப் போர்கள் (66–136) 70 வருடங்கள் நடைபெற்றன.
- இசுலாம் ஆரம்பம் (7ம் நூற்றாண்டு)