சப்பானிய வரலாறு
சப்பானிய வரலாறு, சப்பானிய மக்களின் வரலாற்றையும், பண்டைய சப்பான், தற்கால சப்பான், சப்பானிய தீவுகள் ஆகியவற்றின் வரலாற்றையும் உள்ளடக்கியது. சுமார் கி.பி 12,000-ம் ஆண்டு முதல் சப்பானிய தீவுகளில் மனித நடமாட்டம் இருந்து வருகிறது. சப்பானில் கண்டுபிடிக்கப்பட்ட பழமையான மண்பான்டங்கள் சோமான் காலத்தைச் சேர்ந்தவை. முதலாம் நூற்றாண்டில் சப்பான் இருந்ததாக செங்க்சி (二十四史) என்ற நூலில் குறிப்பிடப்பட்டுள்ளது.[1]
சப்பானின் தலைநகராக 710-ம் ஆண்டு முதல் நாராசி (奈良市) என்ற இடம் இருந்தது; புத்த மதத்தின் கலை, மதம் மற்றும் கலாச்சாரத்தை பிரதிபலிக்கும் மையமான நகராக விளங்கியது. 700-ம் ஆண்டு முதல் தற்போதுள்ள பேரரசுக் குடும்பத்தினர் ஆட்சியில், 1868-ம் ஆண்டும் வரை அதிக பெருமையுடனும் ஆனால் குறைந்த அளவு அதிகாரத்துடன் இருந்தனர். சுமார் 1550-ம் ஆண்டில் அரசியல் அதிகாரம் நூற்றுக்கும் மேற்பட்ட சிறிய குழுக்களுக்கு பகிர்ந்தளிக்கப்பட்டது. டைம்யோ (大名) என்ற குறுநில ஆட்சியாளர்கள், தங்களுடைய சாமுராய் (侍) வீரர்கள் மூலம் தங்களுடைய நிலங்களை பாதுகாத்தனர்.
1600-ம் ஆண்டு ஆட்சிக்கு வந்த டொக்குகவா இயாசு (徳川 家康) தன்னுடைய நிலத்தை தன்னுடைய ஆதரவாளர்களுக்கு கொடுத்து, ஈடோ (புதிய டோக்கியோ) என்ற இடத்தில் "பகுஃபு" (கூட்டாட்சி அரசு) அமைப்பை உருவாக்கினார். "டொக்குகவா காலம்" மிகவும் அமைதியாகவும், வளம் மிகுந்ததாகவும் இருந்தது. சப்பானிலுள்ள அனைத்து கிறுத்துவ இயக்கங்கள் மூடப்பட்டு, உலகில் மற்ற பகுதிகளுக்கான தொடர்புகளை இழந்து இருந்தது.
கால அட்டவணை[தொகு]
பொதுவான வரலாற்றுக் கால அட்டவணை :
திகதி | காலம் | காலம் | துணைக்காலம் | அரசாங்கம் |
---|---|---|---|---|
30,000–10,000 கிமு | பழைய சப்பானிய கற்காலம் | - | ||
10,000–300 கிமு | பண்டைய சப்பான் | சோமான் காலம் | குறுநில ஆட்சியர்கள் | |
900 கிமு – 250 கிபி | யாயோயி காலம் | |||
c. 250–538 கிபி | கோஃபுன் காலம் | யமாதோ குறுநில ஆட்சியர்கள் | ||
538–710 AD | பழமையான சப்பான் | அசுகா காலம் | ||
710–794 | நாரா காலம் | Emperor of Japan | ||
794–1185 | ஹையன் காலம் | |||
1185–1333 | Feudal Japan | காமகுரா காலம் | Kamakura shogunate | |
1333–1336 | Kemmu Restoration | Emperor of Japan | ||
1336–1392 | முரோமச்சி காலம் | நண்போக்கு-ச்சோ | Ashikaga shogunate | |
1392–1467 | ||||
1467–1573 | செங்கோக்கு காலம் | Ashikaga shogunate, daimyōs, Oda Nobunaga, Toyotomi Hideyoshi | ||
1573–1603 | அசுச்சி - மோமோயாமா காலம் | |||
1603–1868 | Early Modern Japan | எடோ காலம் | Tokugawa shogunate | |
1868–1912 | நவீன சப்பான் | மெய்ஜி காலம் | Pre-war | Emperor of Japan |
1912–1926 | தாய்சோ காலம் | |||
1926–1945 | சோவா காலம் | |||
1945–1952 | Contemporary Japan | Shōwa (Occupied Post-war) | Post-war | Supreme Commander for the Allied Powers |
1952–1989 | Shōwa (Post-occupation) | Parliamentary democracy | ||
1989–present | ஹைசேய் காலம் |
இதனையும் பார்க்கவும்[தொகு]
குறிப்புகளும் மேற்கோள்களும்[தொகு]
- ↑ Jacques Gernet (1996). A History of Chinese Civilization. Cambridge University Press. பக். 290. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:0-521-49781-7. http://books.google.com/books?id=jqb7L-pKCV8C&pg=PA290.