இரண்டாம் சீன-சப்பானியப் போர்
இக்கட்டுரை தமிழாக்கம் செய்யப்பட வேண்டியுள்ளது. இதைத் தொகுத்துத் தமிழாக்கம் செய்வதன் மூலம் நீங்கள் இதன் வளர்ச்சியில் பங்களிக்கலாம். |
இரண்டாம் சீன-சப்பானியப் போர் | |||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|
1941 முதல் இரண்டாம் உலகப் போரின் பசிபிக் போர் பகுதி பகுதி | |||||||||
|
|||||||||
பிரிவினர் | |||||||||
சீன மக்கள் குடியரசு [a] with Foreign support
| சப்பான்
with Collaborator support
|
||||||||
தளபதிகள், தலைவர்கள் | |||||||||
சங் கை செக் Chen Cheng | ஹிரோஹிட்டோ Korechika Anami |
||||||||
பலம் | |||||||||
5,600,000 சீனர்கள் 3,600 சோவியத் ஒன்றிய வீரர்கள் (1937–40) 900 அமெரிக்க வானூர்திகள் (1942–45)[1] | 4,100,000 சப்பானிய வீரர்கள் [2] 900,000 எதிரிகளின் கூட்டாளிகளான சீனர்கள்[3] |
||||||||
இழப்புகள் | |||||||||
தேசியவாதிகள்: 1,320,000 கொல்லப்பட்ட வீரர்கள், 1,797,000 காயமடைந்த வீரர்கள், 120,000 காணாமல் போன வீரர்கள், மற்றும் 17,000,000–22,000,000 பொதுமக்கள் பலி [4] Communist: 500,000 KIA and WIA. | Japanese estimates—including 480,000 dead in total and 1.9 million military casualties [5] [b] 1937–1941: 185,647 dead, 520,000 wounded, and 430,000 sick; 1941–1945: 202,958 dead; another 54,000 dead after war's end.[5][c] Contemporary PRC studies: 1,055,000 dead Nationalist Chinese (ROC) estimates—1.77 million deaths, 1.9 million wounded[7] |
||||||||
|
இந்தக் கட்டுரை சீன உரையைக் கொண்டுள்ளது. சரியான ஒழுங்கமைவு ஆதரவில்லையெனில், உங்களுக்கு கேள்விக்குறிகளோ, கட்டங்களோ அல்லது மற்ற குறியீடுகளோ சீன எழுத்துருக்களுக்கு பதிலாக தெரியலாம். |
இரண்டாம் சீன-சப்பானியப் போர் (Second Sino-Japanese War, சூலை 7, 1937 – செப்டம்பர் 9, 1945) என்பது சீனக் குடியரசுக்கும் சப்பானியப் பேரரசுக்கும் இடையில் இடம்பெற்ற போரைக் குறிக்கும். சூலை 1937ல், சப்பான், மார்கோ போலோ பாலம் சம்பவம் நடந்த பிறகு, சீனாவின் முந்தைய தலை நகரான பெய்ஜிங்கை கைப்பற்றியது.இந்நிலையில் 1937-இல் சியாங்கே ஷேக் கம்யூனிஸ்டுகளுடன் இணைந்து ஐக்கிய கூட்டமைப்பை உருவாக்கினார். இந்த சம்பவம் சப்பான் முழுமையான சீன ஆக்கிரமிப்பு நடவடிக்கை எடுக்க வித்திட்டது. இந்த நேரத்தில் விரைவாக செயல்பட்ட சோவியத் ஒன்றியம், சீனாவுக்கு தளவாடங்கள் வழங்கி உதவி செய்ய ஒப்பந்தம் செய்து கொண்டது. இதன் மூலம் சீன - செருமனி ஒத்துழைப்பு (1911 - 1941) முடிவுக்கு வந்தது. சீனப் போர்ப்படை தளபதி சங் கை செக் ஷாங்காய் நகரத்தை பாதுகாக்க ஜெர்மனியால் பயிற்றுவிக்கப்பட்ட தனது சிறந்த படைபிரிவை பயன்படுத்தியும் மூன்று மாதங்களுக்கு பிறகு ஷாங்காய் நகரம் ஜப்பானியர்கள் வசம் வீழ்ந்தது. ஜப்பானிய படைகள் சீனப்படைகளை பின்தள்ளி முன்னேறி டிசம்பர் 1937ல் தலைநகர் நாஞ்சிங்கை கைப்பற்றின. இதன்பின் நடந்த நாஞ்சிங் படுகொலை சம்பவத்தில் பல்லாயிரக்கணக்கான பொதுமக்களும் சரணடைந்த சீன வீரர்களும் கொல்லப்பட்டனர். பல்லாயிரக்கணக்கான சீனப்பெண்கள் ஜப்பானிய ராணுவ வீரர்களால் கற்பழிக்கப்பட்டனர்.
ஜூன் 1938ல், சீன படைகள் ஜப்பானிய படைகளின் முன்னேற்றத்தை தடுக்க மஞ்சள் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்படுத்தின. இதன் மூலம் சீனப்படையினருக்கு வுஹன் (Wuhan) நகரத்தில் தற்காப்பு முயற்சிகள் எடுக்க சிறிது நேரம் கிடைத்தது. ஆனாலும் வுஹன் நகரம் அக்டோபர் மாதத்தில் ஜப்பானிய படையினரிடம் வீழ்ந்தது. ஜப்பானியர்கள் எதிர்பார்த்தது போல் இந்த வெற்றிகளால் சீனர்களின் எதிர்ப்பை முறியடிக்க முடியவில்லை. சீன அரசாங்கம் தனது இருப்பிடத்தை நாட்டின் உட்பகுதிக்கு மாற்றி அங்கிருந்து போரை தொடர்ந்தது.
பின்னணி
[தொகு]முதலாவது சீன-சப்பானியப் போர்
[தொகு]இரண்டாம் சீன-சப்பானியப் போரின் தோற்றம் 1894–95 ஆம் ஆண்டுகளில் இடம்பெற்ற முதலாவது சீன-சப்பானியப் போரில் இருந்து ஏற்பட்டது. முதலாவது சீன-சப்பானியப் போரில் சிங் அரசமரபின் கீழ் இருந்த சீனா, சப்பானால் தோற்கடிக்கப்பட்டது. சிங் அரசமரபு உள்நாட்டு எழுச்சிகள் மற்றும் வெளிநாட்டு ஏகாதிபத்தியம் என்பவற்றின் காரணமாக வீழ்ச்சியின் விளிம்பில் காணப்பட்ட அதேவேளை சப்பான் நவீனமயமாக்கம் போன்ற பயனுள்ள நடவடிக்கைகளை மேற்கொண்டு ஒருபாரிய சக்தியாக உருவெடுத்தது.[8]
சீனக் குடியரசு
[தொகு]சிங்காய் புரட்சியின் மூலம் சிங் அரசமரபின் ஆட்சி கவிழ்க்கப்பட்டு, சீனக் குடியரசானது 1912 ஆம் ஆண்டு நிறுவப்பட்டது. இருந்தபோதிலும், மத்திய அதிகாரம் சிதைவுற்றதுடன் குடியரசு அதிகாரம் பிராந்திய யுத்தப் பிரபுக்களினது என்று உள்ளானது. நாட்டை ஒன்றிணைத்தலும் ஏகாதிபத்தியத்தை முறியடித்தலும் மிகவும் தொலைவான வாய்ப்புடையனவாக இருந்தன.[9] சில பிராந்திய யுத்தப் பிரபுக்கள் ஏனைய பிராந்திய யுத்தப் பிரபுக்களை வெளியேற்றும் நோக்குடன் பல்வேறு வெளிநாட்டு சக்திகளுடன் தாம் கூட்டுச்சேர்ந்துகொண்டனர். உதாரணமாக, மஞ்சூரியாவின் பிராந்திய யுத்தப் பிரபுவாகிய சாங் சுவோலின், இராணுவ மற்றும் பொருளாதார உதவியைப் பெறும் பொருட்டு, சப்பானியர்களுடன் வெளிப்படையாக ஒத்துழைத்தார்.[10]
இருபத்தொரு கோரிக்கைகள்
[தொகு]1915 ஆம் ஆண்டு, சீனாவிடம் இருந்து அரசியல் மற்றும் வர்த்தக உரிமைகளை மேலும் பறிக்கும் பொருட்டு இருபத்தொரு கோரிக்கைகளைச் சப்பான் வெளியிட்டது.[11]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ Taylor, Jay, The Generalissimo, p.645.
- ↑ Chung Wu Taipei "History of the Sino-Japanese war (1937–1945)" 1972 pp 535
- ↑ Jowett, Phillip, Rays of the Rising Sun, p.72.
- ↑ Clodfelter, Michael "Warfare and Armed Conflicts: A Statistical Reference", Vol. 2, pp. 956.
- ↑ 5.0 5.1 Dower, John "War Without Mercy", pp. 297.
- ↑ Liu Feng, (2007). "血祭太阳旗: 百万侵华日军亡命实录". Central Compilation and Translation Press. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-7-80109-030-0. Note: This Chinese publication analyses statistics provided by Japanese publications.
- ↑ R. J. Rummel. China's Bloody Century. Transaction 1991 பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-88738-417-X.
- ↑ Wilson, Dick, When Tigers Fight: The story of the Sino-Japanese War, 1937–1945, p.5
- ↑ Wilson, Dick, p.4
- ↑ "Foreign News: Revenge?". Time magazine. August 13, 1923 இம் மூலத்தில் இருந்து டிசம்பர் 22, 2008 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20081222152155/http://www.time.com/time/magazine/article/0,9171,727322,00.html.
- ↑ Hoyt, Edwin P., Japan's War: The Great Pacific Conflict, p.45