பேச்சு:1-ஆம் ஆயிரமாண்டு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

ஆயிரவாண்டா அல்லது ஆயிரமாண்டா?

  • ஆயிர+ஆண்டு=ஆயிரவாண்டு
  • ஆயிரம்+ஆண்டு=ஆயிரமாண்டு

இது சரியாயின் ஆயிரமாண்டு என்பதே பொருத்தமாகும். --கோபி 19:11, 16 டிசம்பர் 2006 (UTC)

தமிழ் விக்கிபீடியா தவிர்த்து ஆயிரவாண்டு என்று எங்கும் எழுதக் கண்டதில்லை. ஆயிரமாண்டு தான் சரி.--Ravidreams 09:33, 17 டிசம்பர் 2006 (UTC)

தலைப்பை ஒன்றாம் அல்லது 1 ஆம் என மாற்றப் பரிந்துரைக்கிறேன். யாருக்கும் மறுப்பில்லையெனில் 2ம் 3ம் என வரும் அனைத்தையும் 2 ஆம் 3 ஆம் என மாற்ற வேண்டி உள்ளது. . --மரு. பெ. கார்த்திகேயன் (karthi.dr) 08:15, 3 பெப்ரவரி 2012 (UTC)

ஒன்றாம் என எவரும் எழுதுவதில்லை. முதலாம் என்றேயெழுதுவார்கள். அதே நேரம், 1ம் என எழுதுவதிலும் தவறில்லை என்றே நினைக்கிறேன்.--Kanags \உரையாடுக 09:52, 3 பெப்ரவரி 2012 (UTC)
ஆம் முதலாம் ஆயிரமாண்டு, இரண்டாம் ஆயிரமாண்டு 26-ஆம் ஆயிரமாண்டு என்று வரவேண்டும். ஆயிரவாண்டு என்றும் வரலாமா என்ரு தெரியவில்லை. "ஒன்றாம்" என்பது தவறு (one-th என்பது போல), ஆனால் 1-ஆம், 2-ஆம், 3-ஆம் என்று வரலாம். 2-ம் என்று என்றால் அது 2-உம் ஆ அல்லது 2- ஆம் ஆ என்னும் தெளிவு இருக்காது (பல நேரங்களில் இது குழப்பம் ஏற்படுத்தாது). எப்படியாயினும், எல்லா இடங்களிலும் ஒரே முறையைப் பின்பற்றுவது நல்லது.--செல்வா 11:50, 3 பெப்ரவரி 2012 (UTC)

ஒன்றாம் தேதி சம்பளம் என்பதை விட முதல் தேதி சம்பளம் என்பதே நல்வழக்கு என்பதை மறந்துவிட்டேன். பேரா. செல்வா குறிப்பிட்டது போல் 2-ம் என்று என்றால் அது 2-உம் ஆ அல்லது 2- ஆம் ஆ என்னும் தெளிவு இருக்காது. ஆகவே விக்கிப்பீடியாவில் அனைத்து இடங்களிலும் ஆண்டுகட்குப் பின் வரும் ம் என்பதை ஆம் என மாற்றலாம். --மரு. பெ. கார்த்திகேயன் (karthi.dr) 12:18, 3 பெப்ரவரி 2012 (UTC)

மரு. பெ. கார்த்திகேயன் (karthi.dr) கூறிய படி 1ஆம் ஆயிரவாண்டு என்ற தலைப்புக்குக் கட்டுரை நகர்த்தப்பட்டுள்ளது. 1ஆம் ஆயிரமாண்டு என்று தலைப்பு வருவதே பொருத்தமானதாக இருக்கும். இது குறித்து அனைவரும் ஒருமித்த முடிவு ஒன்றுக்கு வருவது நல்லது. --மதனாஹரன் (பேச்சு) 04:18, 10 மார்ச் 2012 (UTC)