மாஸ்டர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
மாஸ்டர்
இயக்கம்லோகேஷ் கனகராஜ்
தயாரிப்புசேவியர் பிரிட்டோ, சுனே
கதைலோகேஷ் கனகராஜ்
ரத்ன குமார்
இசைஅனிருத் ரவிச்சந்திரன்
நடிப்புவிஜய்
விஜய் சேதுபதி
ஒளிப்பதிவுசத்யன் சூரியன்
படத்தொகுப்புபிலோமின் ராஜ்
வெளியீடுசனவரி 13, 2021 (2021-01-13)
நாடுஇந்தியா
மொழிதமிழ்

மாஸ்டர் என்பது 2021 ஆம் ஆண்டு வெளியான தமிழ் மொழி சண்டை பரபரப்பூட்டும் திரைப்படம் ஆகும்.[1][2][3] லோகேஷ் கனகராஜ் என்பவர் எழுதி மற்றும் இயக்க சேவியர் பிரிட்டோ, சுனே ஆகியோர் தயாரித்துள்ளனர்.

இந்தத் திரைப்படத்தில் விஜய், விஜய் சேதுபதி, மாளவிகா மோகனன் ஆகியோர் முக்கியக் கதாப்பத்திரத்தில் நடித்துள்ளார்கள். அனிருத் ரவிச்சந்திரன் இசையமைத்திருக்கும் இப்படத்திற்கான ஒளிப்பதிவு சத்யன் சூரியன் மற்றும் படத்தொகுப்பு பிலோமின் ராஜ். இந்த படம் 2021 ஜனவரி 13 அன்று வெளியானது.

நடிகர்கள்[தொகு]

ஒலிப்பதிவு[தொகு]

மாஸ்டர்
ஒலிப்பதிவு
வெளியீடு2020
ஒலிப்பதிவு2019–20
இசைப் பாணிதிரைப்பட ஒலிப்பதிவு
நீளம்5:02
இசைத்தட்டு நிறுவனம்சோனி மியூசிக்
இசைத் தயாரிப்பாளர்அனிருத் ரவிச்சந்திரன்
அனிருத் ரவிச்சந்திரன் chronology
தர்பார்
(2020)
மாஸ்டர்
(2020)
இந்தியன் 2
(2021)
Singles from {{{Name}}}

இந்த படத்திற்கான இசை அனிருத் ரவிச்சந்திரன் இசையமைத்துள்ளார். முதல் பாடல் விஜய் பாடிய 'குட்டி ஸ்டோரி', இது பிப்ரவரி 14, 2020 அன்று வெளியிடப்பட்டது.

தமிழ்

Track list
# பாடல்வரிகள்பாடகர்கள் நீளம்
1. "குட்டி கதை"  அருண்ராஜா காமராஜ்விஜய், அனிருத் ரவிச்சந்திரன் 5:02
மொத்த நீளம்:
5:02

தயாரிப்பு[தொகு]

ஆகஸ்ட் 2019 இல் சேவியர் பிரிட்டோ தயாரிக்கும் படத்தில் விஜய்யுடன் இணைந்து பணியாற்றப்போவதாக இயக்குனர் லோகேஷ் கனகராஜ் டுவிட்டரில் பதிவு செய்துள்ளார். இந்தச் செய்தியுடன் படத்தில் அனிருத் ரவிச்சந்திரன் இசை இயக்குனராகவும், சில்வா சண்டை இயக்குனராகவும், சத்யன் சூரியன் மற்றும் பிலோமின் ராஜ் ஆகியோர் ஒளிப்பதிவாளராகவும் பணியாற்றப்போவதாகக் குறிப்பிட்டுள்ளார்.[21]

மற்ற நடிகர்களாக மாளவிகா மோகனன்,[22] சாந்தனு பாக்யராஜ் மற்றும் ஆண்டனி வர்கீஸ் ஆகியோர்கள் தெரிவு செய்யப்பட்டனர். ஆண்டனி வர்கீஸ் இந்தத் திரைப்படத்தின் மூலம் தமிழ் திரைப்படத் துறைக்கு அறிமுகமாக இருந்தார். ஆனால் சில காரணங்களால் இந்தத் திரைப்படத்திலிருந்து விலக,[23] கைதி திரைப்பட வில்லன் அர்ஜுன் தாஸ் என்பவர் இவரின் கதாபாத்திரத்திற்குத் தேர்வு செய்யப்பட்டு ஒப்பந்தம் செய்யப்பட்டார்.[24]

அக்டோபர் 2019 அன்று மேயாத மான் (2017) மற்றும் ஆடை (2019) ஆகியவற்றை இயக்கிய இயக்குனர் ரத்ன குமார் என்பவர் லோகேஷுடன் சேர்ந்து இந்தத் திரைப்படத்திற்கான திரைக்கதையை இணைந்து எழுதுவதாக டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.[25]

சந்தைப்படுத்தல்[தொகு]

இந்தத் திரைப்படத்திற்கான முதல் சுவரொட்டி டிசம்பர் 31, 2019 இல் புத்தாண்டு அன்று படத்தின் அதிகாரப்பூர்வ தலைப்புடன் வெளியிடப்பட்டது.[26]

இரண்டாவது சுவரொட்டி ஜனவரி 15, 2020 தைப்பொங்கல் தினத்தில் வெளியிடப்பட்டது.[27] மூன்றாவது சுவரொட்டி ஜனவரி 26, 2020 இந்திய குடியரசு தினத்தில் வெளியிடப்பட்டது.[28]

முதல் ஒற்றை பாடல் "குட்டி ஸ்டோரி" என்று பெயரிடப்பட்டு பிப்ரவரி 14 ஆம் தேதி வெளியானது. இந்தப் பாடலை விஜய் மற்றும் அனிருத் ரவிச்சந்திரன் இணைந்து பாடியுள்ளார்கள். இந்தப் பாடலின் வரிகள் 90 சதவீதம் ஆங்கிலத்தில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.[29]

சர்ச்சை[தொகு]

பிப்ரவரி 7, 2020 அன்று நெய்வேலியில் மாஸ்டர் திரைப்படத்தின் படப்பிடிப்பு நடந்து கொண்டிருந்த தருணத்தில் பாரதிய ஜனதா கட்சியைச் (பிஜேபி) சேர்ந்த சுமார் 20 உறுப்பினர்கள் திரைப்படத்தளத்திற்கு முன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். படப்பிடிப்புக்கு அனுமதி வழங்கியதற்காக என்.எல்.சி நிர்வாகத்திற்கு எதிராக பாஜக உறுப்பினர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.[30] படக்குழுவினர் படப்பிடிப்புக்கு அனுமதி பெற்றிருந்தாலும், இது மிகவும் பாதுகாப்பற்ற பகுதி என்றும், இது ஒரு திரைப்படப் படப்பிடிப்புக்கான இடம் அல்ல என்றும் படப்பிடிப்பு நிறுத்தப்படாவிட்டால் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவிப்பதாகவும் பாஜக உறுப்பினர்கள் கூறினர்.[31]

நடிகருக்கு ஆதரவாக ரசிகர்கள் பலர் வரத் தொடங்கினர் மற்றும் கட்சி ஊழியர்களுக்கு எதிர்ப்பு தெரிவித்தனர். எதிர்ப்பாளர்களும் ரசிகர்களும் காவல்துறையினரின் தலையீட்டிற்குப் பிறகு வெளியேறினர்.[32]

மேற்கோள்கள்[தொகு]

 1. "Team Master arrives in Mumbai; second schedule begins" (November 2019).
 2. "Vijay's 'Master' adds Andrea Jeremiah, Gouri G Kishan to cast". தி இந்து. 31 October 2019. https://www.thehindu.com/entertainment/movies/vijays-thalapathy-64-adds-andrea-jeremiah-gouri-g-kishan-to-cast/article29843068.ece/amp/. 
 3. "Vijay's Thalapathy 64 launched with a puja ceremony, see pic" (en) (3 October 2019).
 4. "Thalapathy 64 first look poster: Vijay's next is titled 'Master' – Times of India".
 5. "Master (2020 film): Antony Varghese out, Kaithi star Arjun Das hops on board".
 6. Subramanian, Anupama (30 October 2019). "Andrea joins Thalapathy Yogi Babu 64".
 7. "Thalapathy 64 actress Malavika Mohanan jets off on a vacation after wrapping up fight scenes with co-star Vijay Sethupathi – Times of India".
 8. "Shanthnu Bhagyaraj to join Thalapathy 64? – Times of India" (en).
 9. "Nassar to play the role of a senior professor in 'Thalapathy 64'? – Times of India".
 10. 15 ஆண்டுகளுக்கு பின் விஜய் உடன் இணையும் நாகேந்திர பிரசாத் – Nagendra Prasad – Vijay together after 15years. Cinema.dinamalar.com (7 December 2019). Retrieved on 2020-02-22.
 11. Thalapathy Vijay’s Master actor Nagendra Prasad’s exclusive interview. Behindwoods.com (15 January 2020). Retrieved on 2020-02-22.
 12. Comedian Dheena to join Vijay’s Thalapathy64 | Tamil Movie News – Times of India. Timesofindia.indiatimes.com (12 December 2019). Retrieved on 2020-02-22.
 13. "Thalapathy 64 first-look out: Vijay's next called 'Master' ridden with mystery".
 14. Thalapathy 64: Will Lokesh Kanagaraj wrap up Vijay's film by mid-February? – Movies News. Indiatoday.in (17 November 2019). Retrieved on 2020-02-22.
 15. World, Republic. "Vijay starrer 'Thalapathy 64' first look release date announced".
 16. "Playback singer Soundarya Nandakumar joins Thalapathy 64: Working with Vijay sir is vera level". India Today. Ist. https://www.indiatoday.in/movies/regional-cinema/story/playback-singer-soundarya-nandakumar-joins-thalapathy-64-working-with-vijay-sir-is-vera-level-1619833-2019-11-17. 
 17. Desk, The Hindu Net (31 December 2019). "Vijay's 'Thalapathy 64' now titled 'Master'". The Hindu. https://www.thehindu.com/entertainment/movies/vijays-thalapathy-64-now-titled-master/article30443534.ece. 
 18. "Malayalam actor Lintu Rony joins Lokesh Kanakaraj's 'Thalapathy 64'". 12 November 2019. https://www.thenewsminute.com/article/malayalam-actor-lintu-rony-joins-lokesh-kanakarajs-thalapathy-64-112202. 
 19. https:/www.indiaglitz.com/the-new-addition-to-thalapathy-64-is-this-heros-brother-tamil-_amp-news-248118
 20. Master Second look ft Thalapathy Vijay Vijay Sethupathi, Dir Rathnakumar tweet. Behindwoods.com (16 January 2020). Retrieved on 2020-02-22.
 21. "Maanagaram fame Lokesh Kanagaraj officially announces Thalapathy 64" (24 August 2019).
 22. "Malavika Mohanan joins Thalapathy 64" (2 October 2019).
 23. Desk, The Hindu Net (3 October 2019). "Vijay's 'Thalapathy 64' goes on floors" (in en-IN). The Hindu. https://www.thehindu.com/entertainment/movies/vijays-thalapathy-64-begins-shooting/article29583225.ece. 
 24. "Master (2020 film): Antony Varghese out, Kaithi star Arjun Das hops on board".
 25. "Thalapathy 64: Aadai director Rathna Kumar comes on board as an additional screenplay writer" (en).
 26. "Why is Vijay's Master poster blurry? Designer Gopi Prasanna reveals details".
 27. "Thalapathy 64 first-look out: Vijay's next called 'Master' ridden with mystery".
 28. 'Master' Third Look Is So Terrific. Thehansindia.com (26 January 2020). Retrieved on 2020-02-22.
 29. "Master - Kutti Story Lyric | Thalapathy Vijay | Anirudh Ravichander | Lokesh Kanagaraj".
 30. "BJP members protest at Neyveli Coal Mine during shooting of Vijay's Master, demand permission be withdrawn- Entertainment News, Firstpost" (en) (2020-02-08).
 31. ChennaiFebruary 8, Akshaya Nath. "Vijay's Master: BJP cadres protest at Neyveli to stop the film's shooting" (en).
 32. "BJP workers protest against Vijay, oppose shooting of 'Master'" (en).

வெளிப்புற இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=மாஸ்டர்&oldid=3315121" இருந்து மீள்விக்கப்பட்டது