அருண்ராஜா காமராஜ்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
அருண்ராஜா காமராஜ்
பிறப்பு1984
பேரூர், குளித்தலை, கரூர், தமிழ்நாடு, இந்தியா
பணிநடிகர், பாடகர், பாடலாசிரியர், எழுத்தாளர், நகைச்சுவை நடிகர், இயக்குனர்
செயற்பாட்டுக்
காலம்
2014 - முதல்

அருண்ராஜா காமராஜ் (ஆங்கிலம்:Arunraja Kamaraj) என்பவர் தமிழ் திரைப்பட துறையில் நடிகர், பாடகர், பாடலாசிரியர், எழுத்தாளர், நகைச்சுவை நடிகர், இயக்குனர் என பன்முகம் கொண்டவர். இவர் தெறி, பென்சில், கபாலி மற்றும் ஜிகர்தண்டா முதலிய திரைப்படங்களுக்கு பாடலாசிரியராக பணியாற்றி அனைவரின் பாராட்டைப் பெற்றார்.[1] மேலும் இவர் ராஜா ராணி திரைப்படத்தின் மூலம் ஒரு நடிகனாக அறிமுகமானார். மான் கராத்தே படத்தில் நெருப்பு குமார் என்ற கதாபாத்திரத்தில் நடித்தார்.[2][3][4][5]

ஆரம்ப வாழ்கை[தொகு]

அருண்ராஜா தமிழ்நாடு மாநிலத்தின், karur மாவட்டத்தில் உள்ள குளித்தலை நகரின் அருகில் பேரூர் என்ற ஊரில் 1984 ஆம் ஆண்டு பிறந்தார். இவர் தனது பள்ளிப்படிப்பை குளித்தலை அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் முடித்தார். இவர் தனது உயர் கல்வியை திருச்சி பிஷப் ஹெபேர் மேல்நிலைப்பள்ளியிலும், கல்லூரி படிப்பை திருச்சி ஜே. ஜே. பொறியியல் மற்றும் தொழில்நுட்ப கல்லூரியிலும் கற்றார்.

மேற்கோள்கள்[தொகு]

  1. "I got huge recognition because of Kabali". Times of India. Sharanya CR. 10 June 2016 அன்று பார்க்கப்பட்டது.
  2. "Theri Lyricist in Sivakarthikeyans Remo". iluvcinema.in. V. 2016-04-14 அன்று மூலம் பரணிடப்பட்டது. 2018-12-27 அன்று பார்க்கப்பட்டது.
  3. "Audio Beat: Jigarthanda - Fusion, folk, rap and more". The Hindu. S. R. Ashok Kumar.
  4. "Now, Rajinikanth credited in Kabali track list". Times of India. M Suganth. 10 June 2016 அன்று பார்க்கப்பட்டது.
  5. "Music Review: Trisha Illana Nayanthara". Times of India. Sharanya CR. 10 June 2016 அன்று பார்க்கப்பட்டது.
"https://ta.wikipedia.org/w/index.php?title=அருண்ராஜா_காமராஜ்&oldid=3541709" இருந்து மீள்விக்கப்பட்டது