ரம்யா சுப்பிரமணியன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ரம்யா சுப்பிரமணியன்
Ramya Subramanian-youtube.jpg
ஆடை திரைப்பட முன்னோட்ட வெளியீட்டு விழாவில் ரம்யா
பிறப்புஇந்திய ஒன்றியம், தமிழ்நாடு, தஞ்சாவூர்
பணிநடிகை, தொகைக்காட்சி தொகுப்பாளர்
செயற்பாட்டுக்
காலம்
2008–தற்போது வரை
வாழ்க்கைத்
துணை
Aparajith Jayaraman
(தி. 2014; ம.மு. 2015)

வி. ஜே. ரம்யா என்று அழைக்கப்படும் ரம்யா சுப்ரமணியன் (Ramya Subramanian) என்பவர் ஒரு இந்திய நடிகை மற்றும் தொலைக்காட்சி தொகுப்பாளர் ஆவார். இவர் தமிழ் திரைப்படத் துறையில் பணியாற்றுகிறார்.

தொழில்[தொகு]

ஒரு விழாவில் ரம்யா.

2004 இல் மிஸ் சென்னை போட்டியில் ரம்யா பங்கேற்றார் [1] விஜய் தொலைக்காட்சியில் கலக்கப்போவது யாரு?, உங்களில் யார் அடுத்த பிரபுதேவா?, நம்ம வீட்டு கல்யாணம், கேடி பாய்ஸ் கில்லாடி கேல்ஸ் உள்ளிட்ட தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை இவர் தொகுத்து வழங்கினார். [2] திருமணத்திற்குப் பிறகு, இவர் தொலைக்காட்சி பணிகளைக் குறைத்துக் பிற வேலையில் கவனம் செலுத்த அதிக விருப்பத்துடன் இருப்பதாக குறிப்பிட்டார். [3]

2007 ஆம் ஆண்டில், ரம்யா மொழி படத்தின் மூலம் திரைப்பட நடிகையாக அறிமுகமானார். [4] 2015 இல் மணிரத்னத்தின் ஓ காதல் கண்மணி படத்தில் துல்கர் சல்மானின் தோழி அனன்யாவாக தோன்றினார். [5] [6] அதே ஆண்டில், இவர் 92.7 பிக் வானொலியில் தொகுப்பாளர் ஆனார். [7] இவர் 2019 ஆகத்து மாதத்திற்கான வி இதழின் உடற்பயிற்சி சிறப்பு இதழின் அட்டைப்படத்தில் இடம்பெற்றார். [8]

தனிப்பட்ட வாழ்க்கை[தொகு]

ரம்யா சென்னையில் பிறந்தார். பத்மா சேஷாத்ரி பால பவனில் 10 ஆம் வகுப்பு வரையிலான பள்ளிப்படிப்பை முடித்தார். பின்னர் ஆதர்ஷ் வித்யாலயாவில் தனது 11 வது மற்றும் 12 வது படிப்பை தொடர்ந்தார்.[சான்று தேவை] பின்னர் இவர் சென்னை எம். ஓ. பி. வைணவ மகளிர் கல்லூரியில் காட்சித் தொடர்பியலில் இளம் அறிவியல் பட்டம் பெற்றார். [9]

இவர் 2014 இல் அபர்ஜித் ஜெயராமனை மணந்தார், இந்த இணையர் 2015 இல் பிரிந்தனர். [10]

திரைப்படவியல்[தொகு]

ஆண்டு படம் பாத்திரம் குறிப்புகள்
2007 மொழி பண்ணையாரின் மகள்
2011 மங்காத்தா செய்தியாளர்
2015 ஓ காதல் கண்மணி அனன்யா
மாசு என்கிற மாசிலாமணி செய்தியாளர்
2017 வனமகன் ரம்யா
2019 கேம் ஓவர் வர்ஷா இருமொழி திரைப்படம் (தமிழ் மற்றும் தெலுங்கு)
ஆடை ஜெனிபர்
2021 மாஸ்டர் ரம்யா
சங்கத்தலைவன் லட்சுமி

குறிப்புகள்[தொகு]

 

  1. "VJ Ramya Subramanian is a fitness pro; her workout videos will inspire you". The Times of India. 3 May 2019. 23 October 2020 அன்று மூலம் பரணிடப்பட்டது. 16 June 2021 அன்று பார்க்கப்பட்டது.
  2. Raghavan, Nikhil (3 March 2014). "ShotCuts: What a brainwave!". The Hindu. 16 June 2021 அன்று மூலம் பரணிடப்பட்டது. 16 June 2021 அன்று பார்க்கப்பட்டது.
  3. CR, Sharanya (22 March 2014). "I am choosy about my work now: Ramya". The Times of India. 6 October 2015 அன்று மூலம் பரணிடப்பட்டது. 10 January 2016 அன்று பார்க்கப்பட்டது.
  4. "VJ Ramya takes a 'kutty break' from social media to 'unplug'". The Times of India. 26 May 2020. 28 May 2020 அன்று மூலம் பரணிடப்பட்டது. 16 June 2021 அன்று பார்க்கப்பட்டது.
  5. "Ramya Subramanian moves to big screen". Sify. 30 November 2014. 13 October 2015 அன்று மூலம் பரணிடப்பட்டது. 10 January 2016 அன்று பார்க்கப்பட்டது.
  6. "VJ Ramya reveals she accepted OK Kanmani because of Mani Ratnam". IndiaGlitz. 20 April 2015. 20 July 2019 அன்று மூலம் பரணிடப்பட்டது. 16 June 2021 அன்று பார்க்கப்பட்டது.
  7. "Ramya is an RJ now". The Times of India. 1 September 2015. 5 September 2015 அன்று மூலம் பரணிடப்பட்டது. 22 October 2015 அன்று பார்க்கப்பட்டது.
  8. "Ramya Subramanian Exclusive Photoshoot". WE Magazine. 7 August 2019. 8 August 2019 அன்று மூலம் பரணிடப்பட்டது. 8 August 2019 அன்று பார்க்கப்பட்டது.
  9. Das, Papri (5 December 2013). "VJ Ramya is anchoring for the fun of it". Deccan Chronicle. 29 August 2019 அன்று மூலம் பரணிடப்பட்டது. 16 June 2021 அன்று பார்க்கப்பட்டது.
  10. "VJ Ramya confirms ending marriage". The Times of India. 12 September 2015. 11 August 2020 அன்று மூலம் பரணிடப்பட்டது. 25 June 2020 அன்று பார்க்கப்பட்டது.

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=ரம்யா_சுப்பிரமணியன்&oldid=3207925" இருந்து மீள்விக்கப்பட்டது