மாசச்சூசெட்ஸ் எரிவளி வெடிப்புகள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
மாசச்சூசெட்ஸ் எரிவளி வெடிப்புகள்
நேரம்மாலை 4:15 (கிநேவ)[1]
காலம்2 மணி 30 நிமி.
நாள்செப்டம்பர் 13, 2018 (2018-09-13)
அமைவிடம்மாசச்சூசெட்ஸ், ஐக்கிய அமெரிக்கா
வகைநெருப்பு
காரணம்வளிம செலுத்து வழியில் மேலதிக அழுத்தம்
இறப்புகள்1[2]
காயமுற்றோர்25+[3][4]
சொத்து சேதம்40 வீடுகள்[5]

2018 செப்டம்பர் 13 அன்று, அமெரிக்காவின் பாஸ்டன், மாசச்சூசெட்ஸ் ஊருக்கு வடக்கான பகுதிகளில் அதிகபட்சம் 40 இல்லங்கள் வெடிப்புகளாலும் தீக்களாலும் பாதிக்கப்பட்டன. உயர் அழுத்த எரிவளி குழாய்களின் கோளாறே இவற்றின் காரணம் என நம்பப்படுகிறது. இலாரன்சு, ஆண்டோவர், மற்றும் வட ஆண்டோவர் ஆகிய ஊர்கள் தீவிரமாக பாதிக்கப்பட்டன.[6][7]

தீக்களும் வெடிப்புகளும்[தொகு]

மிகச்சிறிய காலகட்டத்தில் ஏராளமான வெடிப்புகளும் தீக்களும் அறிவிக்கப்பட்டிருந்தன. தீயணைப்பு வீரர்கள் 60 முதல் 80 தீக்கள் வரை அணைக்க முயன்றனர் என மாசச்சூசெட்ஸ் நெருக்கடிநிலை மேலாண்மை வாரியத்தின் செயல்தலைவர் கர்ட் ஷ்வார்ட்ஸ் அவர்கள் தெரிவித்தார்.[8] ஒரே நேரத்தில் அதிகபட்சம் 18 தீக்கள் பற்றி எரிந்திருந்ததாகவும், 10 வது நிலை அவசரமாக இத்தீ மாறியதாகவும் ஆண்டோவர் அதிகாரிகள் அறிவித்தனர்.[9] கிழக்கத்திய நேரம், மதியம் சுமார் 4:15 மணிக்கு 911 நெருக்கடிநிலை மையத்திடம் தீக்களைப் பற்றிய பல அழைப்புகள் வந்ததாக ஆண்டோவர் தீயணைப்புத்துறையின் தலைவர் தெரிவித்தார்.[10] இலாரன்சில் முதலில் வெறும் 20 முதல் 25 இல்லங்கள் வரை மட்டுமே எரிந்துக்கொண்டிருந்ததாக கூறிய மெத்தூவென் காவல்துறை அதிகாரி, பின்னர் நகரத்தையும் அருகாமையில் உள்ள 2 ஊர்களையும் சேர்த்து, எண்ணிக்கையை 40 இல்லங்களாக அதிகரித்தார்.

ஆண்டோவர் ஊரின் தோற்றம் ஆர்மகெட்டான் போல் இருந்தது என ஆண்டோவர் தீயணைப்புத்துறையின் தலைவர் கூறினார்.  "இலாரன்சில் இருந்து வந்த மிகப்பெரிய அலைகளாய் புகை என் பின்புறத்தில் இருந்தது. என் முன்னே, ஆண்டோவர் ஊருக்குள் இருந்த அடர்த்தியான புகையும் தெரிந்தது. முழுமையில், ஒரு போர் மண்டலம் போல் எல்லாம் இருந்தது" எனவும் தெரிவித்தார். கிழக்கத்திய நேரம், மதியம் சுமார் 4:30 மணிக்கு தனது இல்லத்தின் அடித்தளத்தில் புகைப்பிடிப்பான் ஒலித்த போது, கொதிகலன் தீப்பற்றி எரிந்திருந்ததைக் கண்டறிந்து, அதை தீயணைப்பானால் அணைத்தப் பின்பு, அவரின் அண்டை வீட்டாரின் இல்லத்தில் இருந்து ஒரு மிகச்சப்தமான ஒலி கேட்டதாகவும் பூமி அதிர்ந்ததை உணர்ந்ததாகவும் ஒரு இலாரன்சுவாசி பத்திரிக்கையாளர்களிடம் தெரிவித்தார்.[11] மற்றொருவர் தனது இல்லத்தை விட்டு வெளியேற்றி, இரண்டு இல்லங்கள் தள்ளி குடியிருந்தவரின் இல்லம் வெடிப்பினால் சரிந்ததை தன் கண்ணால் பார்த்ததாக தெரிவித்துள்ளார். 

கிழக்கத்திய நேரம், மாலை 6:45 மணி நேரத்திற்குள் அனைத்து தீக்களும் அணைக்கப்பட்டன. சேத இழப்பீடுகள் அடுத்த நாள் காலையில் தொடங்கின.[12]

பலியானோர்[தொகு]

மூன்று பேரை அனுமதித்ததாகவும், அவர்களில் ஒருவர் தீயணைப்புத்துறையைச் சேர்ந்தவர் எனவும் இலாரன்சு பொது மருத்துவமனை அறிவித்தது.[13] வெடிப்புகளின் காரணமாக கிட்டத்தட்ட 25 பேர் பலியடைந்ததாகவும் ஒருவர் உயிரிழந்ததாகவும் அறிவிக்கப்பட்டது. உயிரிழந்த ஒருவர், 18 வயதான லியொனெல் ரொண்டன், இல்ல வெடிப்பில் இருந்து வீழும் புகைப்போக்கி ஒன்று தனது சீருந்தை தாக்கியதால் இழந்தார்.

காரணம்[தொகு]

உயர் அழுத்த எரிவளியின் காரணமாகத்தான் இம்மூன்று பகுதிகளைத் தாக்கப்பட்டதாகவும் கொலம்பியா எரிவளி வினியோக நிறுவனத்தை உபயோகப்படுத்துபவர்கள் அனைவரும் உடனே தங்களது இல்லங்களை விட்டு வெளியேற்ற வேண்டும் எனவும் அதிகாரிகள் அறிவித்தனர். தீக்களில் மோசடி இருந்ததற்கான எந்த விதமான அறிகுறியும் இல்லை.[14] தீக்களின் காரணமாக சுமார் 8000 நுகர்வோருக்கான எரிவளி வினியோகமும் "தீப்பொறியினால் தொடங்கும் தீக்களைக் கட்டுப்படுத்துவதற்காக" மூன்று ஊர்களின் பல பகுதிகளில் மின்சார சேவையும் முடக்கப்பட்டது.[15][16]

எதிர்வினைகள்[தொகு]

இலாரன்சு, ஆண்டோவர், மற்றும் வட ஆண்டோவர் ஊர்களைச் சேர்ந்த ஆயிரக்கணக்கானவர்கள் தங்களது எரிவளி குழாய்களை அணைக்கவும் இல்லங்களை விட்டு வெளியேற்றவும் ஊக்குவிக்கப்பட்டனர். இலாரன்சின் மேயர் டான் ரிவேரா அவர்கள் குடிமக்களை மெரிமக்கிய ஆற்றின் வடக்கு திசையில் செல்ல அறிவுறுத்தினார். மூன்று ஊர்களிலும் பள்ளிக்கூடங்களும் வயதானவர்கள் வசிக்கும் மையங்களும் வெளியேற்றியவர்களை ஏற்றுக்கொண்டன, மற்றும் அருகில் உள்ள தங்கும்விடுதிகள் தீக்களால் நேரடியாக பாதிக்கப்பட்டவர்களை இலவசமாக ஏற்றுக்கொண்டன.[17][18] ஊர்தியின் மூலம் வெளியேற்றுபவர்களின் எண்ணிகை அதிகரித்ததால், அலுவலக பயணிகளினால் ஏற்கனவே அதிக நெரிசல் ஏற்படும் சாலைகளும் நெடுஞ்சாலைகளும் இன்னும் மோசமாகின.[19] கூடுதலான வெடிப்புகளைத் தவிர்க்க எரிவளி மற்றும் மின்சாரம் சேவையும் முழுமையாக முடக்கப்பட்டது. மேலும், பாஸ்டன் மற்றும் மான்செஸ்டர் போன்ற அதிக தொலைதூரமான ஊர்களிடம் இருந்து பல அதிகாரிகள் இலாரன்சு, ஆண்டோவர் மற்றும் வட ஆண்டோவரை நோக்கி சென்றனர். மாசச்சூசெட்ஸின் மாநில ஆளுநர் சார்லி பேக்கர் அவர்கள் பொதுநிலையைக் கண்காணித்து, முதலுதவி மற்றும் பொதுக்காவல் அதிகாரிகளிடம் தொடர்பில் இருந்தார்.

வட ஆண்டோவரைச் சேர்ந்த மெரிமாக்கியக் கல்லூரி "அதிக முன்னெச்சரிக்கை" யை குறித்து  தனது அனைத்து மாணவர்களையும் ஊழியர்களையும் வெளியேற்ற வைத்து. பின்னர், கட்டிடங்கள் பாதுகாப்பானவை என அறிவித்து, கல்லூரி வளாகத்தை மறுமுறை திறந்தது. மூன்று ஊர்களிலும் பள்ளிக்கூடங்களும் மாநில அலுவலகங்களும் அடுத்த நாள், செப்டம்பர் 14 ஆம் தேதி முழுவதும், மூடியிருந்தன.[20]

தேசிய போக்குவரத்து காவல் வாரியமும் "குழாய் அமைப்பு, அதனது பராமரிப்பு, நெருக்கடிநிலை நடவடிக்கை, மற்றும் கொலம்பியா எரிவளி சேவையை ஆய்வு செய்ய" அடுத்த நாள் ஒரு விசாரணைக் குழுவை அனுப்பியது. சம்பந்தப்பட்ட எரிவளி நிறுவனம் தனது வலைதளத்தின் மூலம் தீக்களையும் வெடிப்புகளையும் பற்றிய பல புதுப்பிப்புகளை வெளியிட்டது.[21] இவை, இந்த "சோகத்தக்கச் சம்பவத்தைப்" பற்றியும் உயிரிழந்த ஒருவரைப் பற்றியும் அனுதாபம் தெரிவித்து, வாசகர்களைப் பற்றியும் சுயப்பாதுகாப்பைப் பற்றியும் தகவல்கள் கூறின.

மேலும் காணவும்[தொகு]

 • மாசச்சூசெட்ஸ் கொலம்பியா எரிவளி சேவை
 • கிழக்கு பாஸ்டன் எரிவாயு எழுச்சி

குறிப்புகள்[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

 1. Tim Stelloh and Tom Winter (September 13, 2018). "Gas explosion in Massachusetts leaves one dead". NBC News. பார்த்த நாள் September 14, 2018.
 2. "1 dead after Columbia Gas pressure issue leaves homes leveled, burned". WCVB Boston. பார்த்த நாள் September 13, 2018.
 3. Vanessa Romo. "Multiple Explosions And Fires Reported Across 3 Mass. Towns, At Least 10 Injured". NPR. பார்த்த நாள் September 13, 2018.
 4. CNN, Nicole Chavez,. "Homes burn in 3 Massachusetts towns after suspected gas explosions". CNN. https://www.cnn.com/2018/09/14/us/massachusetts-explosions-fires/index.html. 
 5. Chantal Da Silva. "Boston Deadly Gas Explosion Latest: Everything to Know About 'Armageddon' Blast". Newsweek. பார்த்த நாள் September 14, 2018.
 6. "‘How did this happen?’: Gas blasts set homes ablaze, triggering chaos in Massachusetts". பார்த்த நாள் September 14, 2018.
 7. "More than 30 homes catch fire after natural gas issues north of Boston; 4 injured". USA Today. பார்த்த நாள் September 13, 2018.
 8. "‘It Looked Like Armageddon’: 1 Dead After Gas Explosions, Fires". CBS (September 14, 2018). பார்த்த நாள் September 14, 2018.
 9. "Multiple Gas-Related Explosions, Fires Reported in Massachusetts" (in en). NBC 10 Philadelphia. https://www.nbcphiladelphia.com/news/national-international/Multiple-Fires-Reported-in-Lawrence-Mass-493188501.html. 
 10. "'It just looked like an absolute war zone': Andover crews respond to 38 fires after suspected gas main explosion" (in en-US). masslive.com. https://www.masslive.com/news/index.ssf/2018/09/it_just_looked_like_an_absolut.html. 
 11. "Panicked neighborhoods evacuate as gas blasts destroy homes" (in en-US). https://www.yahoo.com/news/explosions-damage-many-homes-cant-even-see-sky-213109765.html. 
 12. "Multiple fires, gas explosions in Lawrence, Mass. area" (in en). https://www.cbsnews.com/news/lawrence-ma-fire-gas-explosion-suspected-2018-09-13-live-updates/. 
 13. CNN, Melanie Schuman, Ray Sanchez and Pierre Meilhan,. "Gas explosions, fires reported in Massachusetts towns". CNN. https://www.cnn.com/2018/09/13/us/massachusetts-explosions-fires/index.html. 
 14. Malone, Scott. "Suspected gas explosions rock towns near Boston, forcing evacuations" (in en-US). U.S.. https://www.reuters.com/article/us-massachusetts-explosions/suspected-gas-explosions-rock-towns-near-boston-forcing-evacuations-idUSKCN1LT3E5?feedType=RSS&feedName=newsOne. 
 15. Darrah, Nicole (September 13, 2018). "Massachusetts suspected gas explosions hits dozens of homes and buildings, officials say" (in en-US). Fox News. http://www.foxnews.com/us/2018/09/13/massachusetts-suspected-gas-explosions-damage-or-destroy-at-least-20-homes-officials-say.html. 
 16. "Dozens of houses burn, explode after Columbia Gas pressure issue" (en) (September 14, 2018). பார்த்த நாள் September 14, 2018.
 17. "Gas Explosions Rock Lawrence, Andover, N. Andover". Lowell Sun (September 14, 2018). பார்த்த நாள் September 14, 2018.
 18. Melissa Hanson (September 13, 2018). "Salem Waterfront Hotel offering remaining occupancy to anyone whose home was affected by fires, explosions in Lawrence and North Andover". MassLive. பார்த்த நாள் September 14, 2018.
 19. Lisa Kashinsky lkashinsky (September 14, 2018). "Confusion reigns for fire, gas explosion evacuees". The Eagle Tribune. பார்த்த நாள் September 14, 2018.
 20. Nicole Chavez and Ray Sanchez (September 14, 2018). "'It looked like Armageddon': Homes burn in Massachusetts towns after suspected gas explosions". CNN. பார்த்த நாள் September 14, 2018.
 21. "Incident in Lawrence" (en).