குழாய்
Jump to navigation
Jump to search
குழாய் என்பது உள்ளீடற்ற ஒரு உருளை வடிவில் அமைந்த ஒரு பொருள். இது திரவப் (நீர்மப்) பொருட்களை அல்லது வளிமங்களை ஓரிடத்திலிருந்து இன்னோரிடத்துக்குக் கொண்டு செல்வதற்குப் பயன்படுத்தப்படுகின்றது. நகரங்களிலே, நீர் வழங்குவதற்கும், கழிவு நீரை அகற்றுவதற்கும் குழாய்கள் பயன்படுத்தப்படுவதைக் காணலாம். பல்வேறு பொருட்களால் செய்யப்படும் குழாய்கள் பல அளவுகளில் கிடைக்கின்றன. குழாயின் அளவு பற்றிய விவரம் கொடுக்கும்போது, அதன் வெட்டுமுகத்தின் உள் அல்லது வெளி விட்டத்தின் அளவு, சுவரின் தடிப்பு என்பன குறிப்பிடப்படுகின்றன. கடினமான இரும்பு போன்ற கடினமான பொருட்களாலான குழாய்கள் வளையும் தன்மையற்றவை. தேவைக்கேற்ப வளைந்து கொடுக்கக்கூடிய தன்மை கொண்ட குழாய்கள், பலவகையான பிளாஸ்டிக்குப் (நெகிழிப்) பொருட்களை) பயன்படுத்தி உற்பத்தி செய்யப்படுகின்றன.
பயன்கள்[தொகு]
- வீட்டு நீர்வழங்கல் அமைப்புகள்
- உயர் அழுத்தத்தில் திரவப் பொருட்கள், வாயுக்கள் எனபற்றைக் கொண்டு செல்லும் குழாய்த் தொடர்கள்.
- கட்டிடங்கள் கட்டுவதற்கான தற்காலிக சார அமைப்புக்கள்.
- கட்டுமானத்துக்குரிய உருக்குக் குழாய்கள்.
- இயந்திரங்களில் பயன்படும் கூறுகள்.
- பெற்றோலியத் தொழிலில் எண்ணெய்க் கிணற்று காப்புச் சுவர்.
- எண்ணெய் தூய்மைப்படுத்திகளின் பகுதிகள்
- உயர் அழுத்தச் சேமிப்புக் கொள்கலன்கள்.