புனித யோசேப்பு பேராலயம், ஐதராபாத்து

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
புனித யோசேப்பு பேராலயம்
புனித யோசேப்பு பேராலயம், ஐதராபாத்து
நாடுஇந்தியா
சமயப் பிரிவுகத்தோலிக்க திருச்சபை
வரலாறு
அர்ப்பணிப்புபுனித யோசேப்பு
நிருவாகம்
மறைமாவட்டம்கத்தோலிக்க திருச்சபையின் ஐதராபாத்து மறைமாவட்டம்
Provinceஐதராபாத்து, இந்தியா

புனித யோசேப்பு பேராலயம் ( St Joseph's Cathedral ) என்பது இந்திய மாநிலமான் தெலங்காணாவின் ஐதராபாத்து நகரிலுள்ள ஒரு கத்தோலிக்க திருச்சபையின் பேராலயமாகும். இது ஐதராபாத்து மறைமாவட்ட பேராலயமும், ஐதராபாத்து மற்றும் சிக்கந்தராபாத் நகரங்களின் மிக அழகான தேவாலயங்களில் ஒன்றுமாகும். [1][2][3]

வரலாறு[தொகு]

அன்றைய கிறிஸ்தவ மதத் தலைவரான டொமினிக் பார்பெரோவின் ஆதரவின் கீழ் நிசாம் நவாப்களின் ஆட்சிக் காலத்தில் இந்த தேவாலயம் கட்டப்பட்டது.[4] நவாப் உஸ்மான் ஜாவை தொடர்பு படுத்தும் கல்வெட்டுகளில் ஒன்று தேவாலயத்தின் முன் உள்ளது. இந்த தேவாலயம் மார்ச் 19, 1870 இல் மற்றொரு மதத் தலைவரான பீட்டர் கப்ரோட்டியால் நிறுவப்பட்டது. 1872 இல், உள்ளூர் கிறிஸ்தவர்களின் உதவியுடன், திருத்தந்தை எல். மல்பெரி என்பவரல் தேவாலயத்தின் முக்கிய கட்டிடங்கள் கட்டி முடிக்கப்பட்டு 1875இல் கிறிஸ்துமஸ் ஈவ் அன்று திறக்கப்பட்டது.

கட்டுமானம்[தொகு]

இது உயரமான பாறையில் சிலுவையின் வடிவத்தில் கட்டப்பட்டுள்ளது. முகப்பும் மணி கோபுரங்களும் 1891இல் முடிக்கப்பட்டன. பெரிய அளவிலான மணிகள் மற்றும் வண்ணமயமான ஓவியங்கள் 1892 இல் இத்தாலியில் இருந்து தேவாலயத்திற்கு கொண்டு வரப்பட்டன. சிக்கந்தராபாத்தில் உள்ள கன்டோன்மென்ட் வரை தேவாலயத்தில் மணி கேட்கப்படுகிறதென கூறப்படுகிறது. ஏழாவது நிசாம் நவாப் மிர் உஸ்மான் அலிகான் அடிக்கடி தேவாலயத்திற்குச் சென்று சுவர் கடிகாரங்கள், எண்ணெய் ஓவியங்கள் மற்றும் கோபுரங்களில் பொருத்தப்பட்ட பெரிய மேசைகள் போன்ற இலவச தளபவாடங்களை நன்கொடையாக வழங்கினார்.

மத்திய மண்டபம் மிகப் பெரியது. இங்கு ஒரு நேரத்தில் சுமார் 500 பேர் பிரார்த்தனை செய்ய முடியும். தேவாலயத்தின் உள்ளே இருக்கும் பிரதான மண்டபத்தில், மைக்கலாஞ்சலோவின் புகழ்பெற்ற தாயும் சேயும் என்ற கலையழகு மிக்க பளிங்குச் சிலையின் சாயலில் ஒரு சிலை வடிவைமைக்கப்பட்டுள்ளது. [5][3][2][1]

மேலும் காண்க[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. 1.0 1.1 "St. Joseph's Cathedral, Hyderabad, Andhra Pradesh, India". Indiaplaces.com.
  2. 2.0 2.1 "Hyderabad-Secunderabad India – St.Josephs Cathedral". hyderabad-secunderabad.com. மூல முகவரியிலிருந்து 2012-03-17 அன்று பரணிடப்பட்டது.
  3. 3.0 3.1 "St. Joseph\'s Cathedral-Hyderabad". Mapsofindia.com (2011-05-19). மூல முகவரியிலிருந்து 13 March 2012 அன்று பரணிடப்பட்டது.
  4. "PIME". Pime.org. மூல முகவரியிலிருந்து 23 July 2012 அன்று பரணிடப்பட்டது.
  5. "St. Joseph's Cathedral Hyderabad – St. Joseph Cathedral in Hyderabad India – Cathedral of St. Joseph at Hyderabad". Hyderabad.org.uk.

வெளி இணைப்புகள்[தொகு]