புனித ஜார்ஜ் தேவாலயம், ஐதராபாத்து

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சிஎஸ்ஐ-புனித ஜார்ஜ் தேவாலயம்
ஐதராபாத்தின் தென்னிந்தியத் திருச்சபையின் புனித ஜார்ஜ் தேவாலயம்
அமைவிடம்ஐதராபாத்து
நாடுஇந்தியா
சமயப் பிரிவுதென்னிந்தியத் திருச்சபை

புனித ஜார்ஜ் தேவாலயம் (St. George's Church) என்பது இந்தியாவின் ஹைதராபாத் நகரில் உள்ள மிகப் பழமையான தேவாலயம் ஆகும். இது 1844இல் கட்டப்பட்டது. [1] பொ.ச. 1947 ஆம் ஆண்டில் ஒன்றிணைந்த தேவாலயமாக தென்னிந்தியத் திருச்சபையால் ஒன்றிணைக்கப்பட்டது. [2]

வரலாறு[தொகு]

கோத்தியில் பிரித்தானியர்களின் அலுவலகக் கட்டிடம் அமைக்கப்பட்டதன் மூலம், பல கிறிஸ்தவர்கள் சதர்காட், அபிட்ஸ் பகுதியில் குடியேறினர். இந்த தேவாலயம் ஐதராபாத் நிசாம் அனுமதியுடன் சுமார் பதினொரு ஏக்கர் பரப்பளவில் கட்டப்பட்டது. இதை பிரித்தானிய குடியிருப்பாளரான சர் ஜார்ஜ் யேல் படிவமைத்தார். பிப்ரவரி 1844இல் அடிக்கல் நாட்டப்பட்டு இதன் கட்டுமானம் கிட்டத்தட்ட இரண்டு ஆண்டுகள் கழிந்தபின் 18 செப்டம்பர் 1844 அன்று தெய்வீகச் சேவைக்காக திறக்கப்பட்டது. கிறிஸ்துவின் சிலுவை வடிவத்தில் ஐரோப்பிய பாணியில் எழுபது அடி உயரத்தில் கட்டப்பட்ட இந்த தேவாலயத்திற்கு முன்னால் ஒரு உயர்ந்த போர்டிகோ, தேவாலயத்தின் உள்ளே யங்கோன் தேக்கு மற்றும் பிற பொருட்களால் செய்யப்பட்ட சுமார் 30 அடி நீளப் பெஞ்சுகள் உள்ளன. கிறிஸ்துவின் வாழ்க்கையை சித்தரிக்கும் படங்களும், பிற உருவங்களும் தேவாலயத்தின் வண்ண கண்ணாடிகளில் வரையப்பட்டுள்ளன.

மேற்கோள்கள்[தொகு]

  1. Itihas, Volume 11, 1983, p.296
  2. "British Empire: Resources: Articles: Churches of India: a legacy of The Imperial Raj: St George's, Hyderabad". britishempire.co.uk. 2019-01-05 அன்று மூலம் பரணிடப்பட்டது. 2014-06-06 அன்று பார்க்கப்பட்டது.