ஆன்ம நன்மை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

ஆன்ம நன்மை என்பது கத்தோலிக்க திருச்சபையில் நற்கருணை பக்திமுயற்சிகளில் ஒன்றாகும். இது குறிப்பாக திருப்பலிக்கு ஆயத்தமாக ஏறெடுக்கப்படும். நற்கருணையில் இருப்பதாக நம்பப்படும் இயேசு கிறித்துவோடு ஒன்றித்திருக்க விரும்புவதே இப்பக்தி முயற்சியாகும். இது கத்தோலிக்க திருச்சபையிலும் சில ஆங்லிக்க ஒன்றியங்களிலும் பயன்படுத்தப்படுகின்றது. பல புனிதர்களும், திருத்தந்தையர்களும் குறிப்பாக ஓசேமரிய எஸ்கிரிவா[1] மற்றும் திருத்தந்தை இரண்டாம் யோவான் பவுல் இப்பக்தியினை ஊக்குவித்தனர். நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ கடவுளோடு ஒன்றித்திருக்க விரும்புவதே எல்லா மனித விருப்பங்களின் முடிவாக இருக்கவேண்டும் என்பது கத்தோலிக்க நம்பிக்கை. இப்பக்தி முயற்சி இதனடிப்படையில் உருவானதாகும். இதனை செய்வதற்கு விருப்பமும் தியானமும் அவசியமெனினும் பலர் வாய்வழி செபங்களையும் செய்வர்.

மேற்கோள்கள்[தொகு]

  1. On this day 1912.4.23 St. Josemaria Escriva


"https://ta.wikipedia.org/w/index.php?title=ஆன்ம_நன்மை&oldid=2222316" இருந்து மீள்விக்கப்பட்டது