ஓசேமரிய எஸ்கிரிவா
புனித ஓசேமரிய எஸ்கிரிவா தே பலகுயர் | |
---|---|
வத்திக்கான் நகரில் உள்ள புனித ஓசேமரிய எஸ்கிரிவாவின் திரு உருவச்சிலை | |
பொது நிலை வாழ்வின் புனிதர் | |
பிறப்பு | பார்பஸ்த்ரோ, ஆராகோன், எசுப்பானியா | 9 சனவரி 1902
இறப்பு | 26 சூன் 1975 உரோமை நகரம், இத்தாலி | (அகவை 73)
ஏற்கும் சபை/சமயங்கள் | கத்தோலிக்கம் |
அருளாளர் பட்டம் | 17 மே 1992, வத்திக்கான் நகர் by திருத்தந்தை இரண்டாம் அருள் சின்னப்பர் |
புனிதர் பட்டம் | 6 அக்டோபர் 2002, வத்திக்கான் நகர் by திருத்தந்தை இரண்டாம் அருள் சின்னப்பர் |
முக்கிய திருத்தலங்கள் | அமைதியின் அன்னை, ஓபஸ் தேயி-யின் தலைமை கோயில், உரோமை |
திருவிழா | 26 ஜூன் |
சித்தரிக்கப்படும் வகை | திருப்பலி நிகழ்த்துவது |
புனித ஓசேமரிய எஸ்கிரிவா தே பலகுயர் (9 சனவரி 1902 – 26 ஜூன் 1975;') ஒரு உரோமன் கத்தோலிக்க குரு ஆவார். எசுப்பானியா நாட்டில் பிறந்த இவரே ஓபஸ் தேயி (en:Opus Dei) என்னும் பொது நிலையினருக்கான சபையினையும் கத்தோலிக்க குருக்கள் சபை ஒன்றையும் துவங்கியவர். இவருக்கு திருத்தந்தை இரண்டாம் அருள் சின்னப்பர், 2002-ஆம் ஆண்டில் புனிதர் பட்டம் அளித்தார். அப்போது திருத்தந்தை இவரைப்பற்றி கூறியது, "புனித ஓசேமரிய எஸ்கிரிவா கிறித்தவத்திற்கு சாட்சியம் பகர்ந்த தலையானவர்களுள் ஒருவர்" என்றார்.[1][2][3]
இவர் மத்ரித்தில் உள்ள கம்ப்லுயுடென்ஸ் பல்கலைக்கழகத்தில், சட்டத் துறையில் (civil law) முனைவர் பட்டமும், லார்தரன் பல்கலைக்கழகத்தில் இறையியலில் முனைவர் பட்டமும் பெற்றார். இவரின் பணிகளில் மிக முக்கியமானதாகக் கருதப்படுவது, ஓபஸ் தேயி என்னும் பொது நிலையினருக்கான துறவற சபையினைத் துவங்கியது ஆகும். இச்சபை பல குற்ற சாட்டுகளுக்கும் எதிர்ப்புகளுக்கும் ஆளானது. குறிப்பாக இதன் இரகசியத்தன்மை, வலது சாரி அரசியலில் ஊள்ள ஈடுபாடு, மூட சடங்குகள் முதலியன மிகவும் கடுமையாக தாக்கப்படுவதாகும். ஆனாலும், இச்சபையினரும், இச்சபையினை சாராத பலரும் இக்குற்றசாட்டுகளை மறுத்துள்ளனர்.[4] வத்திகான் பகுப்பாய்நர்கள் பலரும், குறிப்பாக சான் ஆலன் en:John L. Allen, Jr., இக்குற்றச்சாட்டுகள் ஆதாரம் அற்றதாகவும், ஓபஸ் தேயி மற்றும் எஸ்கிரிவாவின் எதிரிகளால் பரப்பப் படுவதாகவும் கூறுகின்றனர்.[5][6][7][8]
திருத்தந்தையர்கள் இரண்டாம் அருள் சின்னப்பர் மற்றும் பதினாறாம் ஆசீர்வாதப்பர் முதலியோர் 'பொது நிலையினரின் பங்கு', 'செய்யும் தொழிலின் மூலம் புனிதம் அடைவது' மற்றும் 'எல்லோருக்கும் புனிதராக விடப்படும் அழைப்பு' முதலிய இவரின் கருத்துகளுக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர்.[9]
The Way என்னும் பெயரில் வெளியான இவரின் புத்தகம், ஒரு மில்லியன் பிரதிகளுக்கும் மேல், 50-க்கும் மேலான மொழிகளில் விற்றுள்ளது.[5]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ Pope John Paul II 1990
- ↑ Kenneth L. Woodward (13 January 1992), "Opus Dei Prepares to Stand By Its Man", Newsweek
- ↑ Cain, Michael (23 November 1999), "Top 100 Catholics Of The Century", The Daily Catholic, 10 (222)
- ↑ Hutchison 2006
- ↑ 5.0 5.1 Allen 2005
- ↑ Maggy Whitehouse (2006), Opus Dei: The Truth Behind the Myth, Hermes House
- ↑ Noam Friedlander (8 October 2005). "What Is Opus Dei? Tales of God, Blood, Money and Faith". The Times (London). http://www.timesonline.co.uk/tol/comment/faith/article575959.ece. பார்த்த நாள்: 2008-02-10.
- ↑ Patrice de Plunkett. "Entretien avec l'auteur de L'Opus Dei – Enquête sur le 'monstre'". en:Zenit News Agency. Archived from the original on 2012-02-11. பார்க்கப்பட்ட நாள் 2007-06-20.
- ↑ "Papal statements on Opus Dei". Opus Dei Official Site. பார்க்கப்பட்ட நாள் 2006-11-27.