பிரி லார்சன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பிரி லார்சன்
Captain Marvel trailer at the National Air and Space Museum 4 (cropped).jpg
பிறப்புபிரியன்னே சிடோனி டௌல்நெய்ர்ஸ்
அக்டோபர் 1, 1989 (1989-10-01) (அகவை 33)
சேக்ரமெண்டோ
அமெரிக்கா
இருப்பிடம்லாஸ் ஏஞ்சலஸ்
கலிபோர்னியா
அமெரிக்கா
கல்விஅமெரிக்கன் கன்சர்வேட்டரி தியேட்டர்
பணிநடிகை
திரைப்பட தயாரிப்பாளர்
செயற்பாட்டுக்
காலம்
1998–அறிமுகம்
துணைவர்அலெக்ஸ் கிரீன்வால்ட் (2013–2019)

பிரி லார்சன் (ஆங்கில மொழி: Brie Larson) (பிறப்பு: அக்டோபர் 1, 1989) என்பவர் அமெரிக்க நாட்டு நடிகையாவார். இவர் தனது இளம் வயதிலிருந்து திரைப்படங்கள் மற்றும் தொடர்களில் முன்னணி கதாபாத்திரங்களில் நடித்ததன் மூலம் அகாதமி விருது மற்றும் கோல்டன் குளோப் விருது போன்ற விருதுகளை வென்றார். 2019ஆம் ஆண்டு டைம் என்ற நாளிதழில் உலகின் 100 மிகவும் செல்வாக்காளர்களில் ஒருவராக இவரை அறிவித்தது.

இவர் தனது 6 வயதிலிருந்து அமெரிக்கன் கன்சர்வேட்டரி நாடக பள்ளியில் பயிற்சி பெற்றார். 1998ஆம் ஆண்டு முதல் முதலில் நடிப்பு துறையில் அறிமுகமானார். 2001ஆம் ஆண்டு 'ரைசிங் டாட்' என்ற தொலைக்காட்சி தொடரிலும், 2006 ஆம் ஆண்டு 'ஹூட்' என்ற நகைச்சுவை திரைப்படத்தில் துணை நடிகையாகவும், 2012 ஆம் ஆண்டு '21 ஜம்ப் ஸ்ட்ரீட்' என்ற திரைப்படத்திலும் நடித்தார். 2009 ஆம் ஆண்டு முதல் 2011 வரை 'அமெரிக்காவின் தாரா' என்ற தொலைக்காட்சி தொடரில் நடித்தார்.

2015 ஆம் ஆண்டு 'ரூம்' என்ற திரைப்படத்தில் நடித்ததற்காக சிறந்த நடிகைக்கான அகாதமி விருதை வென்றார். இவர் முதல் முதலில் பெரும் செலவில் எடுக்கப்பட்ட 'காங்: ஸ்கல் தீவு' என்ற சாகசத் திரைப்படத்தில் நடித்தார் இத் திரைப்படம் 2017 ஆம் ஆண்டு வெளியானது. இவர் கேப்டன் மார்வெல் (2019) என்ற திரைப்படத்தில் கேப்டன் மார்வெல் என்ற வரைக்கதை கதாபாத்திரமான மீநாயகன் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.[1] இதை தொடர்ந்து அவெஞ்சர்ஸ்: எண்ட்கேம் (2019) என்ற திரைப்படத்திலும் நடித்துள்ளார்.[2][3]

மேற்கோள்கள்[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=பிரி_லார்சன்&oldid=3103793" இருந்து மீள்விக்கப்பட்டது