பழ. கருப்பையா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
பழ. கருப்பையா
சட்டமன்ற உறுப்பினர்
பதவியில்
2011–2016
தொகுதி துறைமுகம்
தனிநபர் தகவல்
பிறப்பு 2 ஏப்ரல் 1943 (1943-04-02) (அகவை 77)
காரைக்குடி, தமிழ்நாடு, இந்தியா[1]
அரசியல் கட்சி அதிமுக (2010-2016)
திமுக (2016-2019)[2]
பணி நடிகர், எழுத்தாளர், திரைப்படத் தயாரிப்பாளர்[1]

பழ. கருப்பையா (Pala. Karuppiah, பிறப்பு: 02 ஏப்ரல் 1943) தமிழக அரசியல்வாதியும், எழுத்தாளரும் நடிகரும் ஆவார். இவர் தமிழ்நாடு மாநிலத்தின் முன்னாள் சட்ட மன்ற உறுப்பினர் ஆவார்.

அரசியல் வாழ்க்கை[தொகு]

காங்கிரசில்[தொகு]

பழ. கருப்பையா தனது அரசியல் வாழ்க்கையை இந்திய தேசிய காங்கிரசில் தொடங்கினார். அக்கட்சி 1969ஆம் ஆண்டு பிளவுபட்டபொழுது காமராசர் தலைமையிலான சிண்டிகேட் காங்கிரசு கட்சியில் இருந்தார்.[3] 1971ஆம் ஆண்டில் நடைபெற்ற கள்ளுக்கடை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டுச் சிறைசென்றார்.[4]

ஜனதாவில்[தொகு]

1975ஆம் ஆண்டில் காமராசர் மறைந்த பின்னர் ஜனதா கட்சியில் சேர்ந்தார்.[3]

ஜனதா தளத்தில்[தொகு]

ஜனதா கட்சி பிளவுபட்டபொழுது 1982ஆம் ஆண்டில் ஜனதா தள் கட்சியில் இணைந்து தேர்தலில் போட்டியிட்டார்.[3]

திமுகவில்[தொகு]

1988ஆம் ஆண்டில் திமுகவில் இணைந்தார்.[3]

மதிமுகவில்[தொகு]

1992ஆம் ஆண்டில் வைகோ திமுகவிலிருந்து பிரிந்து சென்று மதிமுக தொடங்கியபொழுது அதில் இணைந்தார்.[3] பின்னர் அதிலிருந்து விலகினார்.

தனிமை[தொகு]

1994 ஆம் ஆண்டில் காரைக்குடி குடிநீர்ப் போராட்டத்தில் ஈடுபட்டு 19 நாள்கள் பட்டினிப்போராட்டம் நடத்தினார்.[4] 1996 ஆம் ஆண்டில் மதிமுகவிலிருந்து தனியாளாக காரைக்குடி தொகுதியில் தேர்தலில் போட்டியிட்டார்.[3]

மீண்டும் காங்கிரசில்[தொகு]

பின்னர் இந்திய தேசிய காங்கிரசில் இணைந்தார். பின்னர் சிறிதுகாலத்தில் அங்கிருந்து விலகினார்.[3]

அதிமுகவில்[தொகு]

2010ஆம் ஆண்டில் நடிகர் சோவின் ஆலோசனையின்படி[3] அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் (அதிமுக) கட்சியில் சேர்ந்தார்.[5] அக்கட்சியின் இலக்கிய அணி மாநிலத் தலைவராக நியமிக்கப்பட்டார். [6] 2010 ஆம் ஆண்டில் திமுகவை தாக்கி பழ. கருப்பையா தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டிக்காக திமுகவினரால் தாக்கப்பட்டார்.[7]

பின்னர் அதிமுகவின் சார்பாக சென்னை மாவட்டத்தின் ஒரு பகுதியான துறைமுகம் தொகுதியில் 2011 தேர்தலில் போட்டியிட்டு வெற்றிபெற்று 14வது தமிழ்நாடு சட்டமன்றத்தில் உறுப்பினரானார்.[8] 2016 சனவரி 15ஆம் நாள் சென்னையில் நடைபெற்ற துக்ளக் இதழின் ஆண்டுவிழாவில் தான் சார்ந்திருந்த அதிமுக கட்சியைத் தாக்கிப் பேசினார்.[5] அதன் விளைவாக, 2016 சனவரி 28ஆம் நாள் கட்சி கொள்கைகளுக்கு எதிராக செயல்பட்டார் என்றும், கட்சிக்கு அவப்பெயர் ஏற்படுத்தினார் என்றும் குற்றம் சாட்டப்பட்டு அதிமுக பொதுச்செயலாளர் ஜெ. ஜெயலலிதாவால் கட்சியில் இருந்து நீக்கப்பட்டார்.[9] அடுத்தநாள் தன்னுடைய துறைமுகம் சட்டமன்ற உறுப்பினர் பதவியை இராஜினாமா செய்தார். இதைத் தொடர்ந்து இவரது மனைவி அடையாளம் தெரியாதவர்களால் தாக்கப்பட்டார். பின்னர் இவர் ஊடகங்கள் வாயிலாக அதிமுக அரசின் ஊழல்கள் குறித்த செய்திகளை வெளியிட்டார்.[10]

திமுகவில்[தொகு]

பின்னர் மு.கருணாநிதி முன்னிலையில் திராவிட முன்னேற்றக் கழகத்தில் 2016 சூலை 19ஆம் நாள் இணைந்தார்.[2] 2019 திசம்பர் 12 ஆம் நாள், "கழகத்தின் நிகழ்கால நடவடிக்கைகள், போக்குகள், சிந்தனைப் பாங்கு, ஒரு கார்ப்பரேட் நிறுவனம் போல கட்சியை நடத்துகிற விதம், அறிவும், நேர்மையும் பின்னுக்கு தள்ளப்பட்டு பணமே எல்லாம் என கருதுகிற தன்மை, இவையெல்லாம் என்னிடம் மிகப்பெரிய சலிப்பை உண்டாக்கின. இவற்றோடு பொருந்திப் போக முடியாத நிலையில் திமுகவிலிருந்து விலகுவது என முடிவெடுத்தேன்" என்று அறிக்கைவிடுத்து திமுகவிலிருந்து பழ. கருப்பையா விலகினார்.[11]

நூல்கள்[தொகு]

பழ. கருப்பையா பின்வரும் நூல்களை எழுதியிருக்கிறார்:

 1. அரசியல் சதிராட்டங்கள்
 2. எல்லைகள் நீத்த ராம கதை, 2012, கிழக்குப் பதிப்பகம்
 3. கண்ணதாசன் காலத்தின் வெளிப்பாடு, 2012, கிழக்குப் பதிப்பகம்
 4. கருணாநிதி என்ன கடவுளா?, 2011, கிழக்குப் பதிப்பகம்
 5. காலம் கிழித்த கோடுகள்
 6. நிற்பதுவே நடப்பதுவே பறப்பதுவே, 2010, அழகப்பர் பதிப்பகம்.
 7. பட்டினத்தார் ஒரு பார்வை, 2012, கிழக்குப் பதிப்பகம்
 8. மகாபாரதம் மாபெரும் விவாதம், கிழக்குப் பதிப்பகம்

திரைத்துறை[தொகு]

நடிகர்[தொகு]

மூன்றாம் படி (1992)

தயாரிப்பாளர்[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

 1. 1.0 1.1 "Thiru. Pala. Karuppiah (AIADMK) 18. Harbour Chennai District". Tamil Nadu Legislative Assembly.
 2. 2.0 2.1 "கருணாநிதி முன்னிலையில் திமுக-வில் இணைந்தார் பழ.கருப்பையா".
 3. 3.0 3.1 3.2 3.3 3.4 3.5 3.6 3.7 Do you know about the history of this 72 years old man | Pala. Karuppiah விகடன் டிவி 2016 சனவரி 30
 4. 4.0 4.1 [1]
 5. 5.0 5.1 பழ.கருப்பையா... நீங்க நல்லவரா... கெட்டவரா?, விகடன் 2019 சனவரி 30
 6. கருணாநிதிக்கு கோபம் வந்ததால் நான் தாக்கப்பட்டேன்: பழ.கருப்பையா பேட்டி, தினமலர் 2010 சூலை 5
 7. கருணாநிதிக்கு கோபம் வந்தால் அவர் ஒரு காட்டுமிராண்டி: பழ.கருப்பையா பேட்டி, Tamil Express News 2010 சூலை 5
 8. "List of MLAs from Tamil Nadu 2011". Government of Tamil Nadu. பார்த்த நாள் 2017-04-26.
 9. "Pala. Karuppiah expelled from AIADMK". தி இந்து (28 January 2016).
 10. "Pala. Karuppiah's house attacked". தி இந்து (31 January 2016).
 11. திமுகவிலிருந்து விலகிய பழ.கருப்பையா, மின்னம்பலம், பகல் 1, வியாழன், 12 டிச 2019
"https://ta.wikipedia.org/w/index.php?title=பழ._கருப்பையா&oldid=3045744" இருந்து மீள்விக்கப்பட்டது