அங்காடித் தெரு (திரைப்படம்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
அங்காடித் தெரு
திரைப்படத்தின் விளம்பரக்காட்சி
இயக்கம்வசந்தபாலன்
தயாரிப்புகருனாமூர்த்தி
அருன்பாண்டியன்
கதைவசந்தபாலன்
இசைவிஜய் ஆண்டனி
ஜீ. வி. பிரகாஷ்
நடிப்புமகேசு
அஞ்சலி
இயக்குனர் வெங்கடேசு
ஒளிப்பதிவுரிச்சர்ட் மரியநாதன்
விநியோகம்ஐங்கரன் இண்டர்நேசனல்
வெளியீடுமார்ச் 26, 2010
நாடுஇந்தியா
மொழிதமிழ்

அங்காடித் தெரு, இயக்குநர் வசந்தபாலன் இயக்கத்தில் 2010ஆம் ஆண்டு வெளியான தமிழ்த் திரைப்படம் ஆகும். கருணாமூர்த்தி மற்றும் அருண்பாண்டியன் ஆகியோரின் தயாரித்த இந்தப் படத்தை அய்ங்கரன் இன்டர்னேசனல் நிறுவனம் வெளியிட்டது. மகேசு, அஞ்சலி, இயக்குநர் வெங்கடேசு மற்றும் கனாக்காணும் காலங்கள் பாண்டி ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடித்துள்ளனர். நடிகை சினேகா அவரது உண்மை ரூபத்திலேயே கவுரவ தோற்றத்தில் நடித்துள்ளார். இசை விஜய் ஆண்டனி மற்றும் ஜீ. வி. பிரகாஷ். பிரபல எழுத்தாளர் ஜெயமோகன் இந்தப் படத்திற்கான வசனங்களை எழுதியுள்ளார். பெப்ரவரி 11, 2008ம்[1] ஆண்டு தொடங்கப்பட்ட இந்த படம் மார்ச் 26, 2010ல் வெளியிடப்பட்டது.

சென்னை ரங்கநாதன் தெருவில் உள்ள பிரமாண்ட வணிக வளாகங்களில் பணிபுரியும் மக்களின் கொத்தடிமை வாழ்க்கை முறையை அடிப்படையாகக் கொண்டு இதன் கதை அமைக்கப்பட்டுள்ளது. இதன் பெரும்பாலான காட்சிகள் அதே தெருவில் உள்ள கடைகளிளேயே எடுக்கப்பட்டுள்ளன. மேலும் சில காட்சிகள் சென்னை மற்றும் தேனி ஆகிய இடங்களில் படமாக்கப்பட்டுள்ளன.

நடிப்பு[தொகு]

  • மகேசு - திருநெல்வேலியில் உள்ள ஒரு கிராமத்தில் பிறந்து, சென்னை ரங்கநாதன் தெருவில் உள்ள துணிக்கடையில் வேலை செய்யும் சோதிலிங்கம் என்ற இளைஞராக இதில் நடித்துள்ளார். புதுமுகமாக இந்தப் படத்தில் அறிமுகமாகியுள்ள மகேசு, திண்டுக்கல் நகரைச் சேர்ந்த கைப்பந்தாட்ட வீரர்[2] என்பது குறிப்பிடத்தக்கது.
  • அஞ்சலி - திருச்செந்தூரில் பிறந்து கதாநாயகனுடன் அதே கடையில் வேலை செய்யும் கனி என்ற பெண்ணாக இதில் நடித்துள்ளார். இதற்கு முன்பு 'கற்றது தமிழ்', 'ஆயுதம் செய்வோம்' ஆகிய தமிழ் படங்களில் நடித்திருந்தாலும் இந்த படத்தில் இவரின் நடிப்பு பலராலும் பாராட்டத்தக்கதாக இருந்தது.
  • வெங்கடேசு - கதாநாயகன் மற்றும் நாயகி வேலை செய்யும் கடையின் மேற்பார்வையாளராக கருங்காலி என்ற கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார். 'ஏய்', 'பகவதி', 'குத்து' போன்ற பல படங்களை இயக்கிய இவர், நடிக்கும் முதல் படம் இதுவாகும்.
  • பாண்டி - கதாநாயகனின் நண்பனாக மாரிமுத்து என்ற கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார். இதற்கு முன்பு 'தீக்குச்சி' மற்றும் 'கில்லி' ஆகிய படங்களில் கவுரவ வேடங்களில் நடித்திருந்தாலும், இதுவே இவரின் முதல் முழுநீளத் திரைப்படம் ஆகும்.

பாடல்கள்[தொகு]

பாடல் பாடியவர்கள் இசை
அவள் அப்படி ஒன்றும் அழகில்லை வினீத் சிரீனிவாசன், ரஞ்சித் விசய் ஆண்டனி
கண்ணில் தெரியும் சி. வி. பிரகாசு சி. வி. பிரகாசு
கருங்காலி நாயே கார்த்திக், மகேசு, பாண்டி சி. வி. பிரகாசு
கதைகளை பேசும் பென்னி தயால், ஃஅம்சிகா சி. வி. பிரகாசு
உன் பேரை சொல்லும் நரேசு ஐயர், சிரேயா கோசல் சி. வி. பிரகாசு
எங்கே போவேனோ பென்னி தயால், எம். கே. பாலாசி, சானகி ஐயர் விசய் ஆண்டனி

அவள் அப்படி ஒன்றும் அழகில்லை[தொகு]

இந்தப் பாடலை கவிஞர் நா. முத்துகுமார் எழுதினார். இதுவரை பெண்களின் அழகை, திறமைகளை உயர்வு நவிற்சியாக, மிகைப் படுத்தி எழுதப்பட்டு வந்த பாடல்களில் இருந்து மாறி பெண்ணை இயல்பாக விபரித்து இந்தப் பாடல் அமைந்திருக்கிறது. மேட்டுக்குடி வாழ்க்கை முறையை சுட்டி, எளிமையை அல்லது இயல்பை விபரித்தும் இந்தப் பாடலின் பல வரிகள் அமைந்துள்ளன. எடுத்துக்காட்டுக்கள் "அவள் கூந்தல் ரோசா வாசமில்லை,அவளில்லாமல் சுவாசம் இல்லை.

மேற்கோள்கள்[தொகு]

  1. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". 2010-02-18 அன்று மூலம் பரணிடப்பட்டது. 2010-04-23 அன்று பார்க்கப்பட்டது. Cite uses deprecated parameter |dead-url= (உதவி); Invalid |dead-url=dead (உதவி)
  2. மகேசுடன் ஒரு நேர்க்கானல்-movies.rediff.com