ஐங்கரன் இண்டர்நேசனல்
வகை | திரைப்படத் தயாரிப்பு திரைப்பட விநியோகம் |
---|---|
நிறுவுகை | 1987 |
தலைமையகம் | இலண்டன், ஐக்கிய இராச்சியம் தொராண்டோ, கனடா |
முதன்மை நபர்கள் | கே. கருணாமூர்த்தி ரோகின் மாணிக்கவாசகர் |
தொழில்துறை | பொழுதுபோக்கு, மெக்கல தொழில் |
உற்பத்திகள் | திரைப்படங்கள், வீட்டு கானொளி (ஒளிப்பேழை, குறுந்தகடு, டிவிடி, நீலக்கதிர்), மென்பொருள் |
இணையத்தளம் | www.ayngaran.com |
ஐங்கரன் இன்டர்நேஷனல் (Ayngaran International) என்பது ஐக்கிய இராச்சியத்தை தளமாகக் கொண்ட ஒரு திரைப்பட விநியோக மற்றும் தயாரிப்பு நிறுவனமாகும். வரலாற்று ரீதியாக, இந்தியாவிலிருந்து வரும் தமிழ் படங்கள் வெளிநாட்டு திரையரங்குகளுக்கும், வீட்டு ஊடக நுகர்வுக்காகவும் ஐங்கரன் விநியோகித்துவந்துள்ளது. இந்நிறுவனத்தின் தலைவரான திரு. கருணமூர்த்தி இலண்டனைத் தளமாகக் கொண்டவர்,அவர் தமிழ் திரைப்படங்களை உலகளாவிய பார்வையாளர்களிடம் கொண்டு சென்ற இந்தத் துறையில் முன்னோடிகளில் ஒருவர்.. இது ஐக்கிய இராச்சியம், பிரான்ஸ், கனடா, மலேசியா, சிங்கப்பூரில் அமைந்துள்ள சில்லறை கானொளி கடைகளின் சங்கிலியையும் இயக்குகிறது. [1]
2008 ஆம் ஆண்டு நிலவரப்படி, இந்த நிறுவனம் ஒரு சுயாதீன திரைப்பட தயாரிப்பு நிறுவனமாக அறிமுகமானது, இந்தியாவில் அலுவலகங்களைத் திறந்தது. இதன் முதல் தயாரிப்பாக கருப்பு ரோஜா (1996) படம் தயாரிக்கபட்டது. [2]
வரலாறு
[தொகு]திரைப்பட தயாரிப்பு
[தொகு]ஐங்கரன் இன்டர்நேஷனல் 1996 ஆம் ஆண்டில் ஆபாவாணன் இயக்கிய கருப்பு ரோஜா என்ற திகில் திரைப்படத்தை முதல்முறயாக தயாரித்து திரைப்பட தயாரிப்புத் துறையில் நுழைந்தது., ஆனால் இந்த படத்தின் தோல்வியால் ஐரோப்பிய விநியோக முயற்சிகளுக்கு முன்னுரிமை அளிக்கும் பணியை மேற்கொண்டனர். 2006 ஆம் ஆண்டில், ஐங்கரன் இன்டர்நேஷனல் ஈரோஸ் இன்டர்நேசனலுடன் ஒரு கூட்டு முயற்சியில் இறங்கியது மேலும் பெரிய அளவில் திரைப்படங்களைத் தயாரித்து விநியோகிக்கத் தொடங்குவதற்கான திட்டங்களை அறிவித்தது. கூட்டு முயற்சியில் முதல் விநியோக முயற்சியாக, ஷங்கர் இயக்கி, ரஜினிகாந்த் நடித்த சிவாஜி, மிகவும் இலாபகரமான முயற்சியாக மாறியது, விரைவில், ஐங்கரன் திரைப்படங்களைத் தயாரிக்கும் திட்டங்களை அறிவித்தது. [3] அதைத் தொடர்ந்து, அதே இயக்குனர் மற்றும் நடிகரின் அடுத்த படமான எந்திரன் (2010) படத்தை ஈரோஸ் இன்டர்நேஷனலுடன் இணைந்து இதுவரை தயாரிக்கபட்ட தமிழ் படங்களில் பெரும் பொருட் செலவில் தயாரிக்கப்படும் படமாக அறிவிக்கப்பட்டது. இருப்பினும், 2008 திசம்பரில், ஈரோஸ் இன்டர்நேஷனல், விநியோகித்த துரோணா (2008), யுவராஜ் (2008) ஆகிய படங்களின் வணிக ரீதியான தோல்வியால் ஏற்பட்ட நிதி சிக்கல்களுக்குப் பிறகு கூட்டு முயற்சியில் இருந்து விலகியது, [4] அதே நேரத்தில் ஐயங்கரன் இன்டர்நேஷனல் 2008 உலகளாவிய நிதி நெருக்கடியால் சிக்கலை சந்தத்தது. [5] இதன் விளைவாக படத்தின் தயாரிப்பு மற்றும் வெளியீட்டு உரிமைகள் சன் பிக்சர்ஸ் நிறுவனத்திற்கு விற்கப்பட்டன. [6]
அஜித் குமார் நடித்த பில்லா (2007) படத்தின் உலகளாவிய இணை விநியோகஸ்தர்களாக வெற்றியை சுவைத்த பின்னர் இவர்கள் ராஜூ சுந்தரம் இயக்கிய ஏகன் (2008) படத்தை தயாரிக்க நடிகருடன் ஒப்பந்தம் செய்தனர். அதேசமயம் இவர்கள் விஜய் நடிக்க பிரபுதேவா இயக்கிய வில்லு (2009) படத்தை தயாரித்தனர். ஆனால் இந்த இரண்டு படங்களும் வணிக ரீதியாக சிறப்பான வசூலை ஈட்டவில்லை. [7] பெரும் பொருட் செலவில் இவர்கள் தயாரித்த படங்களும், விஷ்ணுவர்தன் இயக்கிய சர்வம் (2009) போன்ற படங்களும் தோல்வியடைந்தன. அதனால் இவர்கள் எந்திரன் படத்தில் இருந்து விலகியதோடு, இவர்களின் பல படங்களின் வெளியீட்டையும் சந்தேகத்திற்கு உள்ளாக்கியது. இவர்கள் குறைந்த செலவில் எடுத்த பேராண்மை (2009), அங்காடித் தெரு (2010) உள்ளிட்ட படங்கள் வணிகரீதியான வெற்றியையும் ஈட்டின, மற்ற படங்களான மிஷ்கின் இயக்கிய நந்தலாலா (2010), முரட்டு காளை (2012) மற்றும் பிரபுதேவா நடித்த களவாடிய பொழுதுகள் ( 2017) போன்றவை நிதி தட்டுப்பாட்டின் விளைவாக பெரும் தாமதங்களுக்கு உள்ளாயின. அதேபோல் 2000 ஆம் ஆண்டுகளின் பிற்பகுதியில் ஐங்கரன் தயாரித்த ஜெய் நடித்த அர்ஜுனன் காதலி, ஜீவன் நடித்த கிருஷ்ண லீலை ஆகியவை வெளியிடப்படவில்லை. அதேபோல ஏ. ஆர். ரகுமான் இசையமைக்க, கதிர் இயக்க வினய் நடித்து எடுப்பதாக அறிவிக்கபட்ட மாணவர் தினம் துவக்கப்பட்டு பிறகு கிடப்பில் போடப்பட்டது. [8]
நிறுவனமானது 2010 களில் தொடர்ந்து திரைப்படங்களை விநியோகித்துவந்தது, லைகா புரொடகசன்சுடன் இணைந்து தயாரிக்கப்பட்ட கத்தி (2014) படத்தின் மூலம் மீண்டும் படங்களை தயாரிக்கத் துவங்கியது. படத்தின் வெற்றியால், ஐங்கரன் இன்டர்நேஷனல் திரையுலகிற்கு மீண்டும் திரும்புவதற்கு தீவிரமாக முயன்று வரும்விதமாக, ஆனந்த் சங்கரின் இயக்க, விக்ரம், காஜல் அகர்வால் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கும் மர்ம மனிதன் படத்தை தயாரிப்பதாக அறிவிக்கபட்டது. இருப்பினும், பின்னர் இவர்களின் படத் தயாரிப்பிற்கு எதிர்ப்புகள் எழுந்ததால், இந்த படம் வெவ்வேறு தயாரிப்பாளர்களால் மேற்கொள்ளப்பட்டது. [9]
சில்லறை கடைகள்
[தொகு]இலண்டன், டொராண்டோ, பாரிஸ், சிட்னி, சிங்கப்பூர் போன்ற நகரங்களில் அமைந்துள்ள ஐங்கரன் இன்டர்நேஷனல் நிறுவனம் உலகம் முழுவதும் பல சில்லறை கடைகளைக் கொண்டுள்ளது. பிற கூட்டாளர் கடைகள் இலங்கை, மலேசியாவில் அமைந்துள்ளன.
திரைப்படவியல்
[தொகு]ஐங்கரன் முதன்முதலில் 1996 ஆம் ஆண்டு தயாரித்த கருப்பு ரோஜா படத்தின் மூலம் ஆறு-டிராக் டிடிஎஸ் ஒலி அமைப்பை இந்திய திரைப்படத் துறையில் அறிமுகப்படுத்தினார்.
தயாரிப்பாளராக | ||||
---|---|---|---|---|
ஆண்டு | படம் | இயக்குனர் | நடிகர்கள் | வெளியீட்டுத் தேதி |
1996 | கருப்பு ரோஜா | பன்னீர் | ராம்கி, வினிதா | |
2008 | மாயாபஜார் (மலையாளம்) | தாமஸ் செபாஸ்டியன் | மம்மூட்டி, டிஸ்கா சோப்ரா | |
ஏகன் | ராஜூ சுந்தரம் | அஜித் குமார், நயன்தாரா | ||
2009 | வில்லு | பிரபுதேவா | விஜய், நயன்தாரா | |
சர்வம் | விஷ்ணுவர்தன் | ஆர்யா, திரிஷா கிருஷ்ணன் | ||
பேராண்மை | எஸ். பி. ஜனநாதன் | ஜெயம் ரவி, ரோலண்ட் கிக்கிங்கர் | ||
2010 | அங்காடித் தெரு | வசந்தபாலன் | மகேஷ், அஞ்சலி, ஏ.வெங்கடேஷ் | |
நந்தலாலா | மிஷ்கின் | மிஷ்கின், அஸ்வத் ராம், ஸ்னிக்தா அகோல்கர் | ||
2012 | முரட்டு காளை | கே. செல்வபாரதி | சுந்தர் சி., சினேகா, சிந்து துலானி | |
2017 | களவாடிய பொழுதுகள் | தங்கர் பச்சான் | பிரபுதேவா, பிரகாஷ் ராஜ், பூமிகா சாவ்லா |
குறிப்புகள்
[தொகு]- ↑ http://investing.businessweek.com/research/stocks/private/snapshot.asp?privcapId=35581892
- ↑ "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2018-01-09. பார்க்கப்பட்ட நாள் 2021-06-30.
- ↑ http://chennai365.com/news/sivaji-blazes-success-trail-for-tamil-films/
- ↑ Kumar, S. Suresh (30 December 2008). "Hollywood dreams". Mid Day. Archived from the original on 18 January 2015. பார்க்கப்பட்ட நாள் 18 January 2015.
- ↑ "The Journey: From Robot to Endhiran — Hurdles and setbacks!". Behindwoods. Archived from the original on 18 January 2015. பார்க்கப்பட்ட நாள் 18 January 2015.
- ↑ "Sun Pictures to produce Rajni's Endhiran". Rediff.com. 18 December 2008. Archived from the original on 18 January 2015. பார்க்கப்பட்ட நாள் 18 January 2015.
- ↑ "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2021-07-09. பார்க்கப்பட்ட நாள் 2021-06-30.
- ↑ http://www.indiaglitz.com/vinay-in-maanavar-dhinam-tamil-news-41961.html
- ↑ http://www.indiaglitz.com/bindhu-madhavi-replaces-priya-anand-in-vikrams-marma-manithan-tamil-news-135917.html