பறையிபெற்ற பந்திருகுலம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

பறையிபெற்ற பந்திருகுலம் (Parayi Petta Panthirukulam) கேரள மாநிலத்தில் கோட்டயம் மாவட்டத்தில் உள்ள கொட்டாரத்தில் என்ற ஊரில் 1855–1937 ஆம் ஆண்டு வரை வாழ்ந்த கதகளி நடன கலைஞரும், ஓட்டன் துள்ளல் என்ற நாட்டுப்புற நாடகவியலாளரும், எழுத்தாளருமான கொட்டாரத்தில் சங்குண்ணி (Kottarathil Sankunni) என்பவரால் எழுதப்பட்ட நாட்டுப்புறவியல் கதையாடல் புத்தகமாகும். கொட்டாரத்தில் சங்குன்னியால் எழுதப்பட்ட ஐதீகமாலை எனற தொகுப்பில் உள்ள புத்தகங்கங்கள் எட்டுப்பாகங்களாகப் பிரித்து மொத்தம் 126 புத்தகங்கள் தொகுக்கப்பட்டுள்ளன. மேலும் மலையாள மனோரமா புத்தகம் துவங்க காரணமாக இருந்தவரும் இவரே.

கதையின் சாரம்[தொகு]

செவி வழிக்கதையாடல் படி பொது ஊழி காலத்தில் இந்தியப்பகுதில் உஜ்ஜைனி என்ற பகுதியை ஆண்ட விக்ரமாதித்தியன் அரண்மனையில் நவரத்திணங்களாக (Navaratnas) இருந்த அமைச்சரவைப் புலவர்களில் ஒருவரான வரருசி (Vararuchi) என்பவர் தென் திசை நோக்கிவந்தபோது ஒரு மரத்தின் கீழ் விளக்கு கையிலேந்தி ஒரு பெண் நிற்பதைக்கண்டு அவளின்மேல் மோகம் கொள்கிறான். வேதங்கள் ஓதும் நம்பூதிரி இனத்தைச் சார்ந்த வரருசி தான் கண்ட தேவதை போன்ற பெண்ணான பறயி குலப்பெண்ணை மண முடிக்கிறார். இவர்கள் இருவரும் கோவில் யாத்திரை செல்லுகிறார்கள். அவர்களுக்கு பண்ணிரெண்டு குழந்தைகள் பிறக்கின்றனர். அக்குழந்தைகள் அனைவரையும் வேறுவேறு இனத்தவர்களிடம் வளர்கும்படி கட்டளையிடுகிறார். அனைத்துக் குழந்தைகளையும் ஏற்றுக்கொள்ளும் மக்கள் கடைசியாகப் பிறந்த குழந்தையை மட்டும் ஏற்றுக்கொள்ள மறுக்கிறார்கள். ஏனெனில் அக்குழந்தை பிறக்கும்போதே வாய் இல்லாமல் ஊனமாகப் பிறந்துவிடுகிறது. இவர்களின் பாதயாத்திரை அதிகமாக பாரதப்புழா (Bharathappuzha) என்ற ஆற்றங்கரையில் நடப்பதாக கதையாடல் கூறுகிறது.

குழந்தைகள்[தொகு]

பதினோராவது பிறப்பான நாரந்த பரந்தனின் சிலை கேரளா மாநிலத்தில் பாலக்காடு மாவட்டத்தில் உள்ள ராயிரநெல்லுர் என்ற இடத்தில் உள்ளது

பாடல் பெற்ற கோவில்கள்[தொகு]

திரைப்படங்கள்[தொகு]

மேலும் பார்க்க[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

̼