உள்ளடக்கத்துக்குச் செல்

வடுதல நாயர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

வடுதல நாயர் (Vaduthala Nair) என்பவர்கள் இந்தியாவின் தென்பகுதியான திருவிதாங்கூர் பகுதியில் 18 முதல் 19 ஆம் நூற்றாண்டுகளில் வாழ்ந்த கொட்டாரத்தில் சங்குண்ணி என்பவரால் எழுதப்பட்ட நாட்டுப்புறவியல் கதையான பறையிபெற்ற பந்திருகுலம்[1] என்ற கதையின் படி நம்பூதிரி இனத்தச் சார்ந்த வரருசி என்பவருக்கும், தாழ்ந்த இனப் பெண்ணிற்கும் பிறக்கும் 12 குழந்தைகளில் ஒருவராகும். இவர் வழியில் வந்த குலத்தவர்கள் போர் வீரர்களாக நம்பப்படுகிறது. இக்கதையின் படி இருவரும் பாரதப்புழா என்ற ஆற்றின் வழியாகச் சென்றபோது வடுதல நாயர் பிறந்ததாக குறிப்பிடப்பட்டுள்ளது. இவர்கள் தற்காப்புக் கலைகள் பலவற்றில் சிறந்தவர்களாக இருந்துள்ளார்கள். முந்தைய காலத்தில் நாயர்கள் படை என்ற ஒன்று இருந்துள்ளது.[2] [3]இவர்கள் மருமக்கதாயம் என்னும் முறையைக் கடைப்பிடிக்கும் பழக்கம் கொண்டவர்களாக இருந்துள்ளனர். இந்த குடும்பங்கள் தறவாடு (Tharavad) என்று அழைக்கப்பட்டன. [4]

மேற்கோள்கள்

[தொகு]
  1. Kottarathil Sankunni (1990). Eithihyamaala (in Malayalam). Kottayam: Kottarathil Sankunni Memorial Committee. p. 44.{{cite book}}: CS1 maint: unrecognized language (link)
  2. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2019-04-09. பார்க்கப்பட்ட நாள் 2019-04-06.
  3. http://www.mediastepsindia.com/keralatraveller/issue12/morenews06.htm[தொடர்பிழந்த இணைப்பு]
  4. A. Sreedaramenon, A Survey of Kerala History, Page 165
"https://ta.wikipedia.org/w/index.php?title=வடுதல_நாயர்&oldid=3702722" இலிருந்து மீள்விக்கப்பட்டது