பயனர் பேச்சு:Voiceonwings

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

பேச்சு:ஐக்கிய இராச்சியம் - பக்கத்தில் உங்கள் பதிவைப் பார்த்தேன். வருக. விக்கிபீடியாவிற்கு நீங்கள் செய்த பங்களிப்பு வரவேற்கப்படுகிறது.ஏதேனும் உதவி தேவையெனில்ஒத்தாசைப் பக்கத்தில் கேளுங்கள்.நீங்கள் மேலும் தொகுத்தல் பயிற்சி செய்ய விரும்பினால், தயவு செய்து மணல்தொட்டியைப் பயன்படுத்துங்கள்.

விக்கிபீடியாவிற்கு பங்களிப்பது பற்றி மேலும் அறிந்த கொள்ள, தயவு செய்து பின் வரும் பக்கங்களை ஒருமுறை பார்க்கவும்:

பேச்சுப் பக்கங்களில் உங்கள் கையொப்பத்தை பின்வரும் என் கையொப்பத்தைப்போல் இட ~~~~ என்று உள்ளிடவும். -- Sundar 11:12, 31 மே 2005 (UTC)[பதிலளி]

மிகச் சிறப்பான பங்களிப்பை நல்கியிருக்கிறீரகள். வாழ்த்துக்கள். உங்களை பற்றிய விவரங்களை உங்கள் பயனர் பக்கத்தில் எழுதினால் நன்றாக இருக்கும்.--ரவி (பேச்சு) 16:02, 31 மே 2005 (UTC)[பதிலளி]
விக்கிபீடியாவுக்கு உங்கள் தொடர்ச்சியான பங்களிப்பை எதிர்பார்க்கிறேன். நன்றி. Mayooranathan 16:57, 31 மே 2005 (UTC)[பதிலளி]
உங்கள் வரவேற்புக்கு நன்றி, சுந்தர், இரவி மற்றும் மயூரநாதன் :) இரவி, பயனர் பக்கத்தை உள்ளீடு செய்துள்ளேன். கையொப்பம் குறித்த உதவிக்கு நன்றி, சுந்தர். Voiceonwings 07:18, 1 ஜூன் 2005 (UTC)

Welcome to Tamil Wikipedia, Voice on Wings. :) -Santhoshguru (பேச்சு) 08:32, 1 ஜூன் 2005 (UTC)

Thanks, santhosh :) Voiceonwings 16:18, 1 ஜூன் 2005 (UTC)

சில கேள்விகள்[தொகு]

விக்கிபீடியா எப்படி உங்களுக்கு அறிமுகமாயிற்று என்பதைக் கூறினால் மேலும் பல பங்களிப்பாளர்களை ஈர்ப்பதற்கான முயற்சிகளை மேற்கொள்ளலாம். மேலும் பங்களிப்பதற்கு முன் வாசகராக இருந்திருக்கிறீர்களா? -- Sundar 09:06, 1 ஜூன் 2005 (UTC)

சுந்தர், தமிழ் விக்கிபீடியா குறித்து சந்தோஷ் குருவின் வலைப்பதிவு வாயிலாக அறிந்து கொண்டேன். அப்பொழுதுலிருந்தே பங்களிக்க வேண்டுமென்ற ஆர்வமிருந்தாலும் செயல்படுத்தும் துணிவு வருவதற்குக் கொஞ்சம் காலம்் பிடித்து விட்டது :) Voiceonwings 10:32, 1 ஜூன் 2005 (UTC)
நானும் அதையேதான் நினைத்தேன். உறுதிப்படுத்துவதற்காகவே கேட்டேன். :-) -- Sundar 10:45, 1 ஜூன் 2005 (UTC)

ஹா ஹா ! விக்கிபீடியாவில் இன்னொரு ரவி ! உங்களையும் என்னையும் யாரும் குழப்பிக் கொள்ளமல் இருந்தால் சரி :)--ரவி (பேச்சு) 11:21, 1 ஜூன் 2005 (UTC)

நாட்டில் ரவிகளுக்கா பஞ்சம்? ;) குழப்பத்தைத் தவிர்க்க எனது புனைப்பெயரைக் கையாளலாம் Voiceonwings 16:16, 1 ஜூன் 2005 (UTC)

நன்றி[தொகு]

ஐக்கிய இராச்சியம் கட்டுரையை மொழிபெயர்க்க நீங்கள் செய்த பங்களிப்பைப் பாராட்டுகிறேன். -- Sundar 08:11, 6 ஜூன் 2005 (UTC)

You are welcome :) ஊக்கமளித்த உங்களுக்கும், மயூரநாதனுக்கும், இரவிக்கும் நன்றி. மேலும் பல கட்டுரைகளில் பங்களிக்கும் ஆர்வமுள்ளது. நேரமும் தெம்பும் கிடைக்குமென்று நம்புகிறேன். முதல் முயற்சியாதலால் தவறுகள் நேர்ந்திருக்க வாய்ப்பிருக்கிறது. சுட்டினால் திருத்திக் கொள்வேன். இன்னொன்று, நீங்கள் புதுப் பயனர் என்று நினைத்த 210.18.159.52 நான்தான். அவ்வப்போது log out ஆகிவிடுகிறது. Voiceonwings 10:26, 6 ஜூன் 2005 (UTC)

சேர்க்க விரும்பும் கட்டுரைகள்[தொகு]

இக்கட்டுரைகளை சேர்க்க விரும்புகிறேன்.

  1. கணினி - en:Computer
  2. மென்பொருள் / நிரலி - en:software
  3. இணையம் - en:Internet
  4. உலகளாவிய வலை - en:world wide web
  5. வலைத் தளம் - en:website
  6. நிரல் மொழி - en:programming language
  7. தகவல் தளம் - en:database
  8. வலையுலாவி - en:web browser
  9. மின்னஞ்சல் - en:Email
  10. எரிதம் - en:E-mail_spam
  11. தொற்று நிரலி - en:Computer_virus
  12. கணிச் செயலி - en:Processor
  13. கணிச் சேமிப்பகம் - en:Computer Storage
  14. பல்லூடகத் துறை - en:Multimedia
  15. தகவல் பாதுகாப்பு - en:Information security
  16. உயிரளவை - en:Biometrics
  17. சூட்டிகை அட்டை - en:Smart card
  18. பண்பலை அடையாளம் - en:RFID
  19. மின் வணிகம் - en:eCommerce
  20. கைப்பேசி - en:Mobile phone

இதனை மேற்கொள்ளலாமா? இக்கட்டுரைகள் மற்றும் தலைப்புகள் குறித்த ஆலோசனைகளை வரவேற்கிறேன். Voiceonwings 02:39, 10 ஜூன் 2005 (UTC)

மேற்கொள்ளலாமா என்ற கேள்விக்கே இங்கு இடமில்லை. கணினி மற்றும் தகவல் தொழில் நுட்பம் சார்ந்த கட்டுரைகள் இல்லை என்ற குறையை நீக்கிவிடுவீர் என்று நம்புகிறேன். வாழ்த்துக்கள். Proceed and create the articles. We all will try to edit and improve the articles. - Harikishore 04:26, 10 ஜூன் 2005 (UTC)
எதற்கும் ஒருமுறை எல்லாத் தலைப்புகளும் சரியான தமிழாக்கம் தானா என Tamil virtual university வலைத்தளத்தில் சரி பார்க்கவும். கைப்பேசி, சரியான பதமா என சந்தேகமாக உள்ளது--ரவி (பேச்சு) 08:50, 10 ஜூன் 2005 (UTC)
கண்டிப்பாக. தாராளமாக எழுதுங்கள். அப்படியே ஒவ்வொரு கட்டுரையிலிருந்தும் ஆங்கில விக்கிபீடியாவிலுள்ள இணைக்கட்டுரைக்கு இணைப்பு கொடுங்கள். அதைவிட, குறிப்பாக ஆங்கில விக்கிபீடியாவிலிருந்து இங்கு இணைப்பு கொடுங்கள். அதன் மூலம், பல புது வருணர்கள் வர ஏதுவாகும் மற்றும் தேடுபொறிகளில் நம் மதிப்பீடு உயரும். -- Sundar 05:07, 13 ஜூன் 2005 (UTC)

தமிழ் விக்கிப்பீடியா பத்தாண்டு கொண்டாட்டத்திற்கான அழைப்பு[தொகு]

வணக்கம். தமிழ் விக்கிப்பீடியா பத்தாண்டு கொண்டாட்டத்தின் ஒரு பகுதியான பண்பாட்டுச் சுற்றுலாவில் நீங்களும் கலந்து கொள்ள வேண்டும் என்று அன்புடன் அழைக்கிறேன். தங்கள் வருகையை திட்டப்பக்கத்தில் உறுதிப்படுத்தி விடுங்கள். இது "அழைப்புள்ளவர்களுக்கு மட்டும்" என்ற வகையில் ஏற்பாடு செய்யப்படும் சுற்றுலா. எனவே, உங்கள் நண்பர்கள், உறவினர்கள் முதலியோரை அழைத்து வருவதைத் தவிர்க்கலாம். சுற்றுலாவுக்கு அடுத்த நாள் பயிற்சிப் பட்டறைகள், கொண்டாட்டங்கள் கூடிய இரண்டாம் நாள் நிகழ்வு திறந்த அழைப்பாக ஏற்பாடு செய்கிறோம். இதிலும் நீங்கள் கலந்து கொள்ள வேண்டும் என்று அழைக்கிறேன். நன்றி.--இரவி (பேச்சு) 20:18, 18 செப்டம்பர் 2013 (UTC)

"https://ta.wikipedia.org/w/index.php?title=பயனர்_பேச்சு:Voiceonwings&oldid=1499975" இலிருந்து மீள்விக்கப்பட்டது