பயனர் பேச்சு:தணிகைவேல் மாரியாயி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

வாருங்கள்!

வாருங்கள், தணிகைவேல் மாரியாயி, விக்கிப்பீடியாவிற்கு உங்களை வரவேற்பதில் மகிழ்ச்சி அடைகிறோம்!

பூங்கோதை விக்கிப்பீடியாவில் பங்களிப்பதைப் பற்றி பேசுகிறார்

உங்கள் பங்களிப்புக்கு நன்றி தொகுப்புக்கு. விக்கிப்பீடியா என்பது உங்களைப் போன்ற பலரும் இணைந்து, கூட்டு முயற்சியாக எழுதும் கலைக்களஞ்சியம் ஆகும். விக்கிப்பீடியாவைப் பற்றி மேலும் அறிய புதுப் பயனர் பக்கத்தைப் பாருங்கள். தமிழ் விக்கிப்பீடியாவைப் பற்றிய உங்கள் கருத்துக்களையும், ஏதேனும் உதவி தேவையெனில் ஒத்தாசைப் பக்கத்திலோ அதிக விக்கிப்பீடியர்கள் உலாவும் முகநூல் (Facebook) பக்கத்திலோ கேளுங்கள். தமிழ் விக்கிப்பீடியாவில் கலந்துரையாடலுக்கான ஆலமரத்தடியில் முக்கிய உரையாடல்களைக் காணலாம். நீங்கள் கட்டுரை எழுதி, பயிற்சி பெற விரும்பினால், அருள்கூர்ந்து உங்களுக்கான சோதனை இடத்தைப் (மணல்தொட்டி) பயன்படுத்துங்கள்.


தங்களைப் பற்றிய தகவலை தங்கள் பயனர் பக்கத்தில் தந்தால், தங்களைப் பற்றி அறிந்து மகிழ்வோம். விக்கிப்பீடியா தங்களுக்கு முதன்முதலில் எப்படி அறிமுகமானது என்று தெரிவித்தால், தமிழ் விக்கிப்பீடியாவிற்கு மேலும் பல புதுப்பயனர்களைக் கொண்டு வர உதவியாக இருக்கும்!


நீங்கள் கட்டுரைப் பக்கங்களில் உள்ள பிழைகளைத் திருத்தலாம். கூடுதல் தகவலைச் சேர்க்கலாம். புதுக்கட்டுரை ஒன்றையும் கூடத் தொடங்கலாம். இப்பங்களிப்புகள் எவருடைய ஒப்புதலுக்கும் காத்திருக்கத் தேவையின்றி உடனுக்குடன் உலகின் பார்வைக்கு வரும்.

பின்வரும் இணைப்புக்கள் உங்களுக்கு உதவலாம்:


மேலும் காண்க:


-- ஜெயரத்தின மாதரசன் (பேச்சு) 02:56, 18 மார்ச் 2019 (UTC)[]

மலேசியா[தொகு]

வணக்கம், மலேசியா தொடர்பான கட்டுரைகளில் சில திருத்தங்களை (குறிப்பாக எழுத்துத் திருத்தங்களை) செய்து வருகிறீர்கள். நன்றி. ஆனாலும், உங்கள் திருத்தங்களால் கட்டுரைகளில் சிவப்பு இணைப்புகள் (அறுந்த உள்ளிணைப்புகள்) இல்லாதவாறு பார்த்துக் கொள்ளுங்கள். பேராக் என்பதை பேரா என மாற்றி வருகிறீர்கள். மலாய் மொழியில் peraʔ என்பதே உச்சரிப்பு. இது பேராஹ் எனப் பலுக்கப்படுவதாகத் தெரிகிறது. உள்ளூரில் தமிழர்களால் இது பேராக் என்றுதானே கூறப்படுகிறது? ஏனைய உலக மொழிகளிலும் இது பேராக் என்றே எழுதப்படுகிறது. இதனை மாற்றத் தேவையில்லை என்பதே எனது கருத்து. இது குறித்து உங்கள் கருத்தை பேராக் கட்டுரையின் உரையாடல் பக்கத்தில் தெரிவியுங்கள்.--Kanags \உரையாடுக 23:33, 8 சூன் 2021 (UTC)[]

இனிய வணக்கம்.. உங்கள் விளக்கத்திற்கு மிக்க நன்றி.. நம் மொழியில், எந்தச் சொல்லும் வல்லின எழுத்தில் முடிவுறாது.. அது வேற்று மொழிச் சொல்லாக இருந்தாலும் இவ்விதி பொருந்தும்.. பேராக் என்று எழுதுவதற்கு பதிலாக, பேரா அல்லது பேராக்கு என்று எழுதலாம்.. இது தொடர்பாக, ஐயா திருமாவளவன் (மலேசியத் தமிழ் நெறிக் கழகத் தலைவர்) அவர் சொன்னது, பேரா என்றே எழுதலாம் என்று.. Thanighaivel (பேச்சு) 02:10, 9 சூன் 2021 (UTC)[]

மலேசியாவின் இடப் பெயர்களில் மாற்றங்கள் வேன்டாம்[தொகு]

வணக்கம் ஐயா. காலம் காலமாக பேராக் என்றுதான் நாங்கள் மலேசியாவில் பய்ன்படுத்தி வருகிறோம். புதிதாக சொல்ல வேண்டாமே. திருமாவளவன் அவர்களை ஒட்டுமொத்த மலேசியத் தமிழர்களின் தமிழ் மொழிப் பிரதிநிதியாகப் பார்ப்பது சரியன்று. பேராக் எனும் சொல்லை மாற்றம் செய்ய வேன்டாம்.

தயவு செய்து கட்டுரையாளரைக் கேட்காமல் மலேசியாவின் இடப் பெயர்களில் மாற்றங்கள் செய்ய வேன்டாம் என தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன். நன்றி.மலாக்கா முத்துக்கிருஷ்ணன்பேச்சு--ksmuthukrishnan 06:05, 9 சூன் 2021 (UTC)[]

வணக்கம் ஐயா.. காலம் காலமாக, நாம் எத்தனை முறை செய்தாலும், தவறு தவறுதானே.. தவறுகளைத் திருத்திக் கொள்வதே சிறப்பு.. ஒரு சொல் வல்லின எழுத்தில் முடிவுறாது.. பேராக் என்று தமிழில் எழுதுவது தவறு.. அதைப் படித்தால், பேராக்கு என்றே ஒலிக்கும்.. கு - குற்றியலுகரம். நன்றி, வணக்கம்.. Thanighaivel (பேச்சு) 06:30, 9 சூன் 2021 (UTC)[]

மாற்றங்கள் செய்ய வேண்டாம்[தொகு]

தயவுசெய்து வல்லினம்; மெல்லினம்; குற்றியலுகர இலக்கணத்தை மலேசிய இடப் பெயர்களில் திணித்துக் குழப்பத்தை ஏற்படுத்த வேண்டாம். தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன்.. கடந்த 100 - 150 ஆண்டுகளாக நாங்கள் பயன்படுத்தி வரும் இடப் பெய்ரகள் அப்படியே இருக்கட்டும். மாற்றங்கள் செய்ய வேண்டாம்.மலாக்கா முத்துக்கிருஷ்ணன்பேச்சு----ksmuthukrishnan 20:18, 9 சூன் 2021 (UTC)[]

நானும் மலேசியத் தமிழன் தான் ஐயா.. 100-150 ஆண்டு வரலாறு காக்க, பல்லாயிரம் ஆண்டுகளாக இருக்கும் தமிழ் மொழியைச் சிதைப்பது சரியா? ஒரு காலத்தில் மலேஷியா என்று பிழையாக (திணிப்பு) இருந்ததை, இன்று மலேசியா என்று சரியாக (கிரந்தம் தவிர்த்து) எழுதுகிறோம்.. அது போலத்தான் பிற சிறப்புப் பெயர்களும்.. உங்களுக்குப்‌ புரியும் என்று நம்புகிறேன்.. நன்றி.. Thanighaivel (பேச்சு) 23:05, 9 சூன் 2021 (UTC)[]

விக்கிப்பீடியா நிர்வாகிகளின் கவனத்திற்கு[தொகு]

பேராக் மாநிலத்தின் தமிழ்ப்பள்ளிகள் எனும் கட்டுரையில் Thanighaivel என்பவர் அவர் விருப்பத்திற்கு மாற்றங்கள் செய்து வருகிறார். இடையில் புகுந்து மலேசிய இடங்களின் பெயர்களைத் தாறுமாறாக வெட்டிச் சிதைத்துக் கொண்டு வருகிறார்.

தயவு செய்து நிறுத்தச் சொல்லுங்கள். இவரின் இந்தப் போக்குத் தொடருமானால், நான் விக்கிப்பீடியா பங்களிப்புகளில் இருந்து விலகிக் கொள்கிறேன். நன்றி. வணக்கம்..--மலாக்கா முத்துக்கிருஷ்ணன் \பேச்சு----

தணிகைவேள், உங்கள் திருத்தங்கள் விக்கிப்பீடியா கொள்கைக்கு மாறாக இல்லாவிடினும், உள்ளூர் தமிழ் வழக்குகளும் பேணப்பட வேண்டும். உள்ளூரில் ஊடகங்களுக்கூடாகவோ அல்லது சமூக வலைத்தளங்களினூடாகவோ இவற்றைக் கொண்டு சென்று பரப்புரை செய்யுங்கள்.--Kanags \உரையாடுக 22:28, 9 சூன் 2021 (UTC)[]

வணக்கம், தமிழ் விக்கிப்பீடியாவில் அளவுக்கு அதிகமான எழுத்துப் பிழைகள் உள்ளன.. இப்படி, மொழிப் பிழைகளைக் கொண்டே கட்டுரை உருவாக்குவது தவறு.. தவறுகளைத் திருத்திக் கொள்வதே சிறப்பு..

என் கண்ணில் படும் தவறுகளை இயன்ற இடங்களில் திருத்துகிறேன்.. தாறுமாறாக வெட்டிச் சிதைப்பது என் நோக்கம் அல்ல.. Thanighaivel (பேச்சு) 22:55, 9 சூன் 2021 (UTC)[]

இதனை இப்பொழுதே பார்க்கின்றேன். வல்லின ஒற்றில் ஒரு சொல் முடியலாகாது என்பது நெடுங்காலம் தமிழில் இருந்துவரும் தமிழிலக்கணம் மட்டுமன்று, அப்படி வல்லின ஒற்றில் முடியுமாறு யாராலும் ஒலிக்கவும் முடியாது. இவற்றைத் திருத்துவது தவறல்லவே! சில காலம் தவறாகப் பயன்படுத்தி வந்திருந்தாலும், அவற்றைத் திருத்திக்கொள்லலாமே. பயனர் @Ksmuthukrishnan: அவர்கள் விலகிவிடுவேன் என்று அச்சுறுத்துதல் செய்வது சரியான முறையா? இக்கருத்தில் உள்ள மாற்றுப்பார்வைகளை முறையாக வைப்பது நல்லதல்லவா? @Kanags: --செல்வா (பேச்சு) 21:59, 22 சூன் 2021 (UTC)[]

இலக்கணம்[தொகு]

தயாக்கு மக்கள் எனும் கட்டுரையின் பேச்சுப் பக்கத்தில் உங்களுக்குப் பதிலளித்திருக்கிறேன். இனி உரையாடலை அங்கேயே தொடருங்கள். அங்கு நீங்கள் கூறுவதற்குரிய இலக்கணச் சான்றைத் தாருங்கள். ஏனையோரும் படித்துப் பயன் பெறலாம்.--பாஹிம் (பேச்சு) 08:58, 11 சூன் 2021 (UTC)[]

சரி ஐயா.. அப்படியே செய்கிறேன்.. நன்றி.. Thanighaivel (பேச்சு) 09:35, 11 சூன் 2021 (UTC)[]

June 2021[தொகு]

தயவு செய்து ஆக்கநோக்கில் இல்லாத, தேவையற்ற தொகுப்பினை நிறுத்துங்கள். இவ்வாறு செய்வது எமது கொள்கைக்கு முரணாகும். விக்கிப்பீடியாவுக்கு யாரும் பங்களிக்கலாம் என்றாலும், அருள்கூர்ந்து எமது கொள்கைகளையும் வழிகாட்டல்களையும் அறிந்துகொள்வதற்குச் சிறிது நேரத்தை ஒதுக்குங்கள். நீங்கள் பயிற்சி பெற விரும்பினால், அருள்கூர்ந்து மணல் தொட்டியைப் பயன்படுத்துங்கள். தங்களுக்கு உதவி தேவைப்படின், தயங்காது இங்கு கேட்கலாம்.

இன்னொரு முறை நீங்கள் அவ்வாறு செய்தால் எச்சரிக்கை இன்றி தடை செய்யப்படுவீர்கள். Kanags \உரையாடுக 07:57, 16 சூன் 2021 (UTC)[]

வணக்கம், இலக்கணப் பிழைகளைத் திருத்துவது தவறா? தமிழ் விக்கிப்பீடியா மேலாண்மை உறுப்பினர்களுக்குச் சில கேள்விகள்; 1) விக்கியில் கட்டுரை என்ற பெயரில், தமிழ் மொழியைச் சிதைப்பது சரியா? 2) கட்டுரையில் எழுத்துப் பிழைகள் இருந்தால், அதை அப்படியே விட்டு விடலாமா? விக்கிப்பீடியாவை அதிகம் பயன்படுத்துவது மாணவர்கள்.. மாணவர்களுக்குச் சரியாக வழிகாட்டுவது நம் கொள்கை இல்லையா? 3) மொழி முதல், மொழி ஈறு, மெய்ம்மயக்க விதிகள் தேவை இல்லையா? 4) கிரந்தத் திணிப்பை ஆதரிப்பது சரியா? விடைகள் கிடைக்கும் என்று நம்புகிறேன்.. நன்றி வணக்கம்.. தணிகைவேல் மாரியாயி (பேச்சு) 08:39, 16 சூன் 2021 (UTC)[]

Stop icon with clock
உங்களுடைய பயனர் கணக்கு தற்காலிகமாக தடை செய்யப்பட்டுள்ளது. நீங்கள் ஆக்க நோக்கில் இல்லாத தொகுப்புகளை தொடர்ந்து செய்ததால், இவ்வாறு செய்யப்பட்டது. தடை காலாவதியானதும், விக்கிப்பீடியாவின் வழிகாட்டுதலின் படி பயனுள்ள பங்களிப்பைச் செய்யுமாறு கேட்டுக்கொள்கிறோம்.
உங்களுடைய தடையை நீக்க தகுந்த காரணங்கள் இருப்பதாக நீங்கள் கருதினால், உங்களுடைய தடையை எதிர்த்து மேல்முறையீடு செய்யலாம். உங்கள் உரையாடல் பக்கத்தில் உள்ள தடை அறிவிப்புக்கு கீழேயான, உங்களுடைய காரணத்தை சேர்க்கவும்: {{unblock|reason=Your reason here ~~~~}}.  Kanags \உரையாடுக 09:58, 19 சூன் 2021 (UTC)[]

நான் தமிழ் விக்கிப்பீடியாவில் கிரந்தத் திணிப்பை எதிர்க்கிறேன்.. நன்றி வணக்கம்.. தணிகைவேல் மாரியாயி (பேச்சு) 12:15, 19 சூன் 2021 (UTC)[]

மேலே தணிகைவேல் அவர்கள் வைத்துள்ள கேள்விகளில் 4-ஆவதைத் தவிர மற்றவை முக்கியமானவை. குறிப்பாக மொழி முதல், மொழி ஈறு, மெய்ம்மயக்க விதிகள் தேவை என்பதில் ஐயம் இல்லை. இவை கடைப்பிடிக்கவேண்டுவது தேவை. கிரந்தத்தைக் கூடிய மட்டிலும் விலக்கி, வடவெழுத்து ஒரீஇ, தமிழெழுத்துகளில் எழுதுவது பிழையல்லவே.--செல்வா (பேச்சு) 22:05, 22 சூன் 2021 (UTC)[]

மொழி இலக்கணம்[தொகு]

செல்வா (பேச்சு) வணக்கம் ஐயா.. விடை அளித்ததற்கு நன்றி..

வேறு எந்த மொழியிலும் இல்லாத இலக்கணங்கள் நம் மொழியில் உள்ளது.. அதைக் காப்பது நம் கையில் தான் உள்ளது..

இங்கு சிக்கல் என்ன என்றால், வேற்று மொழிச் சொற்கள் (குறிப்பாக சிறப்புப் பெயர்கள்) எழுதும் பொழுது இலக்கணப் பிழைகள் ஏற்படுகிறது.. அதைக் (இலக்கணப் பிழைகளைக்) களைவது எப்படி என்று நாம் கலந்து உரையாடி முடிவெடுக்க வேண்டும்.. எந்த ஒரு சொல்லும் வேறு ஒரு மொழியில் எழுதும் பொழுது ஒலி மாற்றம் உறுதியாக ஏற்படும்.. இதைக் கருத்தில் கொள்வது நல்லது.. நன்றி..

[Wikimedia Foundation elections 2021] Candidates meet with South Asia + ESEAP communities[தொகு]

Hello,

As you may already know, the 2021 Wikimedia Foundation Board of Trustees elections are from 4 August 2021 to 17 August 2021. Members of the Wikimedia community have the opportunity to elect four candidates to a three-year term. After a three-week-long Call for Candidates, there are 20 candidates for the 2021 election.

An event for community members to know and interact with the candidates is being organized. During the event, the candidates will briefly introduce themselves and then answer questions from community members. The event details are as follows:

  • Bangladesh: 4:30 pm to 7:00 pm
  • India & Sri Lanka: 4:00 pm to 6:30 pm
  • Nepal: 4:15 pm to 6:45 pm
  • Pakistan & Maldives: 3:30 pm to 6:00 pm
  • Live interpretation is being provided in Hindi.
  • Please register using this form

For more details, please visit the event page at Wikimedia Foundation elections/2021/Meetings/South Asia + ESEAP.

Hope that you are able to join us, KCVelaga (WMF), 06:34, 23 சூலை 2021 (UTC)[]

re: Candidates meet with South Asia + ESEAP communities[தொகு]

Live interpretation will also be provided in Tamil. Sorry for the mistake in the previous message. KCVelaga (WMF), 09:39, 24 சூலை 2021 (UTC)[]

விக்கிமீடியா பவுண்டேஷன் 2021 போர்ட் ஆஃப் டிரஸ்டீஸ் தேர்தலில் வாக்களிக்க நினைவில் கொள்ளுங[தொகு]

அன்புடையீர் தணிகைவேல் மாரியாயி,

விக்கிமீடியா பவுண்டேஷன் 2021 போர்ட் ஆஃப் டிரஸ்டீஸ் தேர்தலில் நீங்கள் வாக்களிக்க தகுதியானவர் என்பதால் இந்த செய்தி பெறுகிறீர்கள். தேர்தல் ஆகஸ்ட் 18, 2021 இல் ஆரம்பிக்கப்பட்டது மற்றும் ஆகஸ்ட் 31, 2021 அன்று முடிவடைகிறது. விக்கிமீடியா பவுண்டேஷன் தமிழ் விக்கிப்பீடியா போன்ற திட்டங்களை செயல்படுத்துகிறது மற்றும் போர்ட் ஆஃப் டிரஸ்டீஸால் வழிநடத்தப்படுகிறது. போர்ட் என்பது விக்கிமீடியா பவுண்டேஷனின் முடிவெடுக்கும் அமைப்பாகும். போர்ட் ஆஃப் டிரஸ்டீஸ் பற்றி மேலும் அறிக.

இந்த ஆண்டு நான்கு இடங்கள் ஒரு சமூக வாக்கெடுப்பு மூலம் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும். உலகம் முழுவதும் இருந்து 19 வேட்பாளர்கள் இந்த இடங்களுக்கு போட்டியிடுகின்றனர். 2021 அறங்காவலர் குழு வேட்பாளர்களைப் பற்றி மேலும் அறிக.

கிட்டத்தட்ட 70,000 சமூக உறுப்பினர்கள் வாக்களிக்குமாறு கேட்கப்படுகிறார்கள். அதில் நீங்களும் இருக்கிறீர்கள்! வாக்குப்பதிவு ஆகஸ்ட் 31 23:59 UTC வரை மட்டுமே நீடிக்கும்.

நீங்கள் ஏற்கனவே வாக்களித்திருந்தால், வாக்களித்ததற்கு நன்றி மற்றும் தயவுசெய்து இந்த மின்னஞ்சலை புறக்கணிக்கவும். மக்கள் எத்தனை கணக்குகள் வைத்திருந்தாலும் ஒரு முறை மட்டுமே வாக்களிக்க முடியும்.

இந்தத் தேர்தல் பற்றிய கூடுதல் தகவல்களைப் படியுங்கள். MediaWiki message delivery (பேச்சு) 14:29, 27 ஆகத்து 2021 (UTC)[]