பனிமான்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

பனிமான்[தொகு]

பனிமான்

விலங்கியல் பெயர் ரான்ஸிகர். வட அமெரிக்காவின் வட முனையிலும் அருகிலுள்ள பகுதிகளிலும் காணப்படுகிறது.

வாழிடம்[தொகு]

புவியின் துருவப்பகுதிகளில் வாழும். லைக்கன் என்னும் பாசிக் காளானை உண்டு வாழ்கிறது. கலைமான் வகையைச் சார்ந்தது. கொம்பில் கிளைகளுண்டு. ஆண், பெண் இரண்டிலும் கலைக்கொம்புகள் காணப்பட்டாலும் ஆண் கொம்பு பெரியதாகவும், கிளைகள் மிகுந்துமிருக்கும். மற்ற மான்களைப் போல உடலமைப்பு இருப்பதில்லை. குளம்புகளும், பக்கக் குளம்புகளும் பெரியவை.

அமைப்பு[தொகு]

கொம்பின் முதற்கிளை கீழ் நோக்கி வளைந்திருக்கும். வாயை சுற்றி முடி இருக்கும். மேற்பகுதி கரும் பழுப்பாகவும், வயிற்றுப் பகுதி வெண்மையாகவும் இருக்கும். காதும், வாலும் குட்டையாகக் காணப்படும். 1.25 மீ உயரமும், 20 கி.கி எடையும் இருக்கும்.

பயன்கள்[தொகு]

லாப்லாந்து பகுதியில் பனிக்கட்டிப் பாதையில் சறுக்கு வண்டி இழுத்துச் செல்ல பயன்படுகிறது. விரவிய ஓடுவதுடன் நீண்ட தொலைவு பயணத்திற்கும் மூட்டைகளை ஏற்றிச் செல்ல பயன்படுகிறது. ஆடு, பசு, குதிரை போல மக்களுக்கு பயன்படுகிறது. தோல் ஆடையாகவும், பாலும் இறைச்சியும் உணவாகவும் பயன்படுகின்றன.

[1]

  1. அறிவியல் களஞ்சியம் தொகுதி 14
"https://ta.wikipedia.org/w/index.php?title=பனிமான்&oldid=2446352" இருந்து மீள்விக்கப்பட்டது