தோட்டா (எறியம்)

1. எறியமாக, தோட்டா;
2.பொதியுறை, அனைத்து பொருட்களையும் ஒன்றாக பிணைத்து வைத்திருப்பது;
3.உந்துபொருள், உதாரணமாக வெடிமருந்து அல்லது புகையற்ற மருந்து;
4. விளிம்பு, இதைபிடித்து தான் சுட்ட பொதியுறை, அறையில் இருந்து நீக்கப்படும்;
5. எரியூட்டி , உந்துபொருளை தீமூட்டும்.
தோட்டா என்பது சுடுகலன் சார்ந்த சொல் ஆகும். சுடுகலனின் குழலில் இருந்து வெளியேறும் எறியமே தோட்டா எனப்படும். ஆங்கிலத்தில், புல்லட் என்ற சொல், பிரெஞ்சு வார்த்தையான boulette-ல் (பொருள்: "சிறு பந்து") இருந்து வந்தது.[1] தோட்டாக்கள் வெவ்வேறு வகையான மூலபொருட்களால் செய்யப்படுபவை. தோட்டாக்கள், அதன் தேவைக்கேற்ப பல பாணியிலும், வடிவிலும் தயாரிக்கப்படுகிறது.
ஒரு தோட்டா என்பது வெடிபொதி அல்ல. காகிதம் மற்றும் உலோகத்தால் ஆன வெடிபொதியில், தோட்டா என்பது அதன் கூறுகளுள் ஒன்று.[2] எடை, மற்றும் விட்டம் போன்ற தோட்டாவின் அளவுகள், ஆங்கில மற்றும் மெட்ரிக் அளவீடுகளில் குறிக்கப்படும்.[3] உதாரணமாக: .22 கேலிபர் 55 நெல் எடை /நெல்லெடையும் (கிரைய்ன், Grain); 5.56 மிமீ 55 நெல்லெடையும், ஒரே தோட்டாவை விவரிக்கும் சமமான அளவுகள் தான். பேச்சுவழக்கில், "தோட்டா" எனும் சொல்லானது, வெடிபொதியை (தோட்டா,பொதியுறை, வெடிமருந்து, மற்றும் எரியூட்டி ஆகியவற்றின் ஒன்றிணைப்பு) குறிப்பிட பயன்படுத்த படுகிறது, இது வெடிபொதியின் கூறுகளை பற்றிய விவாதத்தின்போது குழப்பத்திற்கு வழிவகுக்கும்.
பல வெடிபொதிகளில் உபயோகிக்கப்படும் தோட்டாக்களின், சன்னத் திசைவேகம், ஒலியின் வேகத்தை மிஞ்சும் வகையிலிருக்கும்[4] [5] (உலர்ந்த 20 °C காற்றில்,நொடிக்கு 343 மீ என்ற வேகத்தில்). இதுதான், மீயோலிப் பண்பாகும். அதாவது, சுடும் "சப்தம்" நம் செவிக்கு எட்டும் முன், தோட்டா நம்மை கடந்து (சிலநேரம் இலக்கைக்கூட தாக்கி) இருக்கும். காற்றில் தோட்டாவின் வேகம், வளிம அழுத்தம், ஈரப்பதம், வெப்பநிலை, மற்றும் காற்றின் திசைவேகம் போன்ற பல காரணிகளை சார்ந்திருக்கும்.[6][7]
தோட்டாக்கள் இயல்பாக எந்த வெடிபொருளையும் கொண்டிருக்காது,[8] மோதலாலோ அல்லது துளைத்தோ தான் இலக்கை சேதமடையச் செய்யும்.
வரலாறு [தொகு]
1247-ல் ஐரோப்பாவில் வெடிமருந்தின் முதல் பிரயோகம் பதியப்பட்டுள்ளது. சீனாவில் இது நூற்றுக்கணக்கான ஆண்டுகளாக உபயோகத்தில் இருந்துள்ளது. 1327-ல் பீரங்கிகள் தோன்றின. பின்னர், 1364-ல் கைபீரங்கி தோன்றின. முற்கால எறியங்கள் கல்லால் ஆனவை. பீரங்கியும், கைபீரங்கியும் கற்களையே பிரயோகித்தன. பீரங்கிகளின் கல்லால் , கற்சுவற்றை ஊடுருவ இயலாமை தான், கனத்த உலோக குண்டுகளின் பயன்பாட்டிற்கு வித்திட்டது.

கைக் கல்வெரின் மற்றும் திரியியக்க ஆர்க்வெபசின் வருகையால், வார்க்கப்பட்ட ஈய குண்டுகள் எறியங்களாக பயன்படுத்தப்பட்டது. ஆங்கிலத்தில், 'புல்லட்' என்ற சொல், பிரெஞ்சு சொல்லான boulette-ல் (பொருள்: "சிறு பந்து") இருந்து வந்தது. அசல் மசுகெத்தின் குண்டு (பந்து), குழலின் விட்டத்தைவிட சிறிதாய் இருந்தது.
பத்தொன்பதாம் நூற்றாண்டின் முற்பாதியில், தோட்டாவின் வடிவம் மாற்றம் கண்டது. 1826-ல், பிரெஞ்சு காலாட்படை அதிகாரியான, ஹென்றி-குசுதாவு டெல்வின், உருள்-கோள வடிவ தோட்டாவை கண்டுபிடித்தார். ஆனால், அந்த வடிவம் தோட்டாவை உருக்குலைத்து துல்லியமற்றதாக மாற்றியது.
கூரான தோட்டாக்கள் [தொகு]


டெல்வின், தொடர்ந்து அந்த தோட்டாவின் வடிவை மேம்படுத்தி, 1830-ல் உருள்-கூம்பு வடிவ தோட்டாக்களை உருவாக்கினார். அவரின் தோட்டாவின் பின்புறத்தில், வரிவரியாக பள்ளமிட்டு பிரான்சுவா தமிசியே அதை மேம்படுத்தினார்.

1847-ல் பிரெஞ்ச்ப்படையின் கேப்டன் கிளோது-எட்டியன் மீனியே, ஈயத்தால் ஆன மீனியே தோட்டா வை முதலில் அறிமுகப்படுத்தினார். மீனியே தோட்டா, மூன்று வெளிப்புற பொளிவாயும், தோட்டாவின் அடியில் கூம்பு வடிவ வெற்றிடத்தைக் கொண்டிருக்கும், ஒரு கூம்பு வடிவ தோட்டா ஆகும்.

நவீன தோட்டா[தொகு]

உந்துதல் [தொகு]
தோட்டாவின் உந்துதல் பல வழிகளில் நிகழலாம்:
- வெடிமருந்தை மட்டுமே பிரயோகிப்பது (தீக்கல்லியக்க ஆயுதங்களை போல்)
- தட்டும் மூடி மற்றும் வெடிமருந்தை பிரயோகிப்பது
- வெடிபொதியை (தோட்டா,பொதியுறை, வெடிமருந்து, மற்றும் எரியூட்டி ஆகியவற்றின் ஒன்றிணைப்பு) பிரயோகிப்பது
மூலப்பொருட்கள் [தொகு]
- ஈயம்: எளிதாக வார்க்கப்படும் தோட்டா இதுதான். தொடர்ச்சியாக இதை (தோட்டாவை) சுடும்போது, ஈயம் உருகி மரையிடப்பட்ட குழலில் படிந்துவிடும். இதைத் தவிர்க்க, தாமிரம் போன்று கடினமான உலோகத்தால் ஆன சிறு தட்டை தோட்டாவின் அடிப்பகுதியில் வைக்கலாம். ஆனால், இந்த தாமிரத் தட்டால், அதிக வேகத்தில் சுடப்படும் தோட்டாக்களை தாக்குபிடிக்க இயலாது.
- மேலுறையிட்ட ஈயம்: அதிக வேக பயன்பாட்டிற்கு தகுந்த தோட்டா, ஈய உள்ளகத்தையும், தாமிரம், எஃகு, தாமிரநிக்கல் போன்ற உலோகத்தால் ஆன (மெல்லிய தகடு/மேலுறை போன்ற) வெளிப்புறத்தையும் கொண்டிருக்கும். முழு உலோக மேலுறையிட்ட தோட்டா என்பது அடிப்பகுதியை தவிர, இதர பரப்பில் கடினமான உலோக மேலுறையை கொண்டிருக்கும். இதை "பந்து தோட்டா" எனவும் சொல்வர். விரிவதற்கும், மிகுந்த தாக்கத்தை ஏற்படுத்தவும் சில தோட்டாவின் மேலுறை முன்பகுதியை மூடாது இருக்கும்; அவை தட்டைமுனை தோட்டா (திறந்திருக்கும் ஈய முனை, கூர்மையாக இல்லாமல் தட்டையாக இருக்கும்) மற்றும் உள்ளீடற்றமுனை தோட்டா (திறந்திருக்கும் ஈய முனையில் லேசான பள்ளம் இருக்கும்) ஆகும்.

- வார்ப்பு தோட்டா: முழுவது ஒரே ஒரு உலோகத்தை கொண்டு உருவாக்கப்பட்டது.
- வெற்று: மெழுகு, காகிதம், நெகிழி போன்றவைகளை பயன்படுத்தி ஒரு துப்பாக்கிச்சூடு போல தோற்றத்தை உருவாக்க பயன்படும். தோட்டா இல்லாத வெடிபொதியை தன வெற்று என்பர். இது சப்தம், நெருப்பு, மற்றும் புகையை மட்டும் தான் வெளிப்படுத்தும்.
- சாகடிக்காத தோட்டா: மீள்ம தோட்டா, நெகிழித் தோட்டா போன்றவற்றால் சுடும்போது, அது வலியை உண்டாக்கி ஒருவரை தற்காலிகமாக செயலிழக்க வைக்கும்.
- தீமூட்டும் தோட்டா: இலக்கை மோதியவுடன் அதை கொளுத்துவதற்காக, எளிதில் தீப்பிடிக்க கூடிய கலவையை தோட்டாவின் முனையில் வைத்து வடிவமைக்கப்படும் தோட்டா ஆகும்.
- வெடிக்கும் தோட்டா: தீமூட்டும் தோட்டா போலவே, இவ்வகை எறியம் கடினமான பரப்பில் மோதியவுடன் வெடிக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டது. பீரங்கிக் குண்டுகள் போன்றவை என தவறாக புரிந்துகொள்ளாதீர். இதன் முனையில் உள்ள சிறு பள்ளத்தில், சிறிய அளவிலான வெடிபொருளை மட்டுமே நிரப்ப முடியும். வெடிக்கும் தோட்டாக்கள் விமான இயந்திரத் துப்பாக்கிகளில் பயன்படுத்தப்படுபவை .
- தடங்காட்டி: இதன் உள்ளீடற்ற பின்பகுதியில், பட்டொளி உமிழும் கலவையைக் கொண்டு நிரப்பப் பட்டிருக்கும். வழக்கமாக, பளீரென்ற சிகப்பு நிறத்திற்கு, மக்னீசியம் உலோகம், பெர்குளோரேட் மற்றும் இசுட்ரோன்சியம் உப்புகளில் கலவையை பயன்படுத்துவர். இதர நிறங்களை, வெவ்வேறு வேதிப்பொருட்களால் உண்டாக முடியும். தடம் காட்டும் கலவை, ஒரு குறிப்பிட்ட நேரத்திருக்கு பின் எரிய ஆரம்பிக்கும். துப்பாக்கியைக் கொண்டு, நகரும் இலக்குகளை குறிபார்த்து சுட கற்றுக்கொள்ள, இவ்வகை தோட்டாக்கள் சுடுநருக்கு கைகொடுக்கின்றன. பொதுவாக, நான்கிற்கு ஒன்று என்ற வீதத்தில், பந்து தோட்டாவுடன் இதை பயன்படுத்துவர்.
- கவசந் துளைப்பி: மேலுறையிடப்பட்ட வடிவத்தில் உபயோகிக்கப்பட்ட, கடிமான உலோகத்தை இதன் உள்ளகம் கொண்டு இருக்கும். தங்குதன், தங்குதன் கார்பைடு, மெலிவுற்ற யுரேனியம் அல்லது எஃகு போன்ற அதிக-அடர்த்தி மிகுந்த உலோகங்கள் இதில் பயன்படுத்தப்படும்.
- நஞ்சற்ற தோட்டா: பிசுமத், எஃகு, தங்குதன் மற்றும் இதர கலப்புலோக தோட்டாக்கள், ஈயத்தால் சுற்றுசூழலுக்கு ஏற்படும் நச்சுத்தன்மையை தவிர்க்கும்.[9]
தோட்டாவின் சுருக்கங்கள்[தொகு]
|
|
|
மேலும் பார்க்க [தொகு]
மேற்கோள்கள்[தொகு]
- ↑ Merriam-Webster Dictionary (5th ). Springfield, Massachusetts: Merriam-Webster Incorporated. 1994. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:0-87779-911-3.
- ↑ "Bullet Types: A Reference Guide". cheaperthandirt.com. 28 January 2017 அன்று பார்க்கப்பட்டது.
- ↑ "What is Caliber? Bullet Sizes Explained". thefirearms.guide. 2 பிப்ரவரி 2017 அன்று மூலம் பரணிடப்பட்டது. 28 January 2017 அன்று பார்க்கப்பட்டது.
- ↑ "Handgun Ballistics" (PDF). hornady.com. 21 ஏப்ரல் 2015 அன்று மூலம் (PDF) பரணிடப்பட்டது. 28 January 2017 அன்று பார்க்கப்பட்டது.
- ↑ "Ballistics - Rifle Ammunition Product Lines" (PDF). hornady.com. 2 பிப்ரவரி 2017 அன்று மூலம் (PDF) பரணிடப்பட்டது. 28 January 2017 அன்று பார்க்கப்பட்டது.
- ↑ https://www.youtube.com/watch?v=eneaN4h-qBs HOW fast bullet travels
- ↑ http://www.mythbusterstheexhibition.com/science-content/dodge-a-bullet/ பரணிடப்பட்டது 2016-11-18 at the வந்தவழி இயந்திரம் DODGE A BULLET
- ↑ Swift, B; Rutty, GN. "The exploding bullet". J Clin Pathol 57: 108. doi:10.1136/jcp.57.1.108. பப்மெட்:14693853.
- ↑ "Research--Eagles and Lead". SOAR Raptor Foundation.
- ↑ "Bullet Basics 1- Materials; Remington Accelerator (at bottom of page)". Firearmsid.com. 2012-08-10 அன்று பார்க்கப்பட்டது.
- ↑ [1] பரணிடப்பட்டது அக்டோபர் 8, 2011 at the வந்தவழி இயந்திரம்
- ↑ [2] பரணிடப்பட்டது சனவரி 3, 2012 at the வந்தவழி இயந்திரம்
- ↑ "RWS | Rottweil: RWS | Rottweil". Jagd.rottweil-munition.de. August 18, 2011 அன்று மூலம் பரணிடப்பட்டது. 2012-08-08 அன்று பார்க்கப்பட்டது.
- ↑ "RWS | Rottweil: RWS | Rottweil". Jagd.rottweil-munition.de. August 18, 2011 அன்று மூலம் பரணிடப்பட்டது. 2012-08-08 அன்று பார்க்கப்பட்டது.
- ↑ BGB Enterprises. "Lead Bullets Technology - Premium Molds". Lbtmoulds.com. 2010-10-09 அன்று மூலம் பரணிடப்பட்டது. 2012-08-10 அன்று பார்க்கப்பட்டது.
- ↑ "TAG". Brenneke-munition.de. 2008-01-24. 2011-07-18 அன்று மூலம் பரணிடப்பட்டது. 2012-08-08 அன்று பார்க்கப்பட்டது.
- ↑ "TIG". Brenneke-munition.de. 2008-01-24. 2011-10-07 அன்று மூலம் பரணிடப்பட்டது. 2012-08-08 அன்று பார்க்கப்பட்டது.
- ↑ "TUG". Brenneke-munition.de. 2011-10-07 அன்று மூலம் பரணிடப்பட்டது. 2012-08-08 அன்று பார்க்கப்பட்டது.
- ↑ "TOG". Brenneke-munition.de. 2008-01-24. 2011-07-18 அன்று மூலம் பரணிடப்பட்டது. 2012-08-08 அன்று பார்க்கப்பட்டது.
- ↑ "RWS | Rottweil: RWS | Rottweil". Jagd.rottweil-munition.de. August 18, 2011 அன்று மூலம் பரணிடப்பட்டது. 2012-08-08 அன்று பார்க்கப்பட்டது.