வார்ப்படம் (உலோக வேலை)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
வார்ப்படத்திற்கு முன் உருகியநிலை உலோகம்
மணல் அச்சில் வார்ப்பட இரும்பு

உலோகவியலில் வார்ப்படம் அல்லது வார்ப்பு (Casting) என்பது உருகிய நிலையில் உள்ள திரவ உலோகத்தை தயார் நிலையில் உள்ள தேவையான ஒரு வார்ப்புக் குழிவினுள் நிரப்பி அதனைப் படிப்படியாக குளிரவிட்டு திண்மமாகப் பெறப்படும் பொருளாகும். உற்பத்தி செய்யப்படும் வார்ப்படம் பின்னர் சேதப்படாமல் வெளியில் உடைத்து எடுக்கப்பட்டு அல்லது வெளியேற்றப்பட்டால்தான் இச்செயல் முறை நிறைவடைகிறது. மற்ற முறைகளில் தயாரிக்க முடியாத பெரும்பாலும் அரிய மிகவும் சிக்கலான வடிவமைப்புகள் மற்றும் அதிக செலவு பிடிக்கும் மற்ற தயாரிப்பு முறைகள் ஆகியவற்றிற்கு மாற்றாக வார்ப்படவியல் தொழில் பயன்படுத்தப்படுகிறது[1].

வார்ப்படச் செயல்முறை தொன்மைக் காலம் தொடங்கி ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக நடைபெற்று வருகிறது. உயர் உலோகங்களைப் பயன்படுத்தி அணிகலன்கள், செம்பைப் பயன்படுத்தி சிலைகள் மற்றும் ஆயுதங்கள் இன்னபிற கருவிகள் ஆகியனவற்றைத் தயாரிக்க இவ்வார்ப்படவியல் துறை பயன்பட்டு வந்துள்ளது. மெழுகு வார்ப்படங்கள், சாந்து வர்ப்படங்கள் மற்றும் மணல் வார்ப்படங்கள் ஆகியன பண்டைய மரபார்ந்த நுணுக்கங்களை உள்ளடக்கியனவாகும்.

உருக்கி வார்க்கும் தொழில் தற்கால அறிவியல் நுட்பங்களுடன் இணைந்து இழத்தகு வார்ப் படம் இழத்தகா வார்ப் படம் என்ற இரண்டு பிரதான பிரிவிகளாக விரிவடைந்துள்ளது. மேலும் இப்பிரிவுகள் உபயோகப்படும் பொருட்களின் அடிப்படையிலும் ( மணல் அல்லது உலோகம்), நிரப்பும் செயலின் அடிப்படையிலும் (ஈர்ப்பு விசை, வெற்றிடம் அல்லது குறைவான அழுத்தம்) வெவேறு பிரிவுகளாகப் பிரிக்கப்படுகிறது.

மணல், நெகிழி, சிப்பி, சாந்து, மற்றும் மெழுகு வார்ப் படங்கள் இழத்தகு அச்சு வார்ப்படம் என்ற பொதுப்பிரிவினுள் அடங்குகின்றன. இவ்வகை வார்ப்படங்கள் தற்காலிகமானவை மற்றும் மறு பயன்பாட்டிற்கு இயலாதவைகளாக உள்ளன.

Casting processes.svg

மேற்கோள்கள்[தொகு]

உசாத்துணை[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]