கொக்கித் துமுக்கி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
முற்கால கொக்கித் துமுக்கி வடிவம்; ஒரு கொக்கியுள்ள கைபீரங்கி.
ஈடோ காலத்து டனேகசிமா கொக்கித் துப்பாக்கி.

கொக்கித்துமுக்கி அல்லது ஆர்க்வெபசு (ஆங்கிலம் arquebus,இத்தாலியம் Archibugio, தச்சு மொழி haakbus, பொருள் "கொக்கி துப்பாக்கி",[1] அல்லது "கொக்கிக் குழல்") என்பது 15 முதல் 17-ஆம் நூற்றாண்டு வரை பயன்பாட்டில் இருந்த சன்னவாய் வழியாக குண்டேற்றப்படும் சுடுகலன் ஆகும். முதன்முதலில், கொக்கித் துமுக்கி என்பது, ஒரு கொக்கியுள்ள கைபீரங்கி தான்; பின்னர் திரி-இயங்குநுட்ப  சுடுகலன் ஆனது. இதற்கு பின்னால் வந்த மஸ்கெத்தை போல, இதுவும் மரையிடா  குழலை கொண்ட சுடுகலன் ஆகும்.[2]

கொக்கித் துமுக்கியை ஏந்தி போரிடுபவரை ஆர்க்வெபசியர் என அழைப்பர்.

இதுதான் மரைகுழல் துமுக்கி மற்றும் இதர நீள்துப்பாக்கிகளுக்கு  முன்னோடி ஆகும். கொக்கித்துமுக்கியின் மேம்படுத்தப்பட்ட வடிவமான கேலிவெர், 16-ஆம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் அறிமுகப்படுத்தப்பட்டது. 

வாகனங்களில் பொருத்தப்பட்டிருந்த கனரக ஆர்க்வெபசுகளை ஆர்க்வெபசு-ஆ-க்ரோக் என அறியப்பட்டன.[3] இவை 3.5 அவுன்ஸ் (100 கிராம்) குண்டுகளை கொண்டிருந்தன.[4]

செயலாற்றல் [தொகு]

ஜப்பானியர்களின் (ஆசியாவில்), டச்சு மற்றும் போர்ச்சுக்கீசியர்களின் (ஐரோப்பாவில்), அதிர் வேட்டுச்சூட்டால்; கொக்கித் துமுக்கி, நவீன இராணுவங்களின் பலமாக ஆனது. 1520-களின் ஆரம்பத்திலேயே, ஐரோப்பிய போர்களத்தில் அதிர் வேட்டுச்சூடு இருந்துள்ளது,[5] இது படைகளின் வழக்கமான அணிவகுப்பை, வரிசையாக (வீரர்கள்) நின்று சுழற்சி முறையில் சுடும் படையாக மாற்றியது.

ஒவ்வொரு முறையும், (வீரர்களின்) முதல் வரிசை சுட்ட மறுகணமே, மீண்டும் குண்டேற்றுவதர்காக அணிவகுப்புக்கு பின்னால் சென்றுவிடுவர். இரண்டாம் வரிசையும், முதல் வரிசை சுட்டதுபோலவே சுடும். இதேபோல பின்வரும் வரிசைகள் அனைத்தும் செயல்படும். (வீரர்களின்) கடைசி வரிசை சுட்டபிறகு; முதல் வரிசை வீரர்கள் அனைவரும் துப்பாக்கிகளில் குண்டேற்றி சுடத் தயாராக இருப்பர். 


இதுமாதிரி சுடும் முறையை கடைபிடிக்கும் போது, சுடும் வேகம் மற்றும் திறன் அபரிவிதமாக உயர்ந்தது. பெரும்பாலான நவீன-முற்கால படைகளில், துணை ஆயுதமாக இருந்த ஆர்க்வெபசு, முதன்மை ஆயுதமாக மாறியது.[6]

இயங்குநுட்பம்[தொகு]

ஆர்க்வெபசு, அதன் முன்பிருந்த சுடுகலனைவிட பெரிய குழல்விட்டத்தை கொண்டிருக்கும். மத்திய 16-ஆம் நூற்றாண்டு வரை, திரி-இயங்குநுட்பத்தில் சுடப்பட்ட இவைகள், பிறகு புதிய சக்கர-இயங்குநுட்பத்தால் சுடப்பட்டன. சிலவற்றில் இருந்த விரிந்த சன்னவாய், குண்டேற்றுவதை எளிதாக்கியது. ஆர்க்வெபசின் பிற்பகுதியின் வளைத்த வடிவினால், இதற்கு 'கொக்கித் துமுக்கி' என பெயர் வந்தது. அனைத்து ஆர்க்வெபசுகளும், பல துமுக்கிக் கொல்லர்களால் கையால் மட்டுமே செய்யப்பட்டவை, அதனால் இதற்கு பிரத்தியேக மாதிரிகள் இல்லை.

முந்தைய ஆர்க்வெபசின் விசையின் இயங்குநுட்பம், குறுக்குவில் இருந்தது போல இருக்கும். 16-ஆம் நூற்றாண்டின் கடைசியில், பல நாடுகளின் துமுக்கிக் கொல்லர்கள் தண்டிற்கு செங்குத்தான, சிறு விசையை (தற்கால நவீன சுடுநர்கள் அறிந்த) அறிமுகபடுத்தினார். 

வரலாறு [தொகு]

நகாஷினோ  போரில், ஓடா நொபுனாகா 3000 கொக்கித் துமுக்கிகளை உபயோகித்தார்.

கொக்கித்துமுக்கியை முதன்முதலில் அதிக எண்ணிக்கையில் பயன்படுத்தியது, அன்கேரியை (1458–1490) ஆண்ட மாத்தியாஸ் கார்வினுஸ் என்ற மன்னரால் தான்.[7] அங்கேரிய கறுப்புப் படையில், தரைப்படையின் ஒவ்வொரு நான்காவது வீரரிடமும்; ஒட்டுமொத்தப் படையில், ஒவ்வொரு ஐந்தாம் வீரரிடமும், ஒரு கொக்கித்துமுக்கி இருந்தது.[8] இருப்பினும் கொக்கித் துமுக்கியின் சுடும் வேகவிகிதம் குறைவு என்பதால், போர்களத்தில் மன்னர் மாத்தியாஸ் கவசம்பூண்ட வீரர்களையே முன்நிறுத்தினார். கறுப்புப் படை கலைக்கப்பட்டு பத்தாண்டுகள் ஆகியும் கூட, 16-ஆம் நூற்றாண்டில், வெறும் 10% மேற்கு-ஐரோப்பிய வீரர்கள் மட்டுமே சுடுகலன்களை உபயோகித்தனர்.[9][10] 

ரஷ்யாவில் பரிணாமித்த ஆர்க்வெபசை பிஷ்ஷேல் (உருசியம்: пищаль) என்றழைத்தனர். ரஷ்யர்கள் ஆர்க்வெபசியரை பிஷ்ஷேல்னிக்கி என்றனர்.

டனேகசிமா தீவில் எதார்த்தமாக தரையிறங்கிய போர்ச்சுகீசிய வர்த்தகர்களால், கொக்கித்துமுக்கிகள் ஜப்பானில் 1543-ல் அறிமுகப்படுத்தப்பட்டது. 1550-ஆம் ஆண்டிற்குள், போர்ச்சுகீசிய கொக்கித்துமுக்கிகளின் நகல்களான "டனேகசிமா, ஹினாவாஜு அல்லது டெப்போ" எனப்படுபவை அதிக எண்ணிக்கையில் தயாரிக்கப்பட்டது. அறிமுகமான முதல் பத்தாண்டுகளில், முன்னூறாயிரம் (3 இலட்சம்) டனேகசிமா தயாரிக்கப்பட்டதாக அறியப்பட்டது.[11] இதனால் டனேகசிமா, ஜப்பானின் மிகமுக்கியமான ஆயுதங்களுள் ஒன்றாக மாறியது. 

நஸ்ஸோவின் மொரீசு, முதலில் செயல்படுத்திய அதிர்வேட்டுச்சூடு உத்தியின்மூலமாக, கொக்கித் துமுக்கியின் செயலாற்றல் அதிகரித்தார்.

கொக்கித் துமுக்கிகள் உபயோகிக்கப்பட்ட முக்கிய போர்கள்:

வில்களுடனான ஒப்பீடு[தொகு]

பாஜோ-ழுட்சு, குதிரையேற்ற சாமுராய்களால் உபயோகிக்கப்பட்ட ஜப்பானிய கொக்கித்துமுக்கி.

தேர்ந்த வில்லாளியின் கையில் உள்ள வில்லின் துல்லியத்தை, கொக்கித்துமுக்கிகளால் ஈடு செய்ய இயலாது. குறுக்குவில் மற்றும் நீள்வில்லை விட, இவற்றால் வேகமாகவும், ஆற்றலுடனும் சுடமுடியும். கொக்கித்துமுக்கி, ஏந்தியிருப்பவரின் உடல்வலிமையை சார்ந்து எறியத்தை வெளியேற்றுவதில்லை. இதனால், சோர்வு மற்றும் பிணி போன்றவைகளால் பாதிப்படையும்போது வில்லாளிகளைவிட ஆர்க்வெபசியர்கள் அதிக போர்த்திறன் கொண்டிருப்பர். அதீத காற்று வில்களின் துல்லியத்தை குறைக்கும், ஆனால் கொக்கித் துமுக்கிகளில் அது குறைந்த தாக்கத்தை மட்டுமே கொண்டிருக்கும். 

ஒருவர் வில்வித்தையில் கைதேர கிட்டத்தட்ட அவர் வாழ்கையையே அர்பணிக்க நேரிடும். ஏனெனில் ஒருவர் வில்லாளியாக பல ஆண்டுகள் பயிலவேண்டும், ஆனால் கொக்கித்துமுக்கியை கையாள சிலமாத பயிற்சியே போதுமானது. இதனால் வீரர்களை விரைவாக போருக்கு பயிற்றுவிக்க முடியும்.

ஒரு வில்லாளி எடுத்துசெல்லும் அம்புகளின் எண்ணிக்கையைவிட, ஒரு ஆர்க்வெபசியரால் கொண்டுசெல்ல வல்ல குண்டுகளும் வெடிமருந்தும் அதிகம். வெடிமருந்தையும் குண்டுகளையும் எளிதில் அதிக எண்ணிக்கையில் தயாரிக்க இயலும், ஆனால் அம்புகளை தயாரிக்க அதிக நுணுக்கமும் நேரமும் தேவைப்படும்.

ஒரு ஆர்க்வெபசியர் அவரின் ஆயுதத்தை தயார்படுத்துகிறார்.

கொக்கித்துமுக்கி ஈரமான வானிலைக்கு ஏற்றதல்ல. விய்யலார் போரில், கிளர்சிப் படைகள் தோற்றதற்கு, மழைக்காலத்தில் அதிகமான ஆர்க்வெபசியர்களை கொண்டிருந்தது தான் முக்கிய காரணமாக அமைந்தது.[12] அம்புகளை கண்டெடுத்து மீண்டும் பயன்படுத்த இயலும், ஆனால் துமுக்கியில் அவ்வாறு செய்ய இயலாது. ஒரு வீரரிடம் கையில் உள்ள  குண்டுகள் தீர்ந்தபிறகு, அவரால் தனக்குத்தானே (அம்புகளை கண்டேடுப்பதைபோல்) குண்டுகளை கண்டெடுக்க முடியாது. அம்பு தயாரிப்பதை விட வெடிமருந்தை தயாரிப்பதுதான் மிகவும் ஆபத்தானது.

ஒரு ஆர்க்வெபசியர் அவரின் ஆயுதத்தை வெடிக்கச் செய்கிறார்.

மேலும், இரகசிய தாக்குதலுக்கு வில்கள்தான் ஏற்றவை, கொக்கித்துமுக்கி ஏற்றத்தல்ல. இருட்டில் இருந்து வில்லால் தாக்கினால் வில்லாளியை கண்டுபிடிக்க இயலாது, ஆனால் கொக்கித்துமுக்கி, சுடுநரின் இருப்பிடத்தை எதிரிக்கு தெளிவாக காட்டிக் கொடுக்கும். கொக்கித்துமுக்கியின் இரைச்சலால், தளபதி/கட்டளையிபவரின் குரலை கேட்க கடினமாக இருக்கும்.

மேலும் பார்க்க [தொகு]

மேற்கோள்கள் [தொகு]

புற இணைப்புகள் [தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=கொக்கித்_துமுக்கி&oldid=2185658" இருந்து மீள்விக்கப்பட்டது