நீள் துப்பாக்கி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
1948-ல் நீள்துப்பாக்கிகளை பிரயோகிக்கும் ஹகான துணைராணுவத்தினர்.

நீள் துப்பாக்கி என்பது சுடுகலன்கள் அல்லது பீரங்கிகளில், நீளமான குழல்கள் கொண்ட ஒரு வகையாகும். சிறு சுடுகலன்களை (small arms) பொறுத்தவரை, நீள்துப்பாக்கி என்பது தோளோடு முட்டுகொடுத்து சுடுவதற்குகாக வடிவமைக்கப்பட்டவை (கைத்துப்பாக்கி இதற்கு மாறானது). ஆனால் பீரங்கி ரகத்தை (artillery) பொறுத்தவரை, ஹாவித்சர் அல்லது காறோனேடை விட, நீள்துப்பாக்கி மாறுபட்டு இருக்கும்.[1][2]

சிறு சுடுகலன்களின் கீழ்வரும், நீள்துப்பாக்கிகளுக்கு எடுத்துக்காட்டாக : மரைகுழல் துப்பாக்கி, சன்ன-சிதறு துமுக்கி, மசுகெத்துகள்பிளந்தர்பசுகள், குரும்மசுகெத்துகள், சுவர்த்துப்பாக்கிகள், மற்றும் மசுகெத்தூண்கள் ஆகியவற்றை சொல்லலாம்.

நீள்துப்பாக்கிகளின் சாதகங்களும் பாதகங்களும்[தொகு]

கைத்துப்பாக்கியை விட அதிக பிடிமானத்தை கொடுக்க, பெரும்பான்மையான நீள்துப்பாக்கிகளில் தண்டும், முன்பக்க பிடிப்பும் இருக்கும். அதோடு, நீள்துப்பாக்கியில் நீண்ட குழல் இருப்பதால், குறிநோக்கியில் சரிநுட்பமாக குறிவைக்க இயலும். இவ்வகை துப்பாக்கிகளில் தொலை குறிநோக்கி அல்லது செம்புள்ளி குறிநோக்கியை பொறுத்தி பிரயோகிக்க எளிதாக இருக்கும்.

நீள்துப்பாக்கியின் திணிவு சற்று மிகையாகவே இருக்கும், இதனால் எளிதில் தூக்கிச் செல்ல முடியாது. மிகையான நிலைமத் திருப்புத்திறன் இருப்பதால், இதனை பக்கவாட்டிலோ அல்லது மேலும்-கீழுமாகவோ குறைந்த வேகத்தில் தான் நகர்த்தமுடியும், இது குறிவைக்கும் நேரத்தை அதிகமாக்கும். இருந்தாலும், இது குறிவைக்க அதிக நிலத்தன்மையோடு இருக்கும். நீள்துப்பாக்கியின் நீளம் அதிகமானால், அதை அவ்வாறு தயாரிக்க செலவும் அதிகமாகும். இதன் நீளம் அதிகம் என்பதால் இதை மறைத்து கொண்டு போக முடியாது, குறுகிய இடங்களில் பயன்பாட்டிற்கு அசவுகரியமாக இருக்கும். மற்றும் இதை வைக்க பெரிய இடம் தேவை.

கப்பற் நீள்துப்பாக்கி [தொகு]

துளான்-ல் நடந்த ப்ரெஃபெக்தியூர் மரிடைமில் காட்சிப்படுத்தப்பட்ட கப்பற் நீள்துப்பாக்கிகள்

வரலாற்றின் கப்பற்படை பயன்பாட்டில், பாய்மரக் கப்பல்களில் பொருத்தப்பட்ட பிரதான பீரங்கிநீள் துப்பாக்கி ஆகும். நீளம் குறைந்த காறோனேடுகளில் இருந்து வேறுபடுத்திக் காட்டவே, இந்த கப்பற்பீரங்கியை நீள் துப்பாக்கி என்றனர்.

மேற்கோள்கள் [தொகு]

  1. "SAAMI Glossary, shoulder arm" பரணிடப்பட்டது 2007-10-31 at the வந்தவழி இயந்திரம்.
  2. "SAAMI Glossary, gun, long" பரணிடப்பட்டது 2007-09-18 at the வந்தவழி இயந்திரம்.
"https://ta.wikipedia.org/w/index.php?title=நீள்_துப்பாக்கி&oldid=3218787" இருந்து மீள்விக்கப்பட்டது