தொண்டைக் கட்டு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தொண்டைக் கட்டு
தொண்டைக் கட்டுள்ள குழந்தையொன்றின் எக்சு-கதிர் படம்
வகைப்பாடு மற்றும் வெளிச்சான்றுகள்
சிறப்புpulmonology, pediatrics
ஐ.சி.டி.-10J05.0
ஐ.சி.டி.-9464.4
நோய்களின் தரவுத்தளம்13233
மெரிசின்பிளசு000959
ஈமெடிசின்ped/510 emerg/370 radio/199
பேசியண்ட் ஐ.இதொண்டைக் கட்டு
ம.பா.தD003440

தொண்டைக் கட்டு அல்லது குரல்வளை, மூச்சுக்குழாய் அழற்சி (Croup or Acute Laryngo tracheo bronchitis ALTB ) என்பது சுவாசத் தொகுதியில் ஏற்படும் ஒரு மருத்துவ நிலைமையாகும். இதன்போது தொண்டை, குரல்வளை, மூச்சுக்குழல் போன்ற சுவாசப்பாதையின் மேல் பகுதிகளில் அழற்சி ஏற்படுகின்றது. இது சுவாசப்பாதையில், தீவிரமாக இருக்கும் தீநுண்ம நோய்த்தொற்றினாலேயே வழக்கமாகத் தூண்டப்படுகின்றது. இந்தத் தொற்றானது தொண்டையின் உள்ளாக வீக்கத்தை ஏற்படுத்தி, இயல்பான சுவாசத்திற்கு இடையூறு செய்து “குரைத்தல்” போன்ற இருமல், மிகைமூச்சொலி (Stridor), மற்றும் கீச்சுக்குரல் (hoarseness) போன்ற நிலைகளை ஏற்படுத்துகிறது. இது மிதமான, நடுத்தரமான அல்லது கடுமையான அறிகுறிகளை உண்டாக்கலாம். இவை பெரும்பாலும் இரவில் மோசமாகலாம். பெரும்பாலும் வாய்வழி உட்கொள்ளும் ஸ்டீராய்டு (steroids) மருந்தை ஒரு தடவை அளிப்பதன் மூலம் சிகிச்சையளிக்கப்படுகிறது. கடுமையான நிகழ்வுகளில் எப்போதாகிலும் எப்பினஃப்ரீன் / அட்ரினலின் (epinephrine) மூச்சிழுத்தல் மூலம் உள்ளெடுக்கப்படல் பயன்படுத்தப்படுகிறது. மருத்துவமனையில் சேர்ப்பித்தல் அரிதாகவே இருக்கும்.

குரல்வளை மூடியழற்சி (epiglottitis), சுவாச வழியில் வெளிப் பொருட்களால் ஏற்படும் அடைப்பு (airway foreign body) போன்ற மிகக் கடுமையான காரணங்கள் இல்லையென்று அறியப்பட்ட பின்னரே பொதுவாக மருத்துவ அடிப்படையிலேயே தொண்டைக்கட்டு அடையாளம் காணப்படுகிறது. இரத்தப் பரிசோதனைகள், எக்சு-கதிர், மற்றும் வளர்ப்பூடகத்தில் மாதிரி எடுத்து வளர்த்தல் போன்ற மேலதிக ஆய்வுப் பரிசோதனைகள் வழக்கமாகத் தேவைப்படுவதில்லை. இது பெரும்பாலும் 6 மாதங்கள் முதல், 5-6 வயதுக்கு இடைப்பட்ட குழந்தைகளில் 15 சதவீதத்தினரை ஏதேனும் ஒரு தருணத்தில் பாதிக்கின்ற ஒரு சாதாரண மருத்துவ நிலைமை ஆகும். வளர் இளம் பருவத்தினர் அல்லது வயதுக்கு வந்தவர்களில் இது பெரும்பாலும் காணப்படுவதில்லை. முன்பு இது தொண்டை அழற்சி (diphtheria) நோய்க்கான முதன்மைக் காரணமாக இருந்தது. ஆனால் தற்போது தடுப்பு மருந்தேற்றத்தின் வெற்றி காரணமாகவும், மேம்படுத்தப்பட்ட சுகாதாரம் மற்றும் வாழ்க்கைத் தரத்தினாலும் மேலைத்தேய நாடுகளில் சரித்திரத்தில் மட்டுமே இடம் பெற்ற ஒன்றாக இப்போது கருதப்படுகிறது.

நோய் அறிகுறிகளும் உணர்குறிகளும்[தொகு]

தொண்டைக் கட்டானது “குரைத்தல்” ஒலியுடன் வரும் இருமல், மிகைமூச்சொலி, கீச்சுக்குரல், குறுகிய மூச்சு அல்லது மூச்சிரைப்பு போன்ற மூச்சுவிடலில் ஏற்படும் கடினத்தன்மை போன்ற அறிகுறிகளைக் கொண்டிருக்கின்றது. இந்த அறிகுறிகள் இரவில் மோசமடைகிறது.[1] ”குரைத்தல்” போன்ற ஒலியானது பொதுவாகக் கடல்நாய் அல்லது கடற்சிங்கத்தின் ஒலியைப் போல் இருப்பதாகக் கூறப்படுகின்றது.[2] வேறுபட்ட மிகைமூச்சொலியானது ஒலியானது கலக்கம், அழுகை போன்ற நிலைகளில் மோசமடைகிறது. அவ்வாறு இல்லாமல் ஓய்வாக இருக்கையிலேயே இது உணரப்படுமாயின், அது சுவாசப்பாதையின் குறுக்கம் சிக்கலான நிலைக்குப் போவதைச் சுட்டிக்காட்டுவதாக இருக்கும். தொண்டைக்கட்டு மோசமடையும்போது, மிகைமூச்சொலி அறிகுறி கணிசமாகக் குறையக்கூடும்.[1]

காய்ச்சல், மூக்கின் உள்ளாக இருக்கும் சீதச்சவ்வில் ஏற்படும் அழற்சி (தடிமன் இருக்கும்போது ஏற்படுவது போன்ற நிலை), மற்றும் நெஞ்சுச் சுவர் உள்வாங்குதல் என்பவை ஏனைய அறிகுறிகளாகும்.[1][3] எச்சில் வடிதல் அல்லது உடல்நிலை மோசமடைந்த தோற்றம் ஆகியவையும் காணப்படும்.[3]

காரணங்கள்[தொகு]

தொண்டைக்கட்டானது வழமையாகத் தீநுண்மத் தொற்று ஒன்றின் காரணமாக ஏற்படுவதாகவே கருதப்படுகிறது.[1].[4] ஆனாலும் பொதுவாகத் தொண்டைக் கட்டு என்பது, தீவிரமான கீழ்த்தொண்டை-மூச்சுக்குழல் தொற்று, சீரற்ற தொண்டைக்கட்டு (spasmodic croup), கீழ்த்தொண்டை அழற்சி, பாக்டீரியாவால் வரும் மூச்சுக்குழல் அழற்சி, கீழ்த்தொண்டை-மூச்சுக்குழல்-மூச்சுக் கிளைக்குழாய் அழற்சி, மற்றும் கீழ்த்தொண்டை-மூச்சுக்குழல்-மூச்சுக் கிளைக்குழாய்-நுரையீரல் அழற்சி ஆகிய அனைத்தையும் குறிப்பிடுவதாக இருக்கின்றது. முதல் இரண்டு நிலைமைகள் தீநுண்மத் தொற்றுடன் சம்பந்தப்பட்டதாகவும், அறிகுறிகள் காணும் இயலின்படி பொதுவாகவே மிதமானவையாகவும், ஏனைய நான்கும் பாக்ட்டீரியா தொற்றின் காரணமாக ஏற்படுபவையாகவும், வழக்கமாகச் சற்று கடுமையானவையும் இருக்கும் நிலைமைகளாகும்.[2]

தீநுண்மம்[தொகு]

தீநுண்மத்தால் வரும் தொண்டைக்கட்டு அல்லது தீவிரமான கீழ்த்தொண்டை-மூச்சுக்குழல் அழற்சி parainfluenza virus இனால் ஏற்படுகிறது. 75% நிகழ்வுகளில் வகை1 அல்லது 2 இனால் உருவாகும்.[5] இன்ஃபுளுவென்சா A மற்றும் B, தட்டம்மை, en:adenovirus மற்றும் en:respiratory syncytial virus (RSV) முதலானவையும் தொண்டைக் கட்டை உருவாக்கும்.[2] சீரற்ற தொண்டைக்கட்டானது தீவிரமான கீழ்த்தொண்டை-மூச்சுக்குழல் அழற்சிக்கான அதே தீநுண்ம வகையினால் உருவாகின்றதாயினும், தொற்றுக்கான வழமையான அறிகுறிகள் (காய்ச்சல், கரகரப்பான தொண்டை மற்றும் அதிகரித்த முழுமையான குருதி எண்ணிக்கை) போன்றவற்றைக் கொண்டிருப்பதில்லை.[2] சிகிச்சையும், சிகிச்சைக்கான விளைவும் ஒன்றாகவே இருக்கும்.[5]

பாக்டீரியா[தொகு]

பாக்டீரியாவினால் ஏற்படும் தொண்டைக்கட்டானது கீழ்த்தொண்டை அழற்சி, மூச்சுக்குழல் அழற்சி, கீழ்த்தொண்டை-மூச்சுக்குழல்-மூச்சுக் கிளைக்குழாய் அழற்சி மற்றும் கீழ்த்தொண்டை-மூச்சுக்குழல்-மூச்சுக் கிளைக்குழாய்-நுரையீரல் அழற்சியெனப் பிரிக்கப்படுகிறது.[2] கீழ்த்தொண்டை அழற்சி en:Corynebacterium diphtheriae என்னும் பாக்டீரியாவினால் ஏற்படுகின்றது. ஏனையவை பொதுவாக ஆரம்பத்தில் தீநுண்மத் தொற்று ஏற்பட்டு, பின்னர் இரண்டாம் தொற்றாகப் பாக்டீரியாத் தொற்று ஏற்படும்போது உருவாகும் நிலைகளாகும். இவற்றில் மிகப்பொதுவானவை en:Staphylococcus aureus, en:Streptococcus pneumoniae, en:Hemophilus influenzae, en:Moraxella catarrhalis ஆகியனவாகும்.[2]

உடற்கூறுநோயியல்[தொகு]

தொண்டைக்கட்டினை உண்டாக்கும் தீநுண்மம் வெள்ளை அணுக்களின் (குறிப்பாக en:histiocytes, நிணநீர்க் குழியம், en:plasma cells, மற்றும் நடுவமைநாடி) ஊடுருவல் காரணமாகக் குரல்வளை, மூச்சுக்குழாய், மற்றும் அகன்ற மூச்சுக் கிளைக்குழாய்கள் (Bronchi)[4] ஆகியவற்றின் வீக்கத்திற்கு காரணமாக உள்ளது.[2] வீக்கமானது சுவாசப்பாதையில் தடைப்படுத்தலை ஏற்படுத்தி இழைப்பு எனச்சொல்லப்படுகின்ற சுவாசித்தல் பணிக்கு அதிக பளுவையும், தனித் தன்மையான கொந்தளிப்பையும், இரைச்சலுடன் கூடிய வளிம ஓட்டத்தையும் ஏற்படுத்துகின்றது[4]

நோய் கண்டறிதல்[தொகு]

வெஸ்லி மதிப்பெண் (Westly score): தொண்டைக்கட்டுக்கான தீவிரத்தன்மையை வகை பிரித்தல்[5][6]
இயல்பு இந்த இயல்பிற்கு வழங்கப்படும் மதிப்பீட்டுப் புள்ளிகளின் எண்ணிக்கை
0 1 2 3 4 5
மார்புச் சுவர்
பின்வாங்குதல்
எதுவுமில்லை குறைவானது மிதமானது கடுமையானது
மிகைமூச்சொலி எதுவுமில்லை உதறல்
சேர்ந்து
ஓய்வாக இருக்கையில்
நீலம் பாரித்தல் எதுவுமில்லை உதறல்
சேர்ந்து
ஓய்வாக இருக்கையில்
சுய உணர்வின்
அளவு
இயல்பானது இயல்புநிலை மாறியபடி
காற்று நுழைதல் இயல்பானது குறைந்தது குறிப்பிட்டு சொல்லும்படி குறைந்தது

தொண்டைக்கட்டானது மருத்துவரீதியான நோய்கண்டறிதலாகும்.[4] இதன் முதல் படியானது மேற்புற சுவாசக்காற்றுப்பாதையின் இதர தடைகளை ஒதுக்கிவிடுதல் ஆகும். குறிப்பாகக் குரல்வளை மூடியழற்சி (epiglottitis), சுவாச வழியில் வெளிப் பொருட்களால் ஏற்படும் அடைப்பு, en:subglottic stenosis, en:angioedema, en:retropharyngeal abscess, மற்றும் பாக்டீரியாவால் ஏற்படும் மூச்சுக்குழாய் அழற்சி போன்ற மிகக் கடுமையான காரணங்கள் இல்லையெனத் தீர்மானித்த பின்னரே, இது தொண்டைக்கட்டா என்பது பற்றி ஆராயப்படும்.[2][4]

வழமையாகக் கழுத்தின் முன்புறத்தில் எக்சு-கதிர் சோதனை செய்யப்படுவதில்லை[4]. அப்படிச் செய்யும்போது, தொண்டைக்கட்டிற்குச் சிறப்பியல்பான, en:steeple sign என அழைக்கப்படும் மூச்சுக்குழாய் ஒடுக்கத்தைக் காட்டும். மூச்சுக்குழாய் ஒடுக்கமானது கூம்பு வடிவத்தைக் கொண்டிருப்பதனாலேயே இவ்வகையில் அடையாளப்படுத்தப்படுகின்றது. இந்த அறிகுறியானது நோய்கண்டறிதலுக்கான ஒரு காரணியாகக் கூறப்பட்டாலும், தொண்டைக்கட்டுள்ளோரில் பாதிப்பேருக்கு இந்த அறிகுறி இருப்பதில்லை.[3]

குருதிப் பரிசோதனைகள் மற்றும் தீநுண்ம வளர்ப்பு போன்ற பிற சோதனைகள், தேவையற்ற உதறலை ஏற்படுத்தி ஏற்கெனவே சிரமப்படும் சுவாசக்காற்றுப்பாதையை மோசமடையச் செய்வதால், இவற்றை மேற்கொள்ளுமாறு ஆலோசனை கூறப்படுவதில்லை[4]. மூக்கு, மேல் தொண்டையிலிருந்து உறிஞ்சல் மூலம் பெறப்படும் தீநுண்ம வளர்ப்புக்கள் சரியான காரணியை அறிய உதவுமாயினும், பொதுவாக இவை ஆராய்ச்சிப் பணிகளின்போது மட்டுமே மேற்கொள்ளப்படுகின்றன[1]. வழமையான சிகிச்சையளித்தும், நோய்நிலையில் முன்னேற்றம் பெறப்படவில்லையானால், பாக்டீரியா தொற்று இருக்கின்றதா என்பது அறியப்பட வேண்டும்; இந்த நிலையில், மேலதிக சோதனைகளுக்கு ஆலோசனை அளிக்கப்படலாம்[2].

தீவிரத்தன்மை[தொகு]

தொண்டைக்கட்டின் தீவிரத்தன்மையை வகைப்படுத்துவதற்காகப் பொதுவாகப் பயன்படுத்தப்படும் கட்டமைப்பு திட்டம் வெஸ்ட்லி மதிப்பெண் (Westley score) ஆகும். மருத்துவ பழக்கங்களைக் காட்டிலும் ஆராய்ச்சி நோக்கங்களுக்காகவே இது முதன்மையாகப் பயன்படுத்தப்படுகிறது.[2] இது ஐந்து காரணிகளுக்காண புள்ளிகளின் கூட்டுத்தொகையாகும், அக்காரணிகள்: சுயநினைவின் மட்டம், சயனோசிஸ், செருமல், காற்று நுழைதல், மற்றும் திரும்பி வருதல்.[2] வலது பக்கம் இருக்கும் அட்டவணையில் ஒவ்வொரு காரணிக்கும் கொடுக்கப்படும் புள்ளிகள் பட்டியலிடப்பட்டுள்ளன, இறுதி மதிப்பெண் 0 யத்திலிருந்து 17 வரை இருக்கிறது.[6]

  • மொத்த மதிப்பெண்ணாகிய ≤ 2 ”மிதமான” தொண்டைக்கட்டினைக் குறிக்கிறது. குரைப்பது போன்றதும் கரகரப்புத்தன்மையுமான குணாதிசயம் இருக்கக்கூடும், என்றாலும் ஓய்வுநிலையில் செருமல் இருப்பதில்லை[5].
  • மொத்த மதிப்பெண்ணாகிய 3 – 5 “ஓரளவுக்கான” தொண்டைக்கட்டில் சேரும். இந்நிலையில் செருமல் சுலபமாகக் கேட்கும். ஆனால் மற்ற அறிகுறிகள் சிலவே காணப்படும்[5].
  • மொத்த மதிப்பெண்ணாகிய 6 – 11 “ தீவிரமான “ தொண்டைக்கட்டாகும். வெளிப்படையான செருமலுடன், குறிப்பிடத் தக்க நெஞ்சுச்சுவர் உள்ளிழுப்பினால் அடையாளம் காட்டப்படும்.[5].
  • மொத்த மதிப்பெண்ணாகிய ≥ 12 மூச்சுத் தொகுதி செயல்பாடின்மையைக் குறிக்கும். இந்த நிலையில் குரைக்கும் இருமல் மற்றும் செருமல் பெரும்பாலும் இருப்பதில்லை[5].

அவசரச் சிகிச்சைப் பிரிவுக்குக் கொண்டுவரப்படும் 85% குழந்தைகளுக்கு, பொதுவாக இலேசான நோயெ இருக்கும். தீவிரமான தொண்டைக்கட்டு அரிதாகவே இருக்கும். (<1%).[5]

முன் தடுப்பு[தொகு]

தொண்டைக்கட்டின் பல நிகழ்வுகள் இன்ஃபுளுவென்சா மற்றும் en:diphtheria க்காகச் செய்யப்படும் நோய்த் தடுப்பாற்றலைத் தூண்டும் முறைகளால் தடுக்கப்படுகின்றது. ஒரு காலத்தில், தொண்டைக்கட்டு diphtheria என்றே குறிக்கப்பட்டது. ஆனாலும் தற்போது Diptheria நோயானது வளர்ந்த நாடுகளில், நோய்த் தடுப்பாற்றலை உடலில் உருவாக்கும் தடுப்பு மருந்து மூலம் முற்றாக இல்லாமல் செய்யப்பட்டுள்ளது[2].

சிகிச்சை[தொகு]

தொண்டைக்கட்டு கொண்ட குழந்தைகள் கூடிய மட்டில் அமைதியாக இருக்கச் செய்யப்படுகிறார்கள்[4]. பொதுவாக ஸ்டெராய்டுகள் கொடுக்கப்படுகிறது. கடுமையான நிகழ்வுகளில் எபிநெப்ரின் பயன்படுத்தப்படுகின்றது[4]. 92% க்கு குறைவாக நீரில் உயிர்வளி நிரம்பல்கள் உள்ள குழந்தைகள் ஆக்சிசனைப் பெற வேண்டும்,[2]. தீவிரமான தொண்டைக்கரகரப்பு கொண்டவர்கள் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு கண்காணிக்கப்படுதல் வேண்டும்.[3] ஆக்சிசன் தேவைப்பட்டால், உடன் – ஊதுதலைச் செய்வது (ஆக்சிசன் ஆதாரம் ஒன்றை குழந்தையின் முகத்தின் அருகில் பிடித்தல்) பரிந்துரைக்கப்படுகிறது; இது ஆக்சிசன் மூடியை (Oxygen mask) பயன்படுத்துவதைக் காட்டிலும் குறைவான இரைப்பினை ஏற்படுத்துகிறது.[2] சிகிச்சையளிக்கப்படுபவர்களில் 0.2% க்கும் குறைவானவர்களுக்கே en:endotracheal intubation தேவைப்படுகிறது.[6]

ஸ்டெராய்டுகள்[தொகு]

en:Corticosteroidsகளான en:dexamethasone மற்றும் en:budesonide போன்றவற்றால் பல்வேறு தீவிரத்தன்மை கொண்ட குழந்தைகளின் நிலை மேம்படுகிறது[7]. மருந்து குடுத்தபின் சற்றேறக்குறைய 6 மணி நேரத்திற்குப் பின்னர் குறிப்பிடத் தக்க நிவாரணம் கிடைக்கிறது[7]. வாய் வழியாகவோ, ஊசி மூலமாகவோ, அல்லது உள்சுவாசிப்பு மூலமாகக் கொடுக்கப்படுவதில் வாய்வழி முறையே விளையப்படுகிறது [4] ஒரு சொட்டு மருந்தளவே போதுமானது, இவ்வளவே பாதுகாப்பானதாகவும் உள்ளது.[4] en:Dexamethasone 0.15, 0.3 and 0.6 மிகி/கிகி அளவுள்ள சொட்டு மருந்தும் இந்நோய்க்கு உகந்தது.[8]

எபிநெப்ரின் (Epinephrine)[தொகு]

ஓரளவு முதல் கடுமையானது வரையிலான தொண்டைக்கட்டு உறிஞ்சக்கூடிய எபிநெப்ரின் கொண்டு தற்காலிகமாக மேம்படுத்தப்படலாம்.[4] எபிநெப்ரின் 10 -30 நிமிடங்களுக்குள் குறிப்பிடத் தக்க அளவு தொண்டைக்கட்டில் குறைப்பினை ஏற்படுத்தினாலும், இதன் பலன்கள் 2 மணி நேரத்திற்கு மட்டுமே நீடிக்கும்.[1][4] நிலைமையானது 2–4  மணி நேரத்திற்கு மேம்பட்ட நிலையிலிருந்து, பிற சிக்கல்கள் எழாமல் இருந்தால், குழந்தை மருத்துவமனையிலிருந்து விடுவிக்கப்படுவார்.[1][4]

மற்றவை[தொகு]

தொண்டைக்கட்டுக்கான இதர சிகிச்சைகளை ஆய்ந்ததில் அவை பயன்பாட்டுக்கு ஏற்றது என்பதற்கான உரிய நிருபணம் கிடைக்கவில்லை. நீராவி பிடித்தல் அல்லது ஈரபதமூட்டி கொண்டு பாரம்பரியமான சிகிச்சை செய்தாலும் மருத்துவ ஆய்வுகள் இம்முறை நோயைக் குணப்படுத்துபவை என்று தெரிவிக்கவில்லை.[2][4] மற்றும் தற்போது இவை அரிதாகவே பயன்படுத்தப்படுகின்றன.[9] en:dextromethorphan மற்றும்/அல்லது en:guiafenesin போன்றவற்றைக் கொண்டிருக்கும் இருமல் மருந்துகளைத் தொண்டைக்கட்டிற்கு பயன்படுத்துவதும் தவிர்க்க அறிவுறுத்தப்படுகிறது.[1] மூச்சுவிடும்போது, மூச்சுவிடுதலுக்கான சுமையைக் குறைப்பதற்காக, கடந்த காலத்தில், ஈலியம் ஆக்சிசன் ஆகியவற்றின் கலவையான ஈலியோக்சு பயன்படுத்தப்பட்டு வந்தாலும், இதன் தாக்கம்குறித்து சிறிய ஆதாரமே உள்ளது.[10] தொண்டைக்கட்டானது பொதுவாகத் தீநுண்மத்தினால் வரும் நோயாக இருப்பதால், பாக்டீரியா தொற்று இருப்பதாகச் சந்தேகித்தால் தவிர, நுண்ணுயிர் எதிர்ப்பி பயன்படுத்தப்படுவதில்லை[1] இரண்டாம் நிலை பாக்டீரியா தொற்று எனும் பட்சத்தில், en:vancomycin மற்றும் en:cefotaxime ஆகிய நுண்ணுயிர் எதிர்ப்பிகள் பரிந்துரைக்கப்படுகின்றன.[2] இன்ஃபுளுவென்சா  A அல்லது B யுடன் தொடர்புடைய கடுமையான நிகழ்வுகளில்antiviral en:neuraminidase inhibitors புகட்டப்படலாம்.[2]

நோய் குணமடைதல் முன்கணிப்பு[தொகு]

தீநுண்மத்தினால் வரும் தொண்டைக்கட்டானது குறித்த காலத்தில் தானாகவே சரியாகும் நோயாகும். கிட்டத்தட்ட 50% மானவை ஒரு நாளிலும், பெரும்பாலானவை (80%) இரண்டு நாட்களுக்குள் சரியாகிவிடும். இந்நோயால் மூச்சுத் தொகுதி செயலிழப்பு மற்றும்/அல்லது மாரடைப்பு போன்றவற்றால் மரணம் நிகழ்வது மிகவும் அரிதாகவே நடக்கும்[1]. நோய் சரியாவதற்கான அறிகுறிகள் இரண்டு நாட்களுக்குள் தெரிய ஆரம்பித்தாலும் இவ்வறிகுறி ஏழு நாட்கள் வரை நீடிக்கலாம்[5]. பாக்டீரியாவினால் ஏற்படும் மூச்சுக்குழாய் அழற்சி, நுரையீரல் அழற்சி, நுரையீரல் திரவக் கோர்வை போன்றன இந்நோயின் காரணமாக ஏற்படக்கூடிய வழமையற்ற சிக்கல்களாகும்[5].

நோய் பரவியல்[தொகு]

தொண்டைக்கட்டு 6 மாதங்கள் மற்றும் 5 -6 வயதுக்கு இடையில் உள்ள 15% குழந்தைகளைப் பாதிக்கிறது[2][4]. மருத்துவமனையில் சேர்க்கப்படும் குழந்தைகளில் 5% இதனால் பாதிப்படைந்தவர்கள்[5]. அரிதான நிகழ்வுகளில், 3 மாதக் குழந்தை முதல் 15 வயதான பாலகருக்கும் கூட உண்டாகலாம்[5]. பெண் குழந்தைகளைக் காட்டிலும் ஆண்குழந்தைகளில் 50% அதிகாமானோர் அடிக்கடி பாதிக்கப்படுகின்றனர். இலையுதிர் காலத்தில் இதன் தாக்கம் அதிகம் இருக்கிறது[2].

வரலாறு[தொகு]

”தொண்டைக் கட்டு” எனும் வார்த்தைக்கான ஆங்கிலச் சொல்லான Croup என்பது en:Early Modern English லிருந்து வந்த, “கம்மிய குரலில் அழுவது” எனப் பொருள்படும் வினைச்சொல்லாகும்; இந்தப்பெயரானது முதன்முதலாக இசுக்கொட்லாந்தில் இருந்த நோய்க்குப் பயன்படுத்தப்பட்டு 18 ஆம் நூற்றாண்டில் புழக்கத்திற்கு வந்தது.[11] ஓமரின் பண்டைய கிரேக்க காலம் தொட்டு டிப்தீரியா ரீதியான தொண்டைக்கட்டு தெரியவந்திருக்கிறது. 1826 வரை இந்தத் தீநுண்மத்தால் வரும் தொண்டைக்கட்டானது, en:diphtheria காரணமான தொண்டைகட்டு என்றே நம்பப்பட்டு வந்தது. இவற்றை Bretonneau என்பவரே வேறுபடுத்திக் காட்டினார்[12] தீநுண்மத்தினால் உருவாகும் தொண்டைக்கட்டு பின்னர் பிரெஞ்சுக்கார்களால் "faux-தொண்டைக்கட்டு" என அழைக்கப்பட்டது. பின்னர் டிப்தீரியாவானது பாக்டீரியாவினால் உண்டாக்கப்படுவது எனக் கண்டுபிடிக்கப்பட்டது[9]. திறன் மிக்க நோய்தடுப்பாற்றல் உருவாக்கப்பட்டதன் காரணமாக டிப்தீரியா மூலம் உண்டாகும் தொண்டைக்கட்டு கிட்டத்தட்ட ஒழிக்கப்பட்டது[12]

மேற்கோள்கள்[தொகு]

  1. 1.00 1.01 1.02 1.03 1.04 1.05 1.06 1.07 1.08 1.09 Rajapaksa S, Starr M (May 2010). "Croup – assessment and management". Aust Fam Physician 39 (5): 280–2. பப்மெட்:20485713. 
  2. 2.00 2.01 2.02 2.03 2.04 2.05 2.06 2.07 2.08 2.09 2.10 2.11 2.12 2.13 2.14 2.15 2.16 2.17 2.18 Cherry JD (2008). "Clinical practice. Croup". N. Engl. J. Med. 358 (4): 384–91. doi:10.1056/NEJMcp072022. பப்மெட்:18216359. 
  3. 3.0 3.1 3.2 3.3 "Diagnosis and Management of Croup" (PDF). BC Children’s Hospital Division of Pediatric Emergency Medicine Clinical Practice Guidelines.
  4. 4.00 4.01 4.02 4.03 4.04 4.05 4.06 4.07 4.08 4.09 4.10 4.11 4.12 4.13 4.14 4.15 Everard ML (February 2009). "Acute bronchiolitis and croup". Pediatr. Clin. North Am. 56 (1): 119–33, x–xi. doi:10.1016/j.pcl.2008.10.007. பப்மெட்:19135584. https://archive.org/details/sim_pediatric-clinics-of-north-america_2009-02_56_1/page/119. 
  5. 5.00 5.01 5.02 5.03 5.04 5.05 5.06 5.07 5.08 5.09 5.10 5.11 Johnson D (2009). "Croup". Clin Evid (Online) 2009. பப்மெட்:19445760. 
  6. 6.0 6.1 6.2 Klassen TP (December 1999). "Croup. A current perspective". Pediatr. Clin. North Am. 46 (6): 1167–78. doi:10.1016/S0031-3955(05)70180-2. பப்மெட்:10629679. https://archive.org/details/sim_pediatric-clinics-of-north-america_1999-12_46_6/page/1167.  பிழை காட்டு: Invalid <ref> tag; name "Peds99" defined multiple times with different content
  7. 7.0 7.1 Russell KF, Liang Y, O'Gorman K, Johnson DW, Klassen TP (2011). "Glucocorticoids for croup". Cochrane Database Syst Rev 1 (1): CD001955. doi:10.1002/14651858.CD001955.pub3. பப்மெட்:21249651. 
  8. Port C (April 2009). "Towards evidence based emergency medicine: best BETs from the Manchester Royal Infirmary. BET 4. Dose of dexamethasone in croup". Emerg Med J 26 (4): 291–2. doi:10.1136/emj.2009.072090. பப்மெட்:19307398. 
  9. 9.0 9.1 Marchessault V (November 2001). "Historical review of croup". Can J Infect Dis 12 (6): 337–9. பப்மெட்:18159359. 
  10. Vorwerk C, Coats T (2010). "Heliox for croup in children". Cochrane Database Syst Rev 2 (2): CD006822. doi:10.1002/14651858.CD006822.pub2. பப்மெட்:20166089. 
  11. Online Etymological Dictionary, croup. Accessed 2010-09-13.
  12. 12.0 12.1 Feigin, Ralph D. (2004). Textbook of pediatric infectious diseases. Philadelphia: Saunders. பக். 252. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:0-7216-9329-6. https://archive.org/details/textbookofpediat0001unse_c7n0. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=தொண்டைக்_கட்டு&oldid=3761375" இலிருந்து மீள்விக்கப்பட்டது