நீரில் உயிர்வளி நிரம்பல்

உலகிலுள்ள கடலில் கரைந்துள்ள உயிர்வளியின் வருடாந்திர சராசரி[1]
கரைந்துள்ள உயிர்வளி என்பது நீரில் கரைந்துள்ள உயிர்வளியின் சார்பு அளவாகும். இதை உயிர்வளி நிரம்பல் (Oxygen Saturation) என்றும் அழைக்கப்படுவதுண்டு, அதாவது ஒரு நீர்மத்தில் கரைந்துள்ள உயிர்வளி(Dissolved Oxygen) அந்நீர்மத்தின் உயிர்வளி கரைவதற்கான தெவிட்டி நிலை அடைந்துவிட்டது என்பதாகும். கரைந்துள்ள உயிர்வளியின் அளவு ஒரு லிட்டரில் எத்தணை மில்லிகிராம் எனக் கணக்கிடப்படுகிறது. இதை ஆங்கிலத்தில் mg/L அல்லது "மிகி/லி" என்னும் அளவீட்டு குறியால் குறிக்கப்படுகிறது. மாசடையா நன்னீரில் 20°செல்சியசில் கரைந்துள்ள உயிர்வளி 9.1 மி.கி/லி ஆகும்.