உள்ளடக்கத்துக்குச் செல்

தேவரியம்பாக்கம் ஊராட்சி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(தேவிரியம்பாக்கம் ஊராட்சி இலிருந்து வழிமாற்றப்பட்டது)
தேவரியம்பாக்கம்
—  ஊராட்சி  —
அமைவிடம்
நாடு  இந்தியா
மாநிலம் தமிழ்நாடு
மாவட்டம் காஞ்சிபுரம்
ஆளுநர் ஆர். என். ரவி[1]
முதலமைச்சர் மு. க. ஸ்டாலின்[2]
மாவட்ட ஆட்சியர் கலைச்செல்வி மோகன், இ. ஆ. ப [3]
ஊராட்சித் தலைவர் M. D. அஜய்குமார் 
மக்களவைத் தொகுதி காஞ்சிபுரம்
மக்களவை உறுப்பினர்

ஜி. செல்வம்

சட்டமன்றத் தொகுதி உத்திரமேரூர்
சட்டமன்ற உறுப்பினர்

கே. சுந்தர் (திமுக)

மக்கள் தொகை 1,231
நேர வலயம் இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30)
குறியீடுகள்

தேவரியம்பாக்கம் ஊராட்சி (Devariyambakkam Gram Panchayat), தமிழ்நாட்டின் காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள வாலாஜாபாத் வட்டாரத்தில் அமைந்துள்ளது.[4][5] இந்த ஊராட்சி, உத்திரமேரூர் சட்டமன்றத் தொகுதிக்கும் காஞ்சிபுரம் மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டதாகும். இந்த ஊராட்சி, மொத்தம் 7 ஊராட்சி மன்றத் தொகுதிகளைக் கொண்டுள்ளது. இவற்றில் இருந்து ஓர் ஊராட்சி மன்றத் தலைவர் மற்றும் 6 ஊராட்சி மன்ற உறுப்பினர்களைத் தேர்ந்தெடுக்கின்றனர். [6] 2011ஆம் ஆண்டு இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, மொத்த மக்கள் தொகை 1231 ஆகும். இவர்களில் பெண்கள் 637 பேரும் ஆண்கள் 594 பேரும் உள்ளனர்.

அடிப்படை வசதிகள்

[தொகு]

தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையின் 2015ஆம் ஆண்டுத் தரவின்படி கீழ்க்கண்ட தகவல் தொகுக்கப்பட்டுள்ளது.[6]

அடிப்படை வசதிகள் எண்ணிக்கை
குடிநீர் இணைப்புகள் 92
சிறு மின்விசைக் குழாய்கள் 4
கைக்குழாய்கள்
மேல் நிலை நீர்த்தேக்கத் தொட்டிகள்
தரைமட்ட நீர்தேக்கத் தொட்டிகள்
உள்ளாட்சிக் கட்டடங்கள் 1
உள்ளாட்சிப் பள்ளிக் கட்டடங்கள் 5
ஊரணிகள் அல்லது குளங்கள்
விளையாட்டு மையங்கள்
சந்தைகள்
ஊராட்சி ஒன்றியச் சாலைகள் 76
ஊராட்சிச் சாலைகள் 3
பேருந்து நிலையங்கள்
சுடுகாடுகள் அல்லது இடுகாடுகள் 4

சிற்றூர்கள்

[தொகு]

இந்த ஊராட்சியில் அமைந்துள்ள சிற்றூர்களின் பட்டியல்[7]:

  1. தோண்டாங்குளம் காலனி
  2. தோண்டாங்குளம் கிராமம்
  3. தேவரியம்பாக்கம் கிராமம்
  4. தேவரியம்பாக்கம் காலனி

தேவரியம்பாக்கம் வழிபாட்டுத் தலங்கள்

[தொகு]

ஸ்ரீ சந்தி அம்மன் ஆலயம் தேவரியம்பாக்கம்

[தொகு]

கிராமத்திற்கு வடக்கே கம்பீரமாய் அமர்ந்து அருள்பாலிக்கும் காக்கும் கடவுள் தேவரியம்பக்கம் கிராம தேவதை ஸ்ரீ சந்தியம்மன். கிராமத்தில் வாழ்ந்த முன்னோர்கள் ஆன்றோர்கள் வழியாக இவ்வாலயத்தைப் பற்றிய வழிவழி செவிவழி செய்தியாக அறியப்படும் தகவல்கள்

மகா சக்தியின் உருவமாக ஸ்ரீ சந்தி அம்மன் அருள்பாலிக்கிறாள். அதாவது கிரியா சக்தி இச்சா சக்தி ஞான சக்தி இவை அனைத்தும் இணைந்து மகா சக்தியாக விளங்குபவள்.

இந்த மஹா சக்தியை ஈராறு  கிராமங்களில் இருந்து அதாவது  தேவரியம்பாக்கம் மட்டுமல்லாமல் சுற்றியுள்ள  12 கிராமங்களில் இருந்து பக்தர்கள் வழி பாடு செய்து வருகின்றனர். 

அதாவது (1) தோண்டாங்குளம், 2) கொசப்பட்டு,  3) தொள்ளாழி, 4) மதுரப்பாக்கம், 5) ஆம்பாக்கம்  6) வேண்பாக்கம், 7) வரணவாசி 8) அளவூர் 9) தாழையம்பட்டு 10) லிங்காபுரம்

11) மதுராநல்லூர் 12) அகரம் என எட்டு திசையும் திசைகளிலும் தன் பக்தர்களை ஆட்கொண்டு இருக்கிறாள்.

தல வரலாறு

[தொகு]

ஆதிகாலத்தில் நீர் நிரம்ப தழும்ப ஓடிக்கொண்டே இருக்கும் நிலை அருகில் சந்தியம்மனுக்கு பத்து நாட்கள் திரு விழா எடுப்பது வழக்கம்.  திருவிழாவில் கிராமத்தில்  குடியிருக்கும் ஆதி குடும்ப வேர்களைக் கொண்ட பரம்பரைக்கு ஒருவர் என பொலி  / பலி ஓடுவார்கள். சீரும் சிறப்புமாக தொடர்ந்து இவ்விழா இன்றும் நடைபெற்றுக் கொண்டு வருகிறது. இருப்பினும் சில நூறு வருடங்களுக்கு முன்பு  மிக விமரிசையாக திருவிழா செய்யப்பட்டு தேர் பவனியில் அம்மன் வீதிவீதியாக அருள்பாலித்து வந்தபோது பக்தர்கள் செய்த பிழை காரணமாக அம்மன் தாமாகவே அதிவேகமாக சென்றது அம்மடு  என அழைக்கப்படும் மடுவில் தேரோடு நீரில் மூழ்கி மறைந்ததாக சொல்லப்பட்டு வருகிறது.  இதனால்  கிராமத்தார்கள் மிகவும் அல்லல்பட்டு கிராம மக்கள் அறிந்தோ அறியாமலோ தெரிந்தோ தெரியாமலோ  செய்து விட்டதை மன்னித்து அருளுமாறு  அம்பாள் சந்தியம்மனை மனமுருக வேண்டியதால் அம்பாள் மீண்டும் தோன்றி சுபிட்சத்தை பக்தர்களுக்கு கிராமத்திற்கு வழங்கினாள் என்பது வரலாறு. இக்கோயிலுக்கு ஒரு கால பூஜை நடைபெற்று வருகிறது ஈராறு ஊர்கள் தவிர மற்ற கிராமங்களிலிருந்தும் மாவட்டங்களில் இருந்தும் இப்போது பக்தர்கள் வழிபட வந்து செல்கின்றனர்.

மண்ணில் வசிப்போருக்கு விண்ணில் பயணி போருக்கும் தன் சக்தியால் பக்தர்களுக்கு அருள்பாலிக்கும் ஸ்ரீசந்தியம்மனை நாடிவந்து வழிபடுவோர் அனைவருக்கும் வேண்டியதை அருள் புரிவதால் பக்தர்கள் மிகவும் அதிகமாக வரத் தொடங்கியுள்ளனர்


சான்றுகள்

[தொகு]
  1. "தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. 2015. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
  2. "தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
  3. "மாவட்ட ஆட்சியர் தொடர்பு விவரம்". tn.gov.in. தமிழ்நாடு அரசு. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
  4. "தமிழக ஊராட்சிகளின் பட்டியல்" (PDF). tnrd.gov.in. தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
  5. "வாலாஜாபாத் வட்டார வரைபடம்". tnmaps.tn.nic.in. தேசிய தகவலியல் மையம், தமிழ்நாடு. Archived from the original on 2016-03-05. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
  6. 6.0 6.1 "தமிழக ஊராட்சிகளின் புள்ளிவிவரம்" (PDF). tnrd.gov.in. தமிழ் இணையக் கல்விக்கழகம். பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
  7. "தமிழக சிற்றூர்களின் பட்டியல்" (PDF). tnrd.gov.in. தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.