திருவள்ளுவர் வழிபாடு
இந்தக் கட்டுரை கலைக்களஞ்சியத்தில் எழுதும் அளவு குறிப்பிடத்தக்கதா?
இத்தலைப்பைப் பற்றிய நம்பத்தக்க வேறு கூடுதல் மேற்கோள்களை இணைத்து இதனை "குறிப்பிடத்தக்கதாக" நிறுவிட உதவுங்கள். இவ்வாறு குறிப்பிடத்தக்க தன்மை நிறுவப்படாவிடின் இந்தக் கட்டுரை வேறு கட்டுரையுடன் இணைக்கப்படவோ, வழிமாற்றப்படவோ, நீக்கப்படவோ கூடும். |
“தெய்வப்புலவா்” என்று திருவள்ளுவரை நாம் குறிப்பிடுகிறோம். ஆனால், அவரை தெய்வமாக வணங்குபவர்கள் அவர் வாழ்ந்த தமிழகத்தில் மிகக் குறைவு. பக்கத்து மாநிலமான கேரளாவிலோ திருவள்ளுவரை தெய்வமாக வணங்குவதற்கு என்றே ஒரு மதத்தினர் உள்ளர்.[1] அவர்களை சனாதன மதத்தினர் என்று அழைக்கின்றனர். இந்த மதத்திற்கு சமாதான மதம் என்று பெயரும் உண்டு. கேரள மாநிலத்தில் 16 இடங்களில் திருவள்ளுவருக்கு என்று தனிக் கோவில்கள் அமைந்துள்ளன. இந்தக் கோவில்களிள் பிரசித்து பெற்றது எர்ணாகுளம் மாவட்டத்தில் காஞ்சூா் தட்டம்படி என்ற ஊரில் உள்ள வள்ளுவா் கோவில்.
முதன்முதலில் வள்ளுவா் கோவில்
[தொகு]திருவள்ளுவருக்கு என்று இம்மாநிலத்தில் முதன்முதலில் கோவில் அமைந்த இடம் இடுக்கி மாவட்டத்தில் உள்ள சேனபதி என்ற ஊா், அங்கு 1979-ம் ஆண்டு மாா்ச் 1ம் தேதி கோவிலை அமைத்தவா் சிவானந்தா் என்பவா் கேரளாவில் உள்ள திருவள்ளுவா் கோவிலுக்கு ஆண்டுதோறும் திருவிழாக்கள் சிறப்பாக கொண்டாடப்படுகின்றன. மலையாள மாதம் கும்பத்தில் 17,18 ஆகிய தேதிகளில் இந்த விழாக்கள் நடைபெறுகின்றன.
திருவள்ளுவர் முன்பு வித்தியாச திருமணங்கள்
[தொகு]திருவள்ளுவரை தெய்வமாக வணங்கும் சனாதன மதத்தினர், தங்களது திருமணத்தை வள்ளுவரது கோவிலிலேயே நடத்துகின்றனா். அப்போது, அவர்கள் தாலி கட்டுவதும் இல்லை, மோதிரம் மாற்றிக் கொள்வதும் இல்லை. மாறாக மணமக்கள் இருவரது கைகளை ஒன்றிணைத்து வைத்தே திருமணத்தை மிகவும் எளிய முறையில் முடித்து விடுகிறாா்கள்.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ திருவள்ளுவர் எங்கள் ஞானகுரு. தினகரன் நாளிதழ். 7 ஏப்ரல் 2014.
{{cite book}}
: Check date values in:|year=
(help)