திரித்தாலா
திரித்தாலா | |
---|---|
ஊர் | |
ஆள்கூறுகள்: 10°48′0″N 76°7′0″E / 10.80000°N 76.11667°E | |
நாடு | இந்தியா |
மாநிலம் | கேரளம் |
மாவட்டம் | பாலக்காடு |
மொழிகள் | |
• அதிகாரப்பூர்வமாக | மலையாளம், ஆங்கிலம் |
நேர வலயம் | ஒசநே+5:30 (இந்திய சீர் நேரம்) |
அஞ்சல் குறியீட்டு எண் | 679534 |
தொலைபேசி குறியீடு | 91466 |
வாகனப் பதிவு | KL-9 & KL-52 |
அருகில் உள்ள நகரம் | பட்டம்பி |
மக்களவை தொகுதி | பொன்னனி |
திரித்தாலா (Thrithala) என்பது தென் இந்திய மாநிலமான, கேரளத்தின், பாலக்காடு மாவட்டத்தின், பட்டம்பி வட்டத்தில் உள்ள ஒரு கிராமம் ஆகும். இந்த கிராமம் பாரதப்புழாவின் கரையில் அமைந்துள்ளது. இங்கு புகழ்பெற்ற சிவன் கோயில் உள்ளது.
வரலாறு
[தொகு]'பறையிபெற்ற பந்திருகுலம்' நாட்டார் கதை திரிதாலாவை மையமாகக் கொண்டது. இந்த கதையின்படி, வராருச்சி என்ற ஒரு பிராமணர், ஒரு தாழ்த்தப்பட்ட பெண்ணை தான் யரென்பதையும் கடந்து மயங்கி திருமணம் செய்து கொண்டார் (? ). திருமணத்திற்குப் பிறகு, அவர்கள் நீண்ட யாத்திரை ஒன்றை மேற்கொண்டனர். பயணத்தின் போது, அந்தப் பெண் பல முறை கர்ப்பமுற்று, பிரசவித்தாள். ஒவ்வொரு முறை அவள் குழந்தையை பிரசவித்தபோதும், கணவன் அதை அங்கேயே விட்டுவிடும்படி கூறினார். ஒவ்வொரு குழந்தைகளும் வெவ்வேறு சாதிகளைச் சேர்ந்தவர்களிடம் (மொத்தம் 12) விடபட்டன. இதனால் அவர்கள் அந்த சாதியில் வளர்ந்து, புகழ்பெற்ற 'பந்திருகுலத்தை' உருவாக்கினர். அவர்கள் அனைவரும் தங்கள் வாழ்வில் புகழ் பெற்றனர் மேலும் பல கதைகளுக்கு காரணம் ஆயினர். இவர்களில் மூத்தவர் அக்னிஹோத்ரி, ஒரு பிராமணர், இவர் இடம் திரித்தாலாவில் மெழத்தூர். மற்றவர்கள் பக்கனார் (கூடை முடைபவர்), பெருந்தச்சன் (தலைமைச் சிற்பி), நாரந்த பரந்தன் (ஒரு விசித்திரமான தெய்வீக நபர்), வயில்லாகுண்ணியப்பன் (வாய் இல்லாத குழந்தை, தாய் தங்களுடன் வைத்திருக்க விரும்பினார்) மற்றும் பலர். இவர்களுடைய கதைகள் கொட்டாரத்தில் சங்குண்ணியால் எழுதபட்ட பிரபலமான புத்தகமான 'ஐதீகமாலா'வில் குறிப்பிடப்பட்டுள்ளன.
இந்த ஊரில் சுமார் 9 மற்றும் 10 ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்ட, சிவன் கோவில் உள்ளது. இக்கோயில் கட்டடக்கலை சோழ பாணியிலிருந்து பாண்டிய கட்டிடக்கலை பாணிக்கு மாறுவதைக் குறிப்பதாக உள்ளதாக கூறப்படுகிறது. ஒரு கதையின்படி, குழந்தை அக்னிஹோத்ரி தனது தாயுடன் ஆற்றில் குளித்துக் கொண்டிருந்தார். அப்போது அவர் ஒரு தட்டில் (மலையாளத்தில் 'தலாம்') மேடு வடிவில் மணலைக் குவித்தார். தாய் மணலை அகற்ற முயன்றபோது, அது ஒரு 'சிவலிங்கம்' வடிவில் கெட்டிபட்டிருப்பதைக் கண்டாள். இவ்வாறு தோன்றிய தெய்வம் 'தலதிலப்பன்' என்று அழைக்கப்படுகிறார். சிலை மணலால் அமைந்துள்ளதாக கூறப்படுகிறது. கோயில் கட்டப்படுவதற்கு தேவையான இட வசதிக்காக, ஆறு தனது போக்கை தானாகவே மாற்றிக் கொண்டதால் இப்பகுதியில் ஆற்றில் கூர்மையான வளைவு உருவானது என்று நம்பப்படுகிறது..
இந்த ஊரின் குறிப்பிடத்தக்கவர்கள்
[தொகு]- வி. டி. பட்டத்திரிபாத், நாடக்க் கலைஞர் மற்றும் சுதந்திர போராளி
- மஹா காவி அக்கித்தம் அச்சுதன் நம்பூதிரி
- திரிதால கேசவ போடுவல், தயம்பக மேஸ்ட்ரோ
- எம். டி. வாசுதேவன் நாயர், ஞான்பிட் விருது வென்ற மலையாள எழுத்தாளர்
- ஈ. சிறீதரன், டி.எம்.ஆர்.சி யின் முன்னாள் நிர்வாக இயக்குநர்
- அம்மு சுவாமிநாதன், சுதந்திர போராட்ட வீரர் மற்றும் ஒரு முக்கிய தலைவர்
- கேப்டன் இலட்சுமி சாகல், இந்திய விடுதலை இயக்க ஆர்வலர்
- மேஜர் ரவி, மலையாள திரைப்பட இயக்குனர்
அரசியல்
[தொகு]இந்த ஊர் பொன்னானி மக்களவைத் தொகுதிக்கு உட்பட்டது (முன்னர் ஒற்றப்பாலம் மக்களவைத் தொகுதி), தற்போதைய மக்களவை உறுப்பினர் ஈ. டி. மொகமது பஷீர் . திரித்தாலா 49 வது சட்டமன்றத் தொகுதி, தற்போதைய சட்டமன்ற உறுப்பினர் இ.தே.கா. வின் வி. டி. பல்ராம் ஆவார்.
இங்கு இந்திய தேசிய காங்கிரசு, இந்திய பொதுவுடமைக் கட்சி (மார்க்சிஸ்ட்) (சி.பி.எம்), இந்திய ஒன்றிய முஸ்லிம் லீக், இந்திய சமூக ஜனநாயகக் கட்சி (எஸ்.டி.பி.ஐ), பாரதிய ஜனதா கட்சி ஆகியவை முக்கிய அரசியல் கட்சிகளாக உள்ளன.
புறநகர் மற்றும் கிராமங்கள்
[தொகு]- முடவன்னூர், மேழத்தூர்
- நங்காட்டிரி, கல்யாணப்பாடி மற்றும் கண்ணனூர்
- உல்லானூர், வி. கே. கதவு மற்றும் கே. ஆர். நாராயண் நகர்
- அதானி, சித்தப்புரம், பட்டிதாரா, மலமக்கவு
- ஓதலூர்
முக்கியமான அடையாளங்கள்
[தொகு]- வெல்லியம்கல்லு பூங்கா
- பக்கனார் காலனி
- வைத்யமடம், மேழத்தூர்
- வேமஞ்சேரி மனை, அக்னிஹோத்ரியின் வீடு
- யஜ்னேஸ்வரம் சிவன் கோயில்
- திரித்தாலா ஜுமா மசூதி
- கண்ணனூர் பகவதி கோயில்
- வி. கே. கடவு ஜுமா மசூதி
- ராஷ்டிரபதி பவனில் பணியாற்றிய டி. கே. சுப்பிரமணியனின் பெயர் கொண்ட சாலை
- திரித்தால சிவன் கோயில்
- முடவன்னூர் சிவன் கோயில்
- உல்லனூர் ஜுமா மசூதி
- அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி, திரித்தாலா