திங்கள் (கிழமை)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(திங்கள் இலிருந்து வழிமாற்றப்பட்டது)
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்

திங்கட்கிழமை (Monday) என்பது ஏழு நாட்கள் கொண்ட ஒரு கிழமையில் (வாரத்தில்) ஒரு நாள் ஆகும். ஞாயிற்றுக்கிழமைக்கும் செவ்வாய்க்கிழமைக்கும் இடையில் இந்நாள் வரும். இந்துக் காலக்கணிப்பின்படி சந்திரனுக்கு உரிய நாளாக இது பெயரிடப்பட்டுள்ளது. கிழமை என்றால் உரிமை என்று பொருள்.

  • Monday என்னும் சொல் Moon என்னும் சந்திரனைக் குறிக்கும். Mani அல்லது Mona (சந்திரன்) என்ற கடவுளின் பெயரில் இருந்து இது பிறந்தது. ரஷ்ய மொழியில் понедельник (பனிஜெல்னிக்), அதாவது ஞாயிற்றுக்கிழமைக்கு அடுத்த நாள் எனப் பொருள்படும்.
  • சீன மொழியில் இந்நாள் xingqi yi (星期一) என அழைக்கப்படும். இதன் பொருள் வாரத்தின் முதல் நாள் என்பதாகும்.
  • 'திங்கள்' என்னும் சொல் மாதம் என்ற பொருளிலும், இலக்கியங்களில் கையாளப்படுகிறது.


கிழமை நாட்கள்
ஞாயிறு | திங்கள் | செவ்வாய் | புதன் | வியாழன் | வெள்ளி | சனி

}

"http://ta.wikipedia.org/w/index.php?title=திங்கள்_(கிழமை)&oldid=1418735" இருந்து மீள்விக்கப்பட்டது