தமிழ்ப் பெண் எழுத்தாளர்களின் பட்டியல்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

தமிழ் இலக்கிய உலகப் பெண்களை நினைத்தால் மனதில் உடனே தோன்றுபவர் ஒளவையார்தான். இதையடுத்து ஆண்டாள், காக்கைப் பாடினியார், காரைக்கால் அம்மையார் போன்று ஒரு சிலரே தெரிந்தவராக உள்ளனர். தமிழ் இலக்கியங்களில் ஆதி மந்தியார், குற மகள் இளவெயினியார், வெறிபாடிய காமக் கண்ணியார், கீரன் எயிற்றியார், ஒக்கூர் மாசாத்தியார், காவற்பெண்டு, நக்கண்ணையார், குமுழி ஞாழல் நப்பசையார், வெள்ளி வீதியார், பூதப்பாண்டியனின் உள்ளங் கவர்ந்த பெருங்கோப்பெண்டு, பாரிமகளிர் என்று தமிழ்ப் பெண்பாற் புலவர்களின் பட்டியல் நீளமானது.

நாகூரைச் சேர்ந்த சித்தி ஜூனைதா பேகம் என்ற பெண்மணிதான் முதல் தமிழ் முஸ்லிம் பெண் எழுத்தாளர்.[சான்று தேவை] இவர் எழுதிய முதல் சிறுகதை, 1929ஆம் ஆண்டு தாருல் இஸ்லாம் இதழில் வெளிவந்தது.

தமிழ்ப் பெண் எழுத்தாளர்கள் பட்டியல்[தொகு]

ச. விசயலட்சுமி தமிழ்க் கவிஞர். தமிழ் புதுக்கவிதை உலகில் தொடர்ந்து எழுதி வருபவர்.

“பெருவெளிப்பெண்” என்னும் முதல் கவிதைத் தொகுப்பை 2007 இல் வெளியிட்டுள்ளார்.

"தமிழ்க்கவிதைகளில் பெண்ணுரிமை" எனும் ஆய்வுநூல் 2002 இல் வெளிவந்துள்ளது.

"பெண்ணெழுத்து -களமும் அரசியலும்' எனும் நூல் 2011 இல் வெளிவந்துள்ளது.

இரண்டாம் கவிதைத் தொகுப்பு ”எல்லா மாலைகளிலும் எரியுமொரு குடிசை” 2011. மூன்றாம் கவிதைத் தொகுப்பு "என் வனதேவதை" 2016. நான்காம் கவிதைத் தொகுப்பு பேரன்பின் கனதி 2018


"லண்டாய்" (2014)என்னும் இவரின் மொழி பெயர்ப்பு நூல் ஆஃப்கான் பெண்களின் வாய்மொழிப் பாடல்களையும் நவீன கவிதைகளையும் உள்ளடக்கியது. பனுவல் பதிப்பகம்

சிறுகதைத் தொகுப்பு காளி - 2018 திசம்பர் பாரதிபுத்தகாலயம்

2002 இல் தமிழில் முனைவர் பட்டம் பெற்றுள்ளார். தமிழகத்தில் சென்னையில் அரசுப் பள்ளியில் முதுகலை ஆசிரியராகப் பணியாற்றுகிறார்