நளாயினி தாமரைச்செல்வன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
நளாயினி தாமரைச்செல்வன்
பிறப்புநளாயினி
ஆகஸ்ட் 5, 1968
சிறுப்பிட்டி
தேசியம்இலங்கைத் தமிழர்
அறியப்படுவதுஈழத்து எழுத்தாளர்

நளாயினி தாமரைச்செல்வன் (பி. ஆகஸ்ட் 5, 1968, சிறுப்பிட்டி]). ஈழத்து சிறுகதை எழுத்தாளர், கவிஞர். நூல் விமர்சகர்.

வாழ்க்கைக் குறிப்பு[தொகு]

யாழ்ப்பாணம் சிறுப்பிட்டியைப் பிறப்பிடமாக கொண்ட இவர், சுண்டிக்குளி மகளிர் கல்லூரியில் கல்வி கற்றார். 1990 இல் யாழ்ப்பாணம் பருத்தித்துறையைப் பிறப்பிடமாக கொண்ட தாமரைச் செல்வனை திருமணம் புரிந்தார். ஒரு மகனும் ஒரு மகளும் உள்ளார்கள். தற்சமயம் சுவிஸ் நாட்டில் வசித்து வருகின்றார்.

இவரது நூல்கள்[தொகு]

  • நங்கூரம் (கவிதை) (2005)
  • உயிர்த்தீ (கவிதை) (2005)

வெளி இணைப்புக்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=நளாயினி_தாமரைச்செல்வன்&oldid=3218040" இலிருந்து மீள்விக்கப்பட்டது