உள்ளடக்கத்துக்குச் செல்

எம். பகீரதி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

எம். பகீரதி

ஆளுமை: பகீரதி, மோசேஸ் (1975.07.03) மட்டக்களப்பு, சித்தாண்டியை பிறப்பிடமாகக் கொண்ட பகீரதி 1990 களில் இடம்பெயர்ந்து மட்டக்களப்பில் வாழ்ந்து வருகிறார். இவரது தந்தை கனகரெத்தினம், இவரது தாய் பாக்கியம். இவர் தனது ஆரம்பக் கல்வியை சித்தாண்டி இராமகிரு~;ண மிசன் தமிழ் கலவன் பாடசாலையிலும் இடைநிலை மற்றும் உயர்நிலைக் கல்வியினை மட்டக்களப்பு வின்சென்ட் மகளிர் தேசிய கல்லூரியிலும் கற்றார். கிழக்குப்பல்கலைக்கழகத்தில் சமூகவியலும் மானிடவியலும் துறையில் விசேட பட்டப்படிப்பை மேற்கொண்டு இரண்டாம் தர மேற்பிரிவில் சித்தியடைந்து, திறந்த பல்கலைக்கழகத்தில் பட்டப்பின் கல்வி பட்டயக்கல்வியை பூர்த்தி செய்து, அதன் பின்னர் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் முதுதத்துவமாணியை பூர்த்தி செய்தார். கொழும்புப் பல்கலைக்கழகத்தில் ‘உயர்கல்வி போதனை திறன் விருத்தி கற்கையை’ மேற்கொண்டு சித்தியடைந்துள்ளார்.

கிழக்குப்பல்கலைக்கழகத்தின் கலை கலாசார பீட உறுப்பினர், பீடத்தின் ஊழியர் மதிப்பீட்டு குழு உறுப்பினர், பல்கலைக்கழக ஊழியர் அபிவிருத்தி நிலையத்தின் இணைப்பாளர், பல்கலைக்கழக பாலின சமத்துவத்திற்கான கல்விப்பிரதிநிதி, பீடத்தின் கல்வித் தர உத்தரவாத செயற்குழு உறுப்பினர் என பல்கலைக்கழகத்தின் பல மட்டங்களிலும் தனது பங்களிப்பை வழங்கி வருவதோடு, சமூகவியல்துறை இணைப்பாளர், பீடத்தின் மாணவ ஆலோசகர் என்ற பதவி நிலைகளிலும் பணியாற்றியுள்ளார்.

கிழக்குப்பல்கலைக்கழகத்தின் சமூகவியல் முதுநிலை விரிவுரையாளராக பணியாற்றி வரும் இவர்  சமூக ஆய்வாளர், எழுத்தாளர், வளவாளர், ஆலோசகர் போன்ற அடையாளங்களையும் பெற்றுள்ளார்.

இந்தியா, மலேசியா போன்ற நாடுகளின் பல்கலைக்கழக மட்டத்திலான ஆய்வு மாநாடுகளில் வெளியிடப்படும் ஆய்வேடுகளில் பல ஆய்வுக் கட்டுரைகளை சமர்ப்பித்துள்ள இவர் சமூகவியலின் பன்முகப் பார்வையிலான பல நூல்களையும் வெளியிட்டுள்ளார்.

பல்வேறுபட்ட கருத்தரங்குகள், பேருரைகள் என்பவற்றுக்கான செயற்குழு உறுப்பினராகவும், பல்கலைக்கழக ஆராய்ச்சி மாநாடுகளின் நடுவராகவும் செயற்பட்டுள்ளார்.

விருதுகள்:

பல்கலைக்கழக மட்டத்திலான சர்வதேச ஆய்வரங்குகள் பலவற்றில் பல ஆய்வுக்கட்டுரைகளை சமர்ப்பித்துள்ளார். கடந்த 2016ஆம் ஆண்டு தென்கிழக்கு பல்கலைக்கழகத்தில் இடம்பெற்ற ஆறாவது சர்வதேச ஆய்வரங்கில் இவரால் சமர்ப்பிக்கப்பட்ட சமூக ஆய்வுக்கு ;சிறந்த ஆய்வு வழங்குனர் விருது’ வழங்கப்பட்டது.

சமூகவியல், மானிடவியல், கல்வியியல், ஊடகவியல், வெகுஜன தொடர்பியல் என பல்துறை அறிவும் சிந்தனை ஆற்றலும் கொண்ட எம்.பகீரதியின் ‘இலங்கையில் தொலைக்காட்சி –நிகழ்ச்சிகள் ஊடான சமூகவியல் பார்வை’ என்ற ஒரே நூல் நான்கு தேசிய விருதுகளைப் பெற்றுள்ளமை சிறப்பம்சமாகும். கலாசார அமைச்சும் கலாசார திணைக்களமும் இணைந்து வழங்கிய தொலைக்காட்சி ஆய்வு நூலுக்கான தேசிய விருது, இலங்கை இலக்கியப் பேரவை வழங்கிய ஆய்வு நூலுக்கான விருது, கிழக்கு மாகாண கலாசார அமைச்சு வழங்கிய ஆய்வு நூலுக்கான சாகித்திய விருது, தேசிய நூலக மற்றும் ஆவணவாக்கல் சேவைகள் சபையின் வெளியீட்டுக்கான தரம் வாய்ந்த நூல் பரிசு என்பவை கிடைக்கப்பெற்றன.

இவரால் கதை, கதை வசனம் எழுதப்பட்டு இலங்கை தேசிய தொலைக்காட்சியினரால் தயாரிக்கப்பட்ட ‘புதுமைப்பெண்’ என்ற தொலைக்காட்சி நாடகத்திற்கு 2012ஆம் ஆண்டுக்கான சிறந்த தொலைக்காட்சி நாடகம் என்ற விருது கிடைக்கப் பெற்றுள்ளது. 

இவரது பிரதியாக்கத்தில் இலங்கை தேசிய தொலைக்காட்சியினரால் தயாரிக்கப்பட்ட ‘வீதியும் வீடும்’ என்ற விவரண நிகழ்ச்சிக்காண தேசிய விருது 2007 ஆம் ஆண்டு கிடைத்தது.

தேசிய மட்டத்திலான பங்களிப்பு

இலங்கை தொலைக்காட்சித் துறையில் காத்திரமான பல பங்களிப்புகளை வழங்கிவரும் இவரது பல எழுத்தாக்கங்கள் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளாகவும் தயாரிக்கப்பட்டுள்ளன. குறிப்பாக 2012 ஆம் ஆண்டு முதல் இன்று வரை கடந்த ஏழு வருடங்களாக இலங்கை தேசிய தொலைக்காட்சியில் தயாரிக்கப்பட்டு வரும் ‘இப்படிக்கு சட்டம்’ என்ற சமூகம் சார் சட்ட நிகழ்ச்சிக்கான ஆராய்ச்சிப் பிரதிகளை எழுதி வருவதோடு குறித்த நிகழ்ச்சிக்கான ஆலோசகராகவும் விளங்கி வருகிறார்.

இலங்கை ஊடக அமைச்சின் தகவல் திணைக்களத்தின் வெளியீடான ‘திங்கள்’ சஞ்சிகை, தேசிய தொலைக்காட்சியின் ‘செலலிஹினி வத’, கலாசார அமைச்சின் ‘ரூபவாஹினி சமீக்சா’ மற்றும் ‘இலக்கியம்’, பெண்கள் கல்வி ஆய்வு நிறுவனத்தின் ‘நிவேதினி’ போன்ற சஞ்சிகைகளில் எழுதி வருகிறார்.

இலங்கையின் தேசிய தமிழ் பத்திரிகைகளான வீரகேசரி, தினகரன், தினக்குரல் போன்ற பத்திரிகைகளில் சமூகம் சார்ந்த பல கட்டுரைகளை எழுதிவரும் இவர் எக்ஸ்பிரஸ் நியூஸ் பேப்பர் லிமிட்டட்டின் ‘கேசரி இயர் வுக் - 2011’ என்ற தகவல் களஞ்சியத்திற்காக  இலங்கையில் தொலைக்காட்சி வரலாறு என்ற பகுதியை எழுதினார்.    

தேசிய மட்டத்திலான பல்வேறுபட்ட நிறுவனங்களுக்கும் தனது பங்களிப்பை செய்து வருகிறார். குறிப்பாக, இலங்கை தகவல் திணைக்களத்தின் ‘திங்கள்’ சஞ்சிகையின் ஆலோசகர், தகவல் திணைக்களத்தின் ‘தகவல் அறியும் உரிமைச் சட்ட’ வளவாளர், இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் வளவாளர், கூட்டுறவுக் கல்லூரியின் வளவாளர், கிருசி வெளியீட்டகத்தின் ஆலோசகர் என பல பங்களிப்புகளை செய்து வருகிறார்.

தேசிய மட்டத்திலான ஊடகம் சார் பங்களிப்பினை செய்து வருகிறார். குறிப்பாக இலங்கை தேசிய தொலைக்காட்சியின் ‘இப்படிக்கு சட்டம்’ என்ற வாராந்த சமூக நிகழ்ச்சிக்கான ஆலோசகராக கடந்த ஏழு வருடங்களாக பணியாற்றி வரும் இவர் அதற்கான ஆராய்ச்சிப் பிரதிகளையும் எழுதி வருகிறார். ‘எமது பூமி’ என்ற சமூகம் சார் விவரண நிகழ்ச்சிக்கான இணைப்பாளராகவும் கடமையாற்றியுள்ளார். ‘தடம்’ என்ற சமூக சஞ்சிகை நிகழ்ச்சிக்கான ஆலோசகராக பணியாற்றியுள்ளார். ‘விடியல்’ என்ற விவரண நிகழ்ச்சிக்கான பிரதிகளையும் எழுதியுள்ளார்.       

மேற்கோள்கள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=எம்._பகீரதி&oldid=3035263" இலிருந்து மீள்விக்கப்பட்டது