தமிழ்நதி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
தமிழ்நதி (கலைவாணி இராஜகுமாரன்)
Tamilnathy.JPG
பிறப்புதிருகோணமலை
தேசியம்இலங்கைத் தமிழர்
கல்வியாழ்ப்பாணப் பல்கலைக்கழகம்
அறியப்படுவதுஈழத்து எழுத்தாளர்
வலைத்தளம்
http://tamilnathy.blogspot.com/

கலைவாணி என்ற இயற்பெயர் கொண்ட தமிழ்நதி, ஈழத்தின் திருகோணமலையைப் பிறப்பிடமாகக் கொண்ட ஈழத்து தமிழ் பெண்எழுத்தாளர். யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் கலைத்துறையில் பட்டம் பெற்றவர். ஈழத்தின் அரசியல் சிக்கல் காரணமாக 1992இல் கனடாவுக்குப் புலம்பெயர்ந்தார். 1996ஆம் ஆண்டிலிருந்து சிறுகதை, கவிதைகள், கட்டுரைகள் எழுதி வருகிறார். சில பாடல்களும் எழுதியுள்ளார். ஓரிடத்தில் தரியாது, ரொறன்ரோ-தமிழகம்-ஈழம் என மூன்று இடங்களிலும் விரும்பி வாழ்ந்து வருகிறார்.

வெளிவந்த நூல்கள்[தொகு]

 • நந்தகுமாரனுக்கு மாதங்கி எழுதியது (சிறுகதைகள்)
 • சூரியன் தனித்தலையும் பகல் (கவிதைகள், ஓகஸ்ட் 2007, பனிக்குடம் பதிப்பகம்)[1]
 • இரவுகளில் பொழியும் துயரப்பனி (கவிதைகள்)[2]
 • கானல் வரி (குறுநாவல்)[3]
 • ஈழம்: தேவதைகளும் கைவிட்ட தேசம் (கட்டுரைகள்)[4][5]
 • பார்த்தீனியம் (நாவல், 2016)[6]

வெளி இணைப்புகள்[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

 1. தேவமைந்தன் (19 பிப்ரவரி 2010). "சூரியன் தனித்தலையும் பகல்: தமிழ்நதியின் கவிதைகள்". கீற்று. பார்த்த நாள் 22 மே 2016.
 2. ச. விசயலட்சுமி (19 மார்ச் 2010). "ஈரவாசனையில் துடிக்கும் துயர்". கீற்று. பார்த்த நாள் 22 மே 2016.
 3. "கானல் வரி - Kanal Vari". நூல் உலகம். பார்த்த நாள் 22 மே 2016.
 4. "ஈழம்: தேவதைகளும் கைவிட்ட தேசம்". காலச்சுவடு பதிப்பகம். பார்த்த நாள் 22 மே 2016.[தொடர்பிழந்த இணைப்பு]
 5. டி. அருள் எழிலன். "என்ன எழுதினாங்க?". குங்குமம். http://www.kungumam.co.in/Articalinnerdetail.aspx?id=643&id1=4&issue=20110103. பார்த்த நாள்: 22 மே 2016. 
 6. "சென்னை புத்தக கண்காட்சி". தினமணி (9 சூன் 2016). பார்த்த நாள் 10 சூன் 2016.
"https://ta.wikipedia.org/w/index.php?title=தமிழ்நதி&oldid=3215375" இருந்து மீள்விக்கப்பட்டது