லீனா மணிமேகலை
லீனா மணிமேகலை (Leena Manimekalai) தமிழ்க் கவிஞர், ஆவண நிகழ்படக் கலைஞர், சமூகச் செயற்பாட்டாளர் போன்ற பன்முகங்களுடன் அறியப்படுகிறார். பெண்கள் உரிமைகள், பாலியல், சமூக ஒடுக்குமுறைகள், ஈழப் போராட்டம் உட்பட்டன இவரது கவிதைகளின் கருப்பொருள்களாக அமைகின்றன.[1] இவர் தமிழ்நாட்டின் விருதுநகர் மாவட்டம், வத்திராயிருப்பு ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள மகாராஜபுரம் எனும் கிராமத்தில் பிறந்தவர். 'மாடத்தி, 'செங்கடல்' போன்ற இவர் இயக்கிய திரைப்படங்கள் பன்னாட்டு கவனம் பெற்றிருக்கின்றன. பன்னாட்டு திரைப்பட விழாக்களிலும் இவரது படங்கள் திரையிடப்பட்டுள்ளன.
சர்ச்சைகள்
[தொகு]இவர் சமீபத்தில் தயாரித்து, இயக்கி, நடித்துள்ள காளி எனும் ஆவணப்படத்தின் சுவரொட்டியில், காளி சிகிரெட் புகைப்பிடிப்பதும் போன்றும், கையில் எல்ஜிபிடியினரின் கொடி ஏந்திவாறும் காட்சிப்படுத்தியதால், இவர் மீது இந்தியாவில் பல நீதிமன்றங்களில் இந்து சமய அவமதிப்பு வழக்கு தொடர்ந்துள்ளனர்.[2][3][4] இதற்கு தான் அஞ்சவில்லை என லீனா மணிமேகலை பதில் அளித்துள்ளார்.[5]
இயக்கிய ஆவண நிகழ்படங்கள்
[தொகு]- தேவதைகள் (ஆவண நிகழ்படம்)[6]
- பெண்ணாடி[7]
- மாத்தம்மா[8]
- பறை (ஆவண நிகழ்படம்)
- பலிபீடம் (ஆவண நிகழ்படம்)
- தீர்ந்து போயிருந்த காதல்
- காளி
- White Van Stories (ஆவண நிகழ்படம்) - 2015
- Is it too much to ask (ஆவண நிகழ்படம்) - 2017
இயக்கிய திரைப்படங்கள்
[தொகு]- செங்கடல் (திரைப்படம்) - 2011
- மாடத்தி (திரைப்படம்) - 2019
இவரது நூல்கள்
[தொகு]- ஒற்றையிலையென - 2003
- உலகின் அழகிய முதல் பெண் - 2009
- பரத்தையருள் ராணி - 2011
- அந்தரக்கன்னி - 2012
- சிச்சிலி - 2016
மேற்கோள்கள்
[தொகு]- ↑ Leena Manimekalai, Biography
- ↑ ""செய்வதற்கும் சாவதற்கும் இடையில் கலை ஊசலாடிக் கொண்டிருக்கிறது" - லீனா மணிமேகலை". BBC News தமிழ். பார்க்கப்பட்ட நாள் 2022-09-04.
- ↑ சிகரெட் புகைக்கும் காளி: பெண் சினிமா இயக்குனரின் கொடூர சிந்தனை: ஹிந்துக்கள் கொதிப்பு
- ↑ After Kaali poster sparks outrage online, filmmaker says ‘use #loveyouleenamanimekalai’
- ↑ காளி பட சுவரொட்டிக்கு லீனா மணிமேகலை பதில்
- ↑ "ஆவணப்பட ஆளுமைகள் - 1 நேர்காணல் - தேவதை ஆவணப்படத்தை முன்வைத்து ஆவணப்பட இயக்குனர் லீனா மணிமேகலையுடன்". பேசா மொழி. https://pesaamozhi.com/article/%E0%AE%86%E0%AE%B5%E0%AE%A3%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F-%E0%AE%86%E0%AE%B3%E0%AF%81%E0%AE%AE%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D---1--%E0%AE%A8%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%B2%E0%AF%8D---%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%86%E0%AE%B5%E0%AE%A3%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%86%E0%AE%B5%E0%AE%A3%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F-%E0%AE%87%E0%AE%AF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%A9%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%B2%E0%AF%80%E0%AE%A9%E0%AE%BE-%E0%AE%AE%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%87%E0%AE%95%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AF%81%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D. பார்த்த நாள்: 4 September 2022.
- ↑ "10% off – பெண்ணாடி – Pennaadi – லீனா மணிமேகலை – கனவுப்பட்டறை – Kanavuppattarai" (in அமெரிக்க ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2022-09-04.
- ↑ "லீனாவின் ஆவணப்படங்கள் – மாத்தம்மா, தேவதைகள்". பேசா மொழி. https://www.pesaamozhi.com/article/%E0%AE%B2%E0%AF%80%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%B5%E0%AE%A3%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E2%80%93-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%BE,-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D. பார்த்த நாள்: 4 September 2022.