வேதா இலங்காதிலகம்
தோற்றம்
வேதா இலங்காதிலகம் இலங்கையைச் சேர்ந்த எழுத்தாளர். கோப்பாய் எனும் ஊரில் பிறந்த வேதா, இலங்கையின் களுத்துறை மாவட்டத் தேயிலை, ரப்பர் தோட்ட நிர்வாகியான இலங்காதிலகம் என்பவரை வாழ்க்கைத் துணைவராக ஏற்றுக் கொண்டார். புலம்பெயெர்ந்து 1986-ல் டென்மார்க் நாட்டிற்குச் சென்ற கணவரைத் தொடர்ந்து 1987-ல் இவரும் தன் மகன், மகள் ஆகியோருடன் டென்மார்க் சென்றார். அங்கு டேனிய மொழியைக் கற்று பாலர் பள்ளியில் ஆசிரியராகப் பணியாற்றினார்.
தந்தை நகுலேசுவரர் ஊக்குவிப்பால் 1976-ல் இலங்கை வானொலிக்கு கவிதை எழுதத் துவங்கிய இவர் சிறு சஞ்சிகைகள், ஐரோப்பியத் தமிழ் சஞ்சிகைகள், மற்றும் முத்துக்கமலம் போன்ற சில தமிழ் இணைய இதழ்களிலும் எழுதி வருகிறார்.
வெளியான நூல்கள்
[தொகு]- வேதாவின் கவிதைகள் - கவிதைகள் (2003)
- குழந்தைகள் இளையோர் சிறக்க... - மொழிபெயர்ப்புக் கட்டுரை நூல் (2004)
- உணர்வுப் பூக்கள் - வாழ்வியல் கவிதைகள் (2007) (இந்நூல் இவர் கணவருடன் இணைந்து செய்யப்பட்ட நூல்)
- பெற்றோரியலில் சிற்றலைகள் - (2018) - சிறுகட்டுரைகள் பிள்ளை வளர்ப்பு, இளையோர் பற்றியதும் + வேதாவின் ஆத்திசூடி +பெற்றோர் மாட்சி பற்றிய மொழிகளடங்கிய நூல்
- குறள் தாழிசை - (2018) (திவான்பகதூர் பாவாந்தபிள்ளையின் யாப்பருங்கல விருத்தியுரையின்படிஇரண்டிரண்டாய் ஈற்றடி குறைந்த இஃது) கவிதை மொழியில் 23 அங்கங்கள் குறள் + வேதாவின் மொழிகள் + 25 சிறுவர் பாடல்கள் அடங்கிய நூல்.
- மனக்கடல் வலம்புரிகள். - ஆசிரியர் வேதா .இலங்காதிலகம். இவரது 6வது கவிதை நூல். ஜீவநதியின் 148 வெளியீடாக 2020ம் ஆண்டு வைகாசி மாதம் வெளிவந்தது. 54 சாதாரண கவிதைகளும் - இயற்கையைப் பற்றிய 10 கவிதைகளும் - தமிழ்மொழி பற்றிய 10 கவிதைகளுமாக மொத்தம் 74 கவிதைகளும் 129 பக்கங்களுடன் உள்ளது. ந.கிரிதரன் பதிவு.கொம் ஆசிரியர் முன்னுரையும் - சிட்னி உதயசூரியன் காலாண்டிதழ் தலைவர் என். ஜி.இரத்தினம் அவர்கள் வாழ்த்துரையும் ஜீவநதி ஆசிரியர் க. பரணீதரன் பின் அட்டைக் குறிப்புடனும் வெளியானது.
- சான்றிதழ்க் கவியதிகாரம் - 1 ஆசிரியர் வேதா. இலங்காதிலகம். இவரின் ஏழாவது நூல். முகநூலில் குழுக்களாக கவிதைப் போட்டிகளில் வென்ற சான்றிதழும் விருதுகள் பட்டங்களும் ஆவணப்படுத்தும் நூல் இது. கணனித்துறைப் பேராசிரியர் திருமதி மேகலா. இராமமூர்த்தி. புளோரிடா பல்தொழில் நுட்பப் பல்கலைக்கழகம் அமெரிக்கா அணிந்துரையும் - தென்மார்க் பிரபல எழுத்தாளர் திரு.வ.ஜீவகுமாரன் வாழ்த்துரையும் எழுதியுள்ளனர். முதலில் கண்ணதாசன் சான்றிதழ்க் கவிதைகள் -24ம் பாரதிதாசன் சிறப்புச் சான்றிதழ்க் கவிதைகள் 34ம் விருதுகள் பட்டங்கள் வரிகள் 25 மாக மொத்தம் 83 பதிந்துள்ளேன். 138 பக்கங்களுடன் வைகாசி 2020ல் ஜீவநதியால் பிரசுரமானது.
- சான்றிதழ்க் கவியதிகாரம் - 2 ஆசிரியர் வேதா. இலங்காதிலகம். இவரின் எட்டாவது நூல். முகநூலில் குழுக்களாக கவிதைப் போட்டிகளில் வென்ற சான்றிதழும் விருதுகள் பட்டங்களும் ஆவணப்படுத்தும் நூல் இது. இந்நூலுக்கு பொன்மலை திருச்சியில் பிறந்து வளர்ந்த கீதா. மதிவாணன் அணிந்துரை எழுதியுள்ளார்.சென்னையில் இருந்து பின் இப்போது குடும்பமாக அவுஸ்திரேலியாவில் வசித்து வருகிறார். இவரது 11 நூல்கள் அமேசானில் மின்னூல்களாகவும் - பிரதிலிபியில் 12 இலவச மின்னூல்களும் உள்ளது. அவுஸ்திரேலிய எஸ்பிஎஸ் தமிழ் வானொலியில் இவரது 25 படைப்புகள் ஒலிபரப்பாகியுள்ளது. கீதமஞ்சரி என்ற வலைத்தளத்தைப் பார்த்தால் இவர் பற்றி அறியலாம். சிட்னியில் நடைபெற்ற சங்கத்தமிழ் மாநாட்டு மலரில் இவர் எழுதிய இலக்கியக் கட்டுரை ஒன்றும் இடம் பெற்றுள்ளது. பறவை கூர்நோக்கலும் இயற்கைசார் புகைப்படங்கள் எடுத்தலும் இவரது பொழுதுபோக்குகள். அடுத்து சுவிஸ் - சரளா விமலராஜா – இந்நூலுக்கு முன்னுரை எழுதியுள்ளார். பிரான்சு பாட்டரசரின் பாவலர் பயிலரங்கத்தில் இலக்கியம் படித்து பாவலர் மணியாகி மரபுக் கவிதை நூல்களாக பல வெளியிட்டுள்ளார். வெண்பாச் சோலை – அகவல் ஆலயம் - சிந்துபாடுவோம் - பனங்காட்டு அந்தாதி – விருத்தமாயிரம் - கல்வெட்டுகள் - சிறுகதை – அரங்கேற்ற நூல் என 12க்கும் மேற்பட்ட படைப்புகளை எழுதி வெளியிட்டுள்ள பிஏ படித்தவர். இது ஒரு ஜீவநதி வெளியீடு(இலங்கை). 172 பக்கங்கள் கொண்டது. 99 கவிதைகள் அடங்கியது. முதலில் 11 பட்டங்கள் - விருதுகள் கவிதைகளும் - பின்னர் கண்ணகி - மணிமேகலை - கம்பர் சான்றிதழ்க் கவிதைகளும் இடம் பெற்றுள்ளது. வெளியீடு 2025
வெளி இணைப்புகள்
[தொகு]- என்னைப் பற்றிய விபரங்கள் கூடுதலாக இங்கு வாசிக்கலாம். https://kovaikkothai.wordpress.com/about/
- முத்துக்கமலம் இணைய இதழில் வெளியிடப்பட்ட வேதா இலங்காதிலகம் குறித்த செய்தி பரணிடப்பட்டது 2010-07-13 at the வந்தவழி இயந்திரம்
- அலைகள் இணைய இதழில் வெளியான வேதா இலங்காதிலகத்துடன் சந்திப்பு - https://kovaikkavi.wordpress.com/2017/02/02/in-allaikal-com-interview/
- இவரது வலைத்தளம்- https://kovaikkothai.wordpress.com/ - http://kovaikkothai.blogspot.com/
- முகநூல் நிலாமுற்றம குழுமம் :- https://kovaikkothai.wordpress.com/2017/11/12/1-%E0%AE%AA%E0%AF%87%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%A8%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%81/