உள்ளடக்கத்துக்குச் செல்

கோப்பாய்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கோப்பாய்
Kopay
கோப்பாயில் அமைந்துள்ள மாவீரர் துயிலும் இல்லம்
கோப்பாயில் அமைந்துள்ள மாவீரர் துயிலும் இல்லம்
நாடுஇலங்கை
மாகாணம்வடக்கு
மாவட்டம்யாழ்ப்பாணம்
பி.செ. பிரிவுவலிகாமம் கிழக்கு

கோப்பாய் (Kopay)[1] யாழ்ப்பாண மாவட்டத்தில் வலிகாமப் பிரிவில் உள்ள கோப்பாய் பிரதேச செயலாளர் பிரிவில் அமைந்துள்ள ஒரு ஊராகும். இது கோப்பாய் பிரதேச செயலாளர் பிரிவின் தலைமை இடமாகவும் உள்ளது. யாழ்ப்பாணம்-பருத்தித்துறை வீதியில் யாழ்ப்பாண நகரில் இருந்து சுமார் 4 மைல்கள் தொலைவில் இவ்வூர் உள்ளது. இவ்வூரின் வடக்கு எல்லையில் நீர்வேலியும், மேற்கு எல்லையில் உரும்பிராயும், தெற்கு எல்லையில் இருபாலையும் உள்ளன. கடலேரி கிழக்கு எல்லையாக அமைந்துள்ளது. மானிப்பாயில் இருந்து தென்மராட்சியில் உள்ள கைதடி என்னும் ஊருக்குக் இவ்வூரினூடாகச் செல்லும் வீதி பருத்தித்துறை வீதியை வெட்டிச் செல்லும் இடம் கோப்பாய்ச் சந்தி என அழைக்கப்படுகின்றது. கோப்பாயின் வணிகப் பகுதி இச் சந்தியை அண்டியே காணப்படுகின்றது.[2][3][4]

மாவீரர் துயிலும் இல்லம்

[தொகு]

கோப்பாயிலுள்ள இராச வீதியில் விடுதலைப் புலிகளின் முதலாவது மாவீரர் துயிலுமில்லம் 1991 ஆம் ஆண்டில் அமைக்கப்பட்டிருந்தது. அதில் முதன்முதலாக மாவீரர் கப்டன் சோலை (இயற்பெயர்: சந்தியாப்பிள்ளை கிறிஸ்ரி கஜேந்திரன்) அவர்களின் வித்துடல், 14 ஜுலை 1991 அன்று விதைக்கப்பட்டது. அத்துடன் நூற்றுக்கணக்கான மாவீரர்களின் வித்துடல்களைக் கொண்ட இத் துயிலுமில்லம் யாழ். மாவட்டத்திலுள்ள மாவீரர் துயிலுமில்லங்களில் மிகப் பிரமாண்டமானதாக இருந்தது. ஆனால், 1995-1996 காலப்பகுதியில் விடுதலைப் புலிகளிடமிருந்து யாழ். குடாநாடு கைப்பற்றப்பட்ட பின்னர் சிறீலங்கா இராணுவத்தினர் கோப்பாய் மாவீரர் துயிலுமில்லம் உட்பட குடாநாட்டிலுள்ள அனைத்து மாவீரர் துயிலுமில்லங்களை அழித்தொழித்தனர். 2002 ஆம் ஆண்டு சமாதான காலத்தில், அழிக்கப்பட்டிருந்த அனைத்து மாவீரர் துயிலுமில்லங்களும் புனரமைக்கப்பட்டிருந்தன. ஆனால், 2009ம் ஆண்டு போர் முடிந்த பின்னர், கோப்பாய் மாவீரர் துயிலுமில்லம் உட்பட அனைத்து மாவீரர் துயிலுமில்லங்களும் இராணுவத்தினரால் முற்றுமுழுதாக அழித்தொழிக்கப்பட்டன. அதன்பின்னர், கோப்பாய் மாவீரர் துயிலுமில்ல வளாகத்தில் சிறீலங்கா இராணுவத்தின் 51 ஆவது படைமுகாம் ஒன்று அமைக்கப்பட்டுள்ளது.

ஆலயங்கள்

[தொகு]

அவற்றுள் சில:[5][6]

  • கோப்பாய் பலானை கண்ணகை அம்மன் கோவில்
  • கோப்பாய் ஸ்ரீ சித்திரவேலாயுத சுவாமி கோவில்
  • கோப்பாய் ஸ்ரீ சக்கராழ்வார் ஆலயம்
  • கோப்பாய் மத்தி வெள்ளெருவைப் பிள்ளையார் ஆலயம்
  • கோப்பாய் மத்தி வேளை அடைப்பந்தாளி வைரவர் கோவில்
  • தென்கோவை கற்பகப்பிள்ளையார் ஆலயம் (இருபாலை)
  • மானம்புலம் வீரகத்தி விநாயகர் ஆலயம் (இருபாலை கிழக்கு)
  • கோப்பாய் வீரபத்திரர் கோயில்
  • கோப்பாய் தில்லையம்பலப் பிள்ளையார் ஆலயம்
  • கோப்பாய் தெற்கு அத்தித்தோட்டம் பரமேஸ்வரி அம்பாள் ஆலயம்
  • கோப்பாய் தெற்கு மாந்தோப்பு மாரியம்மன் ஆலயம்
  • வடகோவை ஞானவைரவர் ஆலயம் (கட்டுப்பலானை, கோப்பாய் வடக்கு)
  • கோப்பாய் தெற்கு வீரமாகாளி அம்பாள் ஆலயம் (விளையாட்டரங்க வீதி)
  • கோப்பாய் மத்தி காளி வைரவர் தேவஸ்தானம் (ஆசாரி லேன்)
  • கோப்பாய் மகிழடி உக்கிர வைரவர் ஆலயம்[7]
  • கோப்பாய் தூயமரியன்னை ஆலயம் (கோவையூர் அன்னை)

கல்வி

[தொகு]
  • கோப்பாய் கிறிஸ்தவக் கல்லூரி
  • கோப்பாய் தமிழ் கலவன் பாடசாலை (ஆறுமுக நாவலரால் நிறுவப்பட்ட பழமையான பாடசாலை. இது பொதுவாக அவ்வூர் மக்களால் நாவலர் பாடசாலை என்று அழைக்கப்படுகிறது.)
  • சரவணபவானந்தா வித்தியாலயம்

அறிஞர் பெருமக்கள்

[தொகு]

தொல் பெருமை

[தொகு]

யாழ்ப்பாண அரசுக் காலத் தலைநகரமான நல்லூருக்கு சிறு தொலைவில் உள்ள இவ்வூரில், யாழ்ப்பாண மன்னர் கோட்டையொன்றை அமைத்திருந்தனர்.

இவற்றையும் பார்க்கவும்

[தொகு]

வெளி இணைப்புகள்

[தொகு]

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Kōp-pāy, Neṭṭilip-pāy, Mayilap-pai, Pallup-pai". TamilNet. September 12, 2007. https://tamilnet.com/art.html?catid=98&artid=23242. 
  2. Ragupathy, Ponnampalam (1987). Early Settlements in Jaffna: An Archaeological Survey (in ஆங்கிலம்). Thillimalar Ragupathy. p. 212.
  3. "Kōp-pāy, Neṭṭilip-pāy, Mayilap-pai, Pallup-pai". TamilNet. September 12, 2007. https://tamilnet.com/art.html?catid=98&artid=23242. 
  4. Silva, O. M. Da (1994). Fidalgos in the Kingdom of Jafanapatam, Sri Lanka, 1543–1658: The Portuguese in Jaffna (in ஆங்கிலம்). Harwoods Publishers. pp. 7–9.
  5. "Damage caused to Hindu Kovils (Temples) in the North-East of the Island of Sri Lanka". http://www.tchr.net/religion_temples.htm. 
  6. "Hindu Temples in Srilanka - Elam". https://shaivam.org/temples-of-lord-shiva/hindu-temples-in-srilanka-elam/#gsc.tab=0. 
  7. "கோப்பாய் வரலாறு: பாகம் 1, 2 (1998) பக். 70". https://www.noolaham.org/wiki/index.php/%E0%AE%95%E0%AF%8B%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D_%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%81:_%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D_1,_2. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=கோப்பாய்&oldid=3897372" இலிருந்து மீள்விக்கப்பட்டது