நீர்வேலி
நீர்வேலி | |
மாகாணம் - மாவட்டம் |
வட மாகாணம் - யாழ்ப்பாணம் |
அமைவிடம் | 9°43′26″N 80°05′15″E / 9.724023°N 80.087443°E |
கால வலயம் | இ.சீ.நே (ஒ.ச.நே + 05:30) |
நீர்வேலி இலங்கையின் யாழ்ப்பாண மாவட்டத்தின் மத்திய பகுதியில் அமைந்துள்ள ஒரு கிராமம். இந்த ஊரின் எல்லைகளாக கிழக்கே கைதடியும் வடக்கே சிறுப்பிட்டியும் மேற்கே அச்செழு, ஊரெழு ஆகியவையும் தெற்கே கோப்பாயும் உள்ளன. வாழைச்செய்கை, குடிசைக் கைத்தொழில், சவாரித்திடல், கூட்டுறவுச்சங்கம், வழிபாட்டுத் தலங்கள் போன்றனவற்றுக்குப் பிரபலமான ஊராகும்.
பொருளாதார ஈட்டல்களை பயிர்ச்செய்கை, கால்நடை வளர்ப்பு, சிறுகைத்தொழில், வியாபாரம், அரசாங்க மற்றும் தனியார் துறை உத்தியோகங்கள் போன்றன இங்கு நடைபெறுகின்றன.
பாடசாலைகள்[தொகு]
- அத்தியார் இந்துக் கல்லூரி
- இராமுப்பிள்ளை வித்தியாலயம்
ஆலயங்கள்[தொகு]
- நீர்வேலி கந்தசுவாமி கோயில்
- அரசகேசரிப் பிள்ளையார் கோவில்
- வாய்க்காற்றரவை மூத்தவிநாயகர் ஆலயம்
- நீர்வேலி வடக்கு காமாட்சியம்பாள் ஆலயம்